Wednesday 22 December 2010 | By: Menaga Sathia

மட்டன் பிரியாணி - 2/Mutton Biryani - 2

தே.பொருட்கள்:
பாஸ்மதி - 4 கப்
மட்டன் - 1/2 கிலோ
வெங்காயம் - 2பெரியது
தக்காளி - 2 பெரியது
இஞ்சி பூண்டு விழுது - 2 டேபிள்ஸ்பூன்
தயிர் - 250 கிராம்
பச்சை மிளகாய் - 4
புதினா,கொத்தமல்லி - தலா 1 கட்டு
தேங்காய் - 1/2 மூடி
இஞ்சி - 1 அங்குலத்துண்டு
பிரியாணி மசாலாபொடி - 1 1/2 டேபிள்ஸ்பூன்
நெய் - 2 டேபிள்ஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
ஏலக்காய் - 5
எலுமிச்சை பழம் - 1
உப்பு +எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:பட்டை - 1 துண்டு
கிராம்பு - 3
பிரியாணி இலை - 2
ஏலக்காய் -2
செய்முறை:*மட்டனில் சிறிது உப்பு+125 கிராம் தயிர்+கரம் மசாலா+1 டேபிள்ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து முதல் நாள் இரவே பிசைந்து ப்ரிட்ஜில் வைக்கவும்.
*வெங்காயம்+தக்காளியை நீளவாக்கில் அரியவும்.பச்சை மிளகாயை கீறவும்.
*ஊறவைத்த மட்டனை அப்படியே குக்கரில் நீர் சேர்க்காமல் 3 விசில் வரை வேகவைக்கவும்.
*பாத்திரத்தில் சிறிது நெய் விட்டு அரிசியை லேசாக வதக்கி தனியாக வைக்கவும்.வேகவைத்த மட்டனை தனியாக வைத்து நீரை அளக்கவும்.
*அதே பாத்திரத்தில் நெய்+எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து வெங்காயம்+இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
*தேங்காயைத்துருவி இஞ்சி சேர்த்து அரைத்து 3 கப் அளவில் பால் எடுக்கவும்.அரிசியை 10 நிமிடம் ஊறவைத்து கழுவவும்.
*வதங்கியதும் தக்காளி+பச்சை மிளகாய்+பிரியாணி மசாலா+புதினா கொத்தமல்லி+மீதமுள்ள தயிர் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.
*வேகவைத்த மட்டனை போட்டு வதக்கவும்.4 கப் அரிசிக்கு 6 கப் அளவு நீர் ஊற்றவும்
*மட்டன் வேகவைத்த நீர் அளந்து ஊற்றவும்+தேங்காய்ப்பால்+தேவைப்பட்டால் நீர் ஊற்றி கொதிக்கவிடவும்.
*கொதிக்கும் போது வறுத்த அரிசியைப் போட்டு உப்பு+எலுமிச்சை பழத்தை பிழிந்து ஊற்றவும்.
*தண்ணீர் சுண்டி வரும் போது 190°C டிகிரி முற்சூடு செய்த அவனில் 20 நிமிடம் வைத்தெடுக்கவும்.
*ஏலக்காயை பொடிசெய்து பிரியாணியில் தூவி கிளறி பரிமாறவும்.
Saturday 11 December 2010 | By: Menaga Sathia

சோயா கட்லட்/ Soya Cutlet

தே.பொருட்கள்

சோயா உருண்டைகள் - 20
வாழைக்காய் - 1
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2
சோம்பு - 1 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய புதினா,கொத்தமல்லி - சிறிதளவு
மைதா - 2 டேபிள்ஸ்பூன்
ப்ரெட் க்ரம்ஸ் - பிரட்டுவதற்க்கு
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

செய்முறை

*வாழைக்காயை தோலோடு நீரில் போட்டு வேகவைக்கவும்.பின் தோலெடுத்து மசிக்கவும்.

