Wednesday 31 March 2010 | By: Menaga Sathia

சோயா மஞ்சூரியன்/ Soya Manchurian

தே.பொருட்கள்:

சோயா உருண்டைகள் - 30
மைதா மாவு - 1 1 /2 டேபிள்ஸ்பூன்
சோளமாவு - 1/2 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1/2 டேபிள்ஸ்பூன்
புட் கலர் - சிறிது
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1 சிறியது
பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் - 1 டேபிள்ஸ்பூன்
பொடியாக நறுக்கிய குடமிளகாய் - 1 டேபிள்ஸ்பூன்
பொடியாக நறுக்கிய பூண்டுப்பல் - 2
சோயாசாஸ் - 1 டீஸ்பூன்
எண்ணெய் - பொரிக்க
உப்பு - தேவைக்கு
 
செய்முறை :

*சோயாவை கொதிக்கும் நீரில் 5 நிமிடம் போட்டு பின் குளிர்ந்த நீரில் நன்கு அலசி நீரை நன்கு பிழிந்துக் கொள்ளவும்.

*அதனுடன் உப்பு+மைதா மாவு+சோளமாவு+இஞ்சி பூண்டு விழுது+புட் கலர்+மிளகாய்த்தூள் அனைத்தும் கலந்து 1/2 மணிநேரம் ஊறவைத்து எண்ணெயில் பொரிக்கவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு பொடியாக நறுக்கிய வெங்காயம்+பூண்டுப்பல்+குடமிளகாய் சேர்த்து வதக்கி பொரித்த சோயா உருண்டைகள்+சோயா சாஸ் சேர்த்து கிளறி வெங்காயத்தாள் தூவி இறக்கவும்.
Tuesday 30 March 2010 | By: Menaga Sathia

ஸ்ட்ராபெர்ரி ஸ்மூத்தீ

தே.பொருட்கள்:

ஸ்ட்ராபெர்ரி பழம் - 8
பால் - 1/2 கப்
வெனிலா (அ) ஸ்ட்ராபெர்ரி ஐஸ்க்ரீம் - 1/2 கப்
தயிர் - 1/2 கப்

செய்முறை:

*ஸ்ட்ராபெர்ரியை பாலுடன் முதலில் ப்ளெண்டரில் அடிக்கவும்.

*பின் தயிர்+ஐஸ்க்ரீம் சேர்த்து அடித்து பருகவும்.

பி.கு:
மேலும் இனிப்பு விரும்புபவர்கள் சர்க்கரை சேர்த்துக்கொள்ளவும்.

Monday 29 March 2010 | By: Menaga Sathia

பூசணிக்காய் சூப்

தே.பொருட்கள்:
மஞ்சள் பூசணிக்காய் துண்டுகள் - 1 கப்
அரிந்த வெங்காயம் - 1
பூண்டுப்பல் - 2
அரிந்த தக்காளி - 1
பட்டர் -1 டேபிள்ஸ்பூன்
ப்ரெட் துண்டுகள் -1/4 கப்
காய் வேகவைத்த நீர் - 1 கப்
மிளகுத்தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
 
செய்முறை :

*பூசணி+வெங்காயம்+பூண்டு+தக்காளி+காய் வேக வைத்த நீர்+1 கப் நீர்+உப்பு+சிறிது பட்டர் சேர்த்து நன்கு வேக வைத்து அரைக்கவும்.

*மீதமுள்ள பட்டரில் ப்ரெட் துண்டுகளை பொரிக்கவும்.

*அரைத்த கலவையில் மிளகுத்தூள் சேர்த்து ப்ரெட் துண்டுகளால் அலங்கரித்து பரிமாறவும்.
Sunday 28 March 2010 | By: Menaga Sathia

வாத்துகறி குழம்பு


வாத்து மிகவும் கொழுப்புதன்மை நிறைந்தது.அதனை தோலுடன் தான் சமைக்கனும்.அப்போதான் நல்லாயிருக்கும்.சமைக்கும் போது எண்ணெய் குறைவாக பயன்படுத்தவும்.
 
தே.பொருட்கள்:

வாத்துகறி - 1 கிலோ
நீளவாக்கில் அரிந்த வெங்காயம் - 2
நீளவாக்கில் அரிந்த தக்காளி - 2
கீறிய பச்சை மிளகாய் - 10
மிளகுத்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
முழுப்பூண்டு - 2
பிரியாணி இலை - 4
புளிக்கரைசல் - 2 கப்
மஞ்சள்தூள் - 1/4 தேக்கரண்டி
உப்பு + எண்ணெய் = தேவைக்கு

அரைக்க:

தேங்காய்த்துறுவல் - 1/4 கப்
வடகம் - 1 டேபிள்ஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
 
செய்முறை :

*வாத்தை மஞ்சள்தூள் சேர்த்து சுத்தம் செய்யவும்.

*புளிகரைசலில் கறி+உரித்த முழுப்பூண்டுபற்கள் + மஞ்சள்தூள் சேர்த்து 1/2 மணிநேரம் ஊறவைக்கவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு வடகத்தை பொரித்து தனியாக வைத்து,அதே எண்ணெயில் தேங்காயையும் பொன்னிறமாக வறுக்கவும்.

*வடகம்+தேங்காய் மைய அரைத்து கடைசியாக சீரகம் சேர்த்து அரைத்தெடுக்கவும்.

*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு பிரியாணி இலைப் போட்டு தாளித்து வெங்காயம்+தக்காளி+பச்சை மிளகாய்+மிளகுத்தூள் என் ஒன்றன் பின் ஒன்றாக வதக்கவும்.

