Sunday 28 February 2010 | By: Menaga Sathia

பார்லி உப்புமா / Barley Upma

தே.பொருட்கள்:

பார்லி குருணை - 1 கப்
ரவை - 1/2 கப்
நீளவாக்கில் அரிந்த வெங்காயம் - 1
பொடியாக அரிந்த தக்காளி - 1
கீறிய பச்சை மிளகாய் - 3
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
நெய் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
 
தாளிக்க:கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
 
செய்முறை :

*பார்லி+ரவை சிறிது நெய் விட்டு வறுக்கவும்
 
* கடாயில் மீதமுள்ள நெய்+எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து வெங்காயம்+தக்காளி+பச்சை மிளகாய்+உப்பு+மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.

*வதங்கியதும் 3 கப் நீர் விட்டு கொதிக்கவிடவும்.

*நீர் கொதித்ததும் பார்லி+ரவையை கொட்டி கிளறவும்.

*நன்கு வெந்து பொலபொலவென வரும் போது இறக்கவும்.
 
பி.கு:
வெறும் பார்லியில் மட்டும் உப்புமா செய்தால் நன்றாகயிருக்காது.இதனுடன் ரவை அல்லது அவல் சேர்த்து செய்தால் தான் நன்றாகயிருக்கும்.

24 பேர் ருசி பார்த்தவர்கள்:

Nithu Bala said...

suvayana uppuma..migavum arumai..

மதுரை சரவணன் said...

உப்புமா பிரியரான எனக்கு அருமையான படைப்பு. நன்றி.

Trendsetters said...

Nice pic...very healthy

ஜெய்லானி said...

fine

Thenammai Lakshmanan said...

barley il kuda upmava ...arumai Menaka... thanks

Gomathy S said...

super upma..

புலவன் புலிகேசி said...

மேனகா நேத்து நீங்க சொல்லியிருந்த முட்டைக் குழம்பு செய்தோம் எங்கள் பேச்சிலர் அறையில். நன்றாக இருந்தது. நன்றி

பித்தனின் வாக்கு said...

நல்லாயிருக்குங்க, ஒரு சின்ன சந்தோகம் பார்லி கொழ கொழன்னு ஆகாதா?(படத்தில் கெட்டியாயிருக்கு). நல்ல டிஷ். டிரை பண்றேம்.

நட்புடன் ஜமால் said...

பி.கு படிக்காட்டி போச்சா

Chitra said...

Uppuma in the picture looks yummy. Thank you for sharing the recipe.

Priya said...

Thanks for your healthy recipe!

Unknown said...

superb menaga thanks....

Padma said...

Very healthy upma.

Asiya Omar said...

உப்புமா மணி மணியாக பார்க்க அழகாக இருக்கு.

தெய்வசுகந்தி said...

கலக்க்றீங்க மேனகா

Nathanjagk said...

//இதனுடன் ரவை அல்லது அவல் சேர்த்து செய்தால் தான் நன்றாகயிருக்கும்//
இது ​போன்ற கிச்சன் சீக்ரட்ஸ்தான் SASHIGA-வின் ஸ்பெஷல்..!!
நல்லாயிருக்கு!!

சசிகுமார் said...

பிரமாதம் பயனுள்ள பதிவு உங்கள் புகழ் மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Jaleela Kamal said...

பார்லி உப்புமா ரொம்ப நல்ல இருக்கு மேனகா

Priya Suresh said...

Arumaiyana kuripu...such a healthy upma..

Menaga Sathia said...

அனைவருடைய அன்பான பின்னுட்டத்திற்க்கு மிக்க நன்றி!!

Menaga Sathia said...

//ஒரு சின்ன சந்தோகம் பார்லி கொழ கொழன்னு ஆகாதா?(படத்தில் கெட்டியாயிருக்கு). நல்ல டிஷ். டிரை பண்றேம்.//

சுதா அண்ணா அதற்க்குதான் பார்லிகூட ரவை அல்லது அவல் சேர்த்து செய்கிறோம்.அப்போ பார்லியின் கொழகொழப்பு தெரியாது.

Shubha Ravikoti said...

I cant read tamil... but ur recipe looks so interesting... is there a way i can translate this page in english? please guide panungo

Menaga Sathia said...

Thxs subha!! yes u can translate this page with google translator or this site http://www.skandagurunatha.org/deities/siva/thirumurai/tamil_to_english_converter.asp

Anonymous said...

indru mudalmuraiyaga ungaludaiya blogai paarkum vaappu kidaithathu. mugavum ubayogamullathavum irukkinrathu. samaiyal kurippugal pondravatrai migavum pramaathum. melum achu seiyum vithathil amaithirunthal migavum outhaviyaga irukkum.
nanri, vanakam

01 09 10