*சோயா உருண்டைகளை கொதிநீரில் 5 நிமிடம் போட்டு,பின் குளிர்ந்த நீரில் நன்கு அலசி நீரை பிழியவும்.

*அதனை சோம்பு சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்றவும்.

*வாழைக்காய்+அரைத்த சோயா+வெங்காயம்+பச்சை மிளகாய்+புதினா கொத்தமல்லி,உப்பு சேர்த்து கெட்டியாக பிசையவும்.

*மைதாவை நீர் விட்டு கரைக்கவும்.பிசைந்த மாவை சிறு உருண்டையாக எடுத்து விருப்பமான வடிவில் செய்து மைதாவில் நனைத்து,ப்ரெட் க்ரம்ஸில் புரட்டி 15 நிமிடம் ப்ரிட்ஜில் வைக்கவும்.

*பின் எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.கெட்சப்புடன் சாப்பிட நன்றாகயிருக்கும்.

Monday 6 December 2010 | By: Menaga Sathia

தோல்(கறுப்பு)உளுந்து வடை/Black Urad Dhal Vadai

தே.பொருட்கள்
தோல்(கருப்பு)உளுந்து - 1 கப்
வெங்காயம் - 1
காய்ந்த மிளகாய் - 2
சோம்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை,கொத்தமல்லி - சிறிதளவு
இஞ்சி - 1 சிறுதுண்டு
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
செய்முறை
*உளுந்தை 2 மணிநேரம் ஊறவைத்து நீரை வடிக்கட்டவும்.
*உளுந்தை தோலுடனே அதனுடன் உப்பு+இஞ்சி+சோம்பு சேர்த்து நைசாக அரைக்கவும்.
*வெங்காயம்+கறிவேப்பிலை,கொத்தமல்லியை பொடியாக நறுக்கி அரைத்த மாவில் கலந்து வடைகளாக எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
*தோலுடனே அரைப்பதால் வடை நல்ல வாசனையாகவும்,சுவையாகவும் இருக்கும்.
Sunday 5 December 2010 | By: Menaga Sathia

வெஜிடபிள் சட்னி/Vegetable Chutney

தே.பொருட்கள்:வெங்காயம் - 1
தக்காளி - 1
உளுத்தம்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
கேரட் - 1
கத்திரிக்காய் - 2 சிறியது
துருவிய கோஸ் -1/4 கப்
காய்ந்த மிளகாய் - 4
புளி - நெல்லிக்காயளவு
உப்பு +எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன்
பெருங்காயம் - வாசனைக்கு
கறிவேப்பிலை - சிறிது
 
செய்முறை:*வெங்காயம்+கேரட்+தக்காளி+கத்திரிக்காய் இவைகளை அரிந்துக் கொள்ளவும்.உளுத்தம்பருப்பை வெறும் கடாயில் வறுக்கவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு புளி+உப்பு தவிர அனைத்தையும் வதக்கவும்.

*ஆறியதும்இவற்றுடன் உளுத்தம்பருப்பு+புளி+உப்பு சேர்த்து நைசாக அரைத்து தாளித்துக் கொட்டவும்.
Saturday 4 December 2010 | By: Menaga Sathia

பிடித்த பாடல்களும்,விருதும்...

ஆசியா அக்காவும்,ஸாதிகா அக்காவும் பிடித்த பாடல்களை எழுத அழைத்த அவர்களுக்கு நன்றி.பெண் பாடகிகள் மட்டும் பாடிய பாடல் போட வேண்டும் என்பது விதிமுறை.

1. படம்:  உதிரிப்பூக்கள்

பாடகி:  ஜானகி  பாடல்:  அழகிய கண்ணே

ஒரு தாய் குழந்தையுடன் சந்தோஷமாக பாடும் பாடல்..கேட்பதற்க்கு ரொம்ப நல்லாயிருக்கும்.

2. படம்: கேளடி கண்மணி

பாடகி: சுசிலா  பாடல்: கற்பூர பொம்மை ஒன்று...

இறந்து போன தாயை நினைத்து ஏங்கும் ஒரு குழந்தையின் தவிப்பை கூறும் பாடல்...எப்போ இந்த பாடல் கேட்டாலும் கண்கலங்கும் எனக்கு...

3.படம்: கன்னத்தில் முத்தமிட்டால்

பாடகி: சின்மயி  பாடல்: ஒரு தெய்வம் தந்த பூவே..

கேட்பதற்க்கு மெலடியா ரொமப் நல்லாயிருக்கும்.சின்மயி குரலும் ரொமப் பிடிக்கும்.

4.படம்: ஜோடி 

பாடகி: சுஜாதா 

பாடல்: ஒரு பொய்யாவது சொல் கண்ணே
என் காதல் நீதான் என்று
அந்த சொல்லில் உயிர் வாழ்கின்றேன்

காதலுக்காக ஏங்கும் காதலனின் கவிதையை காதலி பாடும் பாடல்...

5.படம்: வள்ளி

பாடகி: ஸ்வர்ணலதா  பாடல்: என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்..

ஸ்வர்ணலதாவின் குரலில் இந்த பாடல் கேட்க மிக அருமையாக இருக்கும்..

6.படம்: சிப்பிக்குள் முத்து

பாடகி: சைலஜா  பாடல்: வரம் தந்த சாமிக்கு

ஒரு தாய் தன் குழந்தையை தாலாட்டி சீராட்டி பாடும் பாடல்...

7.படம்: நினைத்தேன் வந்தாய்

பாடகி: அனுராதா ஸ்ரீராம்,சித்ரா

பாடல்: மல்லிகையே மல்லிகையே மாலையிடும் மன்னவன் யார்,சொல்லு நீ
                தாமரையே தாமரையே காதலிக்கும் காதலன் யார் சொல்லு நீ...

அக்கா,தங்கை இருவரும் வருங்கால கணவரை நினைத்து பாடும் பாடல்...

8.படம்: சிந்து பைரவி

பாடகி: சித்ரா  பாடல்: நானொரு சிந்து ...

இவர்தான் தன் தாய் என்று தெரிந்தும் அம்மா என்று கூப்பிட குடியாத ஏக்கத்தில் நாயகி பாடும் பாடல்..

9.படம்: பாகபிரிவினை

பாடகி: சுசிலா  பாடல்: தங்கத்திலே ஒரு குறை இருந்தால் தரத்திலே குறை வருமோ...

அருமையான கருத்துள்ள பாடல்..

10.படம்: உள்ளம் கொள்ளை போகுதே

பாடகி: சுஜாதா பாடல்: கவிதைகள் சொல்லவா....

சுஜாதாவின் குரலில் கேட்க நன்றாகயிருக்கும்...

விருப்பமுள்ளவர்கள் தொடரலாம்...
நன்றி மகி!!
நன்றி சௌந்தர்!!
நன்றி காயத்ரி!!
Thursday 2 December 2010 | By: Menaga Sathia

சிக்கன் புலாவ் / Chicken Pulao


தே.பொருட்கள்

பாஸ்மதி - 2 கப்
சிக்கன் - 1/2 கிலோ
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
தேங்காய்ப்பால் - 1 1/2 கப்
புதினா - சிறிதளவு
நெய் - 1/2 டேபிள்ஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
வெங்காயம் - 2
தயிர் - 1/2 கப்
பச்சை மிளகாய் - 4
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
ஏலக்காய்த்தூள்+ஜாதிக்காய்த்தூள்  - தலா1/4 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க

பட்டை - 1 துண்டு
கிராம்பு - 4
ஏலக்காய் - 2
பிரியாணி இலை -2
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை

*சிக்கனை சுத்தம் செய்து தயிர்+கரம் மசாலா +இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 1 மணிநேரம் ஊறவைக்கவும்.

*வெங்காயத்தை மெலிதாக நீளவாக்கில் நறுக்கவும்,பச்சை மிளகாயை கீறவும்.

*நறுக்கிய பாதி வெங்காயத்தை எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

*குக்கரில் நெய்+எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப்போட்டு தாளித்து வெங்காயம்+பச்சை மிளகாய்+புதினா+மஞ்சள்தூள்+ஊறவைத்த சிக்கன்  அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.

*பின் அரிசி+உப்பு+தேங்காய்ப்பால்+1 1/2 கப் நீர் சேர்த்து 3 விசில் வரை வேகவிடவும்.

*வெந்ததும் பொரித்த வெங்காயம்+ஏலக்காய்த்தூள்+ஜாதிக்காய்த்தூள் சேர்த்து கிளறி பரிமாறவும்.

Wednesday 1 December 2010 | By: Menaga Sathia

Crepes (Pâte à Crèpes)

                              

தே.பொருட்கள்

மைதா - 1 கப்
பால் - 2 கப்
முட்டை - 2
வெனிலா எசன்ஸ் - 1 டீஸ்பூன்
வெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்+சுடுவதற்கு
உப்பு - 1 சிட்டிகை

செய்முறை
*மிக்ஸியில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடிக்கவும்.அதனுடன் பால்+வெனிலா எசன்ஸ்+மைதா+உப்பு அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு நன்கு அடிக்கவும்.

*பின் பாத்திரத்தில் ஊற்றி 1 டேபிள்ஸ்பூன் உருக்கிய பட்டருடன் அடித்த மாவை கலக்கவும்.

*தோசைக்கல்லில் வெண்ணெய் தடவி 1 கரண்டி மாவை மெலிதாக தோசை போல் ஊற்றி 2பக்கமும் வேகவைத்து எடுக்கவும்.

*இதனை இரண்டாக மடித்து அதன்மேல் உருக்கிய வெண்ணெய் ஊற்றி அதன்மேல் சர்க்கரை தூவி சூடாக சாப்பிட நன்றாகயிருக்கும்.அல்லது Whipped cream with Banana & Strawberry Fruits,ஜாம்,Nutella தடவியும் சாப்பிடலாம்.

பி.கு
முட்டைக்கு பதில் பேக்கிங் சோடா சேர்த்தும் செய்யலாம்.

Sending this recipe to AWED French Event by Priya & DK !!

Monday 29 November 2010 | By: Menaga Sathia

ப்ரெட் புட்டு/ Bread Puttu

தே.பொருட்கள்:
ப்ரெட் ஸ்லைஸ் - 5
சர்க்கரை+தேங்காய்த்துறுவல் - தலா 1 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
நெய் - 2 டீஸ்பூன்
முந்திரி - 5

செய்முறை:
*ப்ரெட்டின் ஓரங்களை கட் செய்து,மிக்ஸியில் ஒரு சுற்று சிற்றி எடுக்கவும்.

*கடாயில் நெய் விட்டு முந்திரியை வறுக்கவும்,பின் உதிர்த்த ப்ரெட்டினை போட்டு லேசாக பிரட்டவும்.

*சர்க்கரை+தேங்காய்த்துறுவல்+ஏலக்காய்த்தூள் சேர்த்து கிளறி உடனே இறக்கவும்.

*இல்லையெனில் புட்டு க்ரிஸ்பியாக இருக்கும்.
Sunday 28 November 2010 | By: Menaga Sathia

கடலைப்பருப்பு சட்னி / Channa Dal Chutney

தே.பொருட்கள்:
தேங்காய்த்துறுவல் - 1/4 கப்
கடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
புளி - 1சிறிய நெல்லிகாயளவு
காய்ந்த மிளகாய் - 3
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன்
பெருங்காயம் - வாசனைக்கு
கறிவேபிலை - சிறிது

செய்முறை:
*வெறும் கடாயில் கடலைப்பருப்பை வாசனை வறும் வரை வறுக்கவும்.

*ஆறியதும் அதனுடன் எண்ணெய் நீங்கலாக அனைத்து பொருட்களும் சேர்த்து மைய அரைக்கவும்.

*பின் தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்துக் கொட்டவும்.இட்லி,தோசைக்கு நன்றாகயிருக்கும்.
Thursday 25 November 2010 | By: Menaga Sathia

செட்டிநாடு மிளகு சிக்கன் வறுவல் / Chettinad Pepper Chicken Fry

தே.பொருட்கள்:சிக்கன் - 1/2 கிலோ
வெங்காயம் - 1
தக்காளி - 1
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்
தனியாத்தூள் - 1/2 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
மிளுகுத்தூள் - 3/4 டேபிள்ஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை -சிறிது
உப்பு +எண்ணெய் = தேவைக்கு

செய்முறை:*வெங்காயம்+தக்காளியை நறுக்கவும்.சிக்கனை சுத்தம் செய்து நீரில்லாமல் வடிகட்டவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு சோம்பு+கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
*பின் வெங்காயம் சேர்த்து பாதி வதங்கியபின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.
*தக்காளி+மஞ்சள்தூள்+தனியாத்தூள் சேர்த்து வதக்கவும்.
*இந்த மசாலா நன்கு எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.
*சிக்கன்+உப்பு சேர்த்து மூடி வேகவிடவும்.சிக்கன் விடும் நீரே போதும்.
*சிக்கன் பாதி வெந்ததும் மிளகுத்தூளை தூவி நன்கு சுருள வதக்கி இறக்கவும்.
Wednesday 24 November 2010 | By: Menaga Sathia

பீன்ஸ் & உருளை சாலட் / Beans & Potato Salad

தே.பொருட்கள்:பீன்ஸ் - 1/4 கிலோ
வேகவைத்த உருளைக்கிழங்கு - 2 பெரியது
வெங்காயம் - 1
பூண்டு - 2 பல்
மிளகுத்தூள் - காரத்திற்கேற்ப
உப்பு+வெண்ணெய் = தேவைக்கு

செய்முறை:*பீன்ஸை மூழ்குமளவு நீர் வைத்து உப்பு கலந்து வேகவைத்து நீரை வடிக்கவும்.
*வெங்காயம்+பூண்டு இவற்றை மிகவும் பொடியாக நறுக்கவும்.

*உருளைக்கிழங்கை பெரிய துண்டுகளாக நறுக்கவும்.

*கடாயில் வெண்ணெய் போட்டு உருகியதும் பூண்டு+வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

*பச்சை வாசனை போனதும் மிளகுத்தூள்+வேகவைத்த பீன்ஸ் சேர்த்து நன்கு வதக்கி இறக்கவும்.தேவையானால் உப்பு சேர்க்கவும்.

*கடாயில் வெண்ணெய் சேர்த்து உருகியதும் துண்டுகளாகிய உருளையை நன்கு சிவக்க வறுக்கவும்.பின் உப்பு+மிளகுத்தூள் கலந்து இறக்கவும்.

*இதனுடன் க்ரில்டு ஐயிட்டம்ஸ்,ரொட்டி சேர்த்து சாப்பிட நன்றாகயிருக்கும்.
Sending this recipe to AWED - French Event by Priya & DK.
Tuesday 23 November 2010 | By: Menaga Sathia

பாதாம் சூப் / Almond Soup

கீதா பாலகிருஷ்ணன் அவர்களின் குறிப்பை புத்தகத்தில் பார்த்து செய்தது.

பாதாம் பருப்பில் நிறைய புரதசத்து,நார்ச்சத்து,வைட்டமின் மற்றும் மினரல் சத்துக்கள் நிறைய இருக்கு.ஒமேகா3,6 கொழுப்பு சத்து நிறைந்தது.இந்த கொழுப்பு சத்தின் மூலம் கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்க வல்லது.ரத்த ஓட்டத்தை சீர்படுத்தவும்,எலும்பை வலுப்படுத்தவும் சிறந்தது.தோலுக்கும் மிக நல்லது.இதயத்திற்க்கு மிகவும் நல்லது.

தே.பொருட்கள்:பாதாம் - 50 கிராம்
பால் - 1 கப்
வெள்ளை மிளகுத்தூள் - 1/4 டீஸ்பூன்
குரூட்டன்ஸ் - சிறிது
காய்கறி வேகவைத்த நீர் - 1/2 கப்
உப்பு - தேவைக்கு

ஒயிட் சாஸ் செய்யவெண்ணை - 1 டேபிள்ஸ்பூன்
சோளமாவு - 1/2 டேபிள்ஸ்பூன்
மைதா மாவு - 1 டேபிள்ஸ்பூன்
பால் - 1 கப்

செய்முறை:*பாதாம் பருப்புகளை கொதிநீரில் போட்டு சிறிது நேரம் ஊறவைத்தபின் தோலெடுத்து நைசாக அரைக்கவும்.

*கடாயில் வெண்ணெய் விட்டு ,குளிந்த பாலில் கோளமாவு+மைதா மாவு கலவையைக் கரைத்து அதில் சேர்த்து கெட்டியாகிவிடாமல் கிளறிவிட்டுக் கொண்டே இருக்கவும்.

*சற்று கெட்டியானதும் ஒயிட் சாஸ் ரெடி!!

*பாலை கொதிக்கவிட்டு பாதாம் விழுதை சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.

*பாதாம் விழுது பாலில் வெந்த வாசம் வந்ததும் காய்கறி நீர்+ஒயிட் சாஸ்+உப்பு+மிளகுத்தூள் சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும்.

*பரிமாறும் போது குரூட்டன்ஸ் தூவி பருகவும்.சுவையான சூப் ரெடி!!

*1 கப் குடித்தாலே வயிறு நிறைந்துவிடும்.

Monday 22 November 2010 | By: Menaga Sathia

செட்டிநாடு மட்டன் குழம்பு / Chettinad Mutton Kuzhampu

தேனக்காவின் குறிப்பை பார்த்து செய்தது.மிகவும் அருமையாக இருந்தது.
தே.பொருட்கள்:மட்டன் - 1/4 கிலோ
சின்ன வெங்காயம் - 15
பூண்டு - 8
தக்காளி - 1
புளி கரைசல் - 1 கப்
உப்பு +எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:பட்டை - 1 துண்டு
கிராம்பு - 3
பிரியாணி இலை - 2
ஏலக்காய் -2
கறிவேப்பிலை - 1 இனுக்கு

அரைக்க:காய்ந்த மிளகாய் - 10
தனியா - 1 டேபிள்ஸ்பூன்
சோம்பு - 2 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
மிளகு - 10
கசகசா - 1 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் - 2
பூண்டுப்பல் - 1

செய்முறை:*மட்டனை சுத்தம் செய்து சிறிந்தளவு நீரில் வேகவைக்கவும்.பூண்டு+வெங்காயம்+தக்காளி அரிந்து வைக்கவும்.

*அரைக்க கொடுத்துள்ள பொருட்களில் வெங்காயம்,பூண்டை தவிர சிறிது எண்ணெயில் வறுத்து ஆறவைத்து வெங்காயம்+பூண்டு சேர்த்து நைசாக அரைக்கவும்.

*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து வெங்காயம்+பூண்டு+தக்காளி+அரைத்த மசாலா அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கி புளிகரைசல்+உப்பு+வேகவைத்த மட்டன் சேர்த்து கொதிக்கவைக்கவும்.

*தீயை சிம்மில் வைத்து 20 நிமிடம் கழித்து இறக்கவும்.





Sunday 21 November 2010 | By: Menaga Sathia

காரமல் ஆப்பிள்(Caramelized Apple)

தே.பொருட்கள்:

ரெட் ஆப்பிள் - 1
பட்டைத்தூள் - 1/4 டீஸ்பூன்
வெண்ணெய் - 1 டீஸ்பூன்
சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன்

செய்முறை:
*ஆப்பிளை தோல் சீவி மெலிதாக நீளவாக்கில் நறுக்கவும்.

*கடாயில் 1 டேபிள்ஸ்பூன் சர்க்கரைப்போட்டு உருக்கவும்.பிரவுன் கலரில் உருகி வரும் போது வெண்ணெய்+பட்டைத்தூள் சேர்த்து ஆப்பிளை சேர்த்து 2 நிமிடங்கள் கிளறி இறக்கவும்.அதிக நேரம் கிளறினால் ஆப்பிள் வெந்துவிடும்.

*ஆறியதும் மீதமுள்ள 1 டேபிள்ஸ்பூன் சர்க்கரையைத்தூவி பரிமாறவும்.

*மிகவும் அருமையாக இருக்கும் இந்த டெசர்ட்!!
Sending this recipe to AWED - French Event By Priya & Dk

Thursday 18 November 2010 | By: Menaga Sathia

பருப்பு உருண்டைக் குழம்பு/ Paruppu Urundai Khuzhampu

தே.பொருட்கள்:புளிகரைசல் - 2 கப்
சின்ன வெங்காயம் - 10
பூண்டுப்பல் - 5
வடகம் - 3/4 டேபிள்ஸ்பூன்
சாம்பார் பொடி - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு +நல்லெண்ணெய் = தேவைக்கு

உருண்டைக்கு:சென்னா - 1 கப்
துவரம்பருப்பு - 1/2 கப்
காய்ந்த மிளகாய் - 4
சோம்பு - 1 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய வெங்காயம் -1
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு
 
செய்முறை:*சென்னாவை 6 மணிநேஅரமும்,துவரம்பருப்பை 1 மணிநேரமும் ஊறவைத்து உப்பு+காய்ந்த மிளகாய்+சோம்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்தெடுக்கவும்.
*அரைத்த கலவையில் வெங்காயம்+மல்லித்தழை சேர்த்து பிசைந்து உருண்டைகளாக பிடித்து ஆவியில் வேகவைத்தெடுக்கவும்.
*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு வடகம் போட்டு தாளித்து சின்ன வெங்காயம்+பூண்டு சேர்த்து வதக்கி புளிகரைசல்+உப்பு+சாம்பார் பொடி சேர்த்து கொதிக்கவிடவும்.
*நன்கு கொதித்ததும் வேகவைத்த உருண்டைகளை சேர்த்து 10 நிமிடம் கழித்து இறக்கவும்.

Tuesday 16 November 2010 | By: Menaga Sathia

ரவா கிச்சடி/ Rava(Sooji) Kichadi

தே.பொருட்கள்:

ரவை - 1 கப்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
கேரட் - 1
பீன்ஸ் - 10
ப்ரோசன் பட்டாணி - 1 கைப்பிடி
அரிந்த வெங்காயம் - 1
அரிந்த தக்காளி - 1
கீறிய பச்சை மிளகாய் - 2
நசுக்கிய இஞ்சி பூண்டு - 1/2 டேபிள்ஸ்பூன்
நெய் - 1 டேபிள்ஸ்பூன்
நெய்யில் வருத்த முந்திரி - தேவைக்கு
உப்பு + எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:
பிரியாணி இலை - 2
கிராம்பு - 3
பட்டை - 1 துண்டு

செய்முறை :
*ரவையை சிறிது நெய்யில் வறுத்து தனியாக வைக்கவும்.பீன்ஸ்+கேரட் நடுத்தர சைஸில் நறுக்கவும்.

*பாத்திரத்தில் மீதமுள்ள நெய்+எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து வெங்காயம்+பச்சை மிளகாய்+நசுக்கிய இஞ்சி பூண்டு+தக்காளி+மஞ்சள்தூள்+உப்பு+காய்கள் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.

*காய் வேகுவதற்காக 1/2 கப் நீர் விட்டு வேகவிடவும்.இன்னொரு அடுப்பில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்க வைக்கவும்.

*காய்கள் வெந்ததும் வறுத்த ரவையை போட்டு கிளறி கொதிக்கும் நீர் சேர்த்து கிளறவும்.இப்படி செய்வதால் ரவை கட்டி விழாமல் இருக்கும்.

*ரவை நன்கு வெந்ததும் வறுத்த முந்திரி சேர்த்து சட்னியுடன் பரிமாறவும்.
Monday 15 November 2010 | By: Menaga Sathia

பிரவுன் ரைஸ் வாங்கிபாத் /Brown Rice Vanghibath

தே.பொருட்கள்:

உதிராக வடித்த பிரவுன் ரைஸ் - 1 கப்
பொடியாக அரிந்த கத்திரிக்காய் - 1 கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1 பெரியது
பட்டர் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

வறுத்து பொடிக்க:

தனியா - 1 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
காய்ந்த தேங்காய்த்துறுவல் - 2 டேபிள்ஸ்பூன்
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
பட்டை - 1 சிறுதுண்டு
கிராம்பு - 2
சீரகம் - 1/4 டீஸ்பூன்

தாளிக்க:
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/4டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
 
செய்முறை :
*வறுத்து பொடிக்க கொடுத்துள்ளவைகளை வெறும் கடாயில் வறுத்து நைசாக பொடிக்கவும்.

*கடாயில் பட்டர்+எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப்போட்டு தாளித்து வெங்காயம்+கத்திரிக்காயை நன்கு வதக்கவும்.

*கத்திரிக்காயை எண்ணெயிலேயே வதக்கவும் வெந்ததும் பொடித்த பொடி+உப்பு+வடித்த சாதம் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.
Sunday 14 November 2010 | By: Menaga Sathia

உருளைக்கிழங்கு பிரியாணி/Potato Biryani

தே.பொருட்கள்:
பாஸ்மதி - 2 கப்
உருளைக்கிழங்கு - 2 பெரியது
நறுக்கிய வெங்காயம் - 1
நறுக்கிய தக்காளி - 1
இஞ்சி பூண்டு விழுது - 1/2 டேபிள்ஸ்பூன்
பிரியாணி மசாலா பொடி - 1 டேபிள்ஸ்பூன்
புதினா,கொத்தமல்லி - 1 கைப்பிடியளவு
நெய் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:பட்டை - 1 துண்டு
கிராம்பு - 3
பிரியாணி இலை - 2
ஏலக்காய் -2
 
செய்முறை:
*உருளைக்கிழங்கை தோல்சீவி நடுத்தர துண்டுகளாக நறுக்கவும்.அரிசியை கழுவி 10 நிமிடம் ஊறவைக்கவும்.

*குக்கரில் நெய்+எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ளவைகளைப்போட்டு தாளித்து வெங்காயம்+தக்காளி+இஞ்சி பூண்டு விழுது+பிரியாணி மசாலா பொடி+புதினா கொத்தமல்லி இவைகளை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.

*வதங்கியதும் உருளைக்கிழங்கு+உப்பு+அரிசியைப் போட்டு வதக்கி 3 கப் நீர் விட்டு 3 விசில் வரை வேக வைத்தெடுக்கவும்.

*ராய்த்தாவுடன் பரிமாறவும்.காய் இல்லையெனில் அவசரத்திற்க்கு இந்த பிரியாணியை செய்துவிடலாம்.
01 09 10