*வதங்கியதும் புளிகரைசலோடு இருக்கும் கறியை ஊற்றி கொதிக்கவிடவும்.கறி வெந்ததும் அரைத்த தேங்காய் விழுதைப் போட்டு 5 நிமிடம் கழித்து இறக்கவும்.

*இந்த குழும்பு புளிப்பாக இருந்தால் தான் நன்றாகயிருக்கும்.அதனால் புளிப்புக்கேத்த மாதிரி புளியை ஊறவைக்கவும்.
Saturday 27 March 2010 | By: Menaga Sathia

இது அவார்டு வாரம்


நிதுபாலா அவர்கள் எனக்கு நிறைய விருதினை கொடுத்து சந்தோஷப்படுத்திருக்காங்க.அவர்களுக்கு என் நன்றி!!


This award comes with a set of rules:
a) I must brag about it.
b) I have to display the badge on my blog and link to the one who tagged me to prove that I didn't tag myself (how pathetic that would be!)
c) Pass the award to other fellow bloggers by visiting their site.

இந்த விருதினை தேனம்மை லக்‌ஷ்மணன்,கீதா ஆச்சல்,ப்ரியா,பவித்ரா,சித்ரா,மாதேவி,அனு,தெய்வசுகந்தி,பவித்ரா (பெங்களூரு),வானதி,மகி,பத்மா,ஷாமா நாகராஜன் இவர்களுக்கு கொடுக்கிறேன்...
Friday 26 March 2010 | By: Menaga Sathia

கத்திரிக்காய் சிப்ஸ்(அவன் செய்முறை)/ Eggplant (Brinjal) Chips

தே.பொருட்கள்:
பெரிய கத்திரிக்காய் - 1
மிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்
ஆம்சூர் பவுடர் - 1 டீஸ்பூன்
அரிசிமாவு - 1/2 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
 
செய்முறை :
*கத்திரிக்காயை வட்டமாக நறுக்கி மேற்கூறிய பொருளில் எண்ணெய் தவிர அனைத்தையும் ஒன்றாக கலந்து 10 நிமிடம் வைக்கவும்.

*அவனை 190 டிகிரிக்கு முற்சூடு செய்து,அவன் டிரேயில் அலுமினியம் பேப்பர் வைத்து எண்ணெய் தடவி கத்திரிக்காய் வைத்து ஆயில் ஸ்ப்ரே செய்யவும்.

*அவனில் 10 நிமிடம் வைத்து மறுபுறம் திருப்பி ஆயில் ஸ்ப்ரே செய்து 10 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.

*சுவையான சிப்ஸ் தயார்!!
Thursday 25 March 2010 | By: Menaga Sathia

முட்டை 65

தே.பொருட்கள்:

வேகவைத்த முட்டை - 4
முட்டை - 1
இஞ்சி பூண்டு விழுது - 1/2 டேபிள்ஸ்பூன்
தயிர் - 1 டீஸ்பூன்
புட்கலர் - 1 சிட்டிகை
மிளகாய்த்தூள் - 3/4 டீஸ்பூன்
ப்ரெட் க்ரம்ஸ் - 1/4 கப்
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - பொரிக்க
 
செய்முறை :
*வேக வைத்த முட்டையை 2 கட் செய்து அதில் உப்பு+கலர்+மிளகாய்த்தூள்+தயிர்+இஞ்சி பூண்டு விழுது அனைத்தையும் கலந்து 1/2 மணி நேரம் ஊறவைக்கவும்.

*முட்டையை உடைத்து நன்கு அடித்து வைக்கவும்.

*மசாலா தடவிய முட்டைகளை ஒவ்வொன்றாக அடித்த முட்டையில் தோய்து ப்ரெட் க்ரம்ப்ஸில் புரட்டி ப்ரிட்ஜில் 1/2 மணிநேரம் வைக்கவும்.

*பின் எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
Wednesday 24 March 2010 | By: Menaga Sathia

நீர்மோர்&பானகம் (ஸ்ரீராமநவமி ஸ்பெஷல்),விருது

இன்று ஸ்ரீராமன் அவதரித்த ராமநவமி.இன்று ஸ்ரீராமஜெயம் சொல்வதும்,எழுதுவதும் மிக நன்று.
நீர்மோர்
தே.பொருட்கள்:
தயிர் - 125 கிராம்
பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை
இஞ்சித்துறுவல் - 1/4 டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை - சிறிது
பச்சைமிளகாய் - 1/2
உப்பு - தேவைக்கு
எலுமிச்சைசாறு - 1 டேபிள்ஸ்பூன்
 
செய்முறை :

*தயிருடன் 1 டம்ளர் நீர் விட்டு நன்கு அடித்துக்கொள்ளவும்.இஞ்சி பச்சைமிளகாய் அரைக்கவும்.
*தயிருடன் உப்பு+எலுமிச்சை சாறு+அரைத்த இஞ்சி,பச்சைமிளகாய்+பெருங்காயத்தூள்+கொத்தமல்லித்தழை கலந்து பரிமாறவும்.
*விருப்பட்டால் இதனுடன் வெள்ளரி,கேரட்,மாங்காய் சேர்க்கலாம்.
பானகம்

தே.பொருட்கள்:
வெல்லம் - 100 கிராம்
எலுமிச்சை சாறு - 1 டேபில்ஸ்பூன்
சுக்குத்தூள்,ஏலக்காய்த்தூள்- தலா 1/4 டீஸ்பூன்
செய்முறை :
*வெல்லத்தை கரைத்து 1 டம்ளர் அளவில் கரைத்து வடிகட்டி மேற்கூறிய அனைத்து பொருட்களும் கலந்து பரிமாறவும்.



பிரியாராஜ்,பவித்ரா,ப்ரியா அவர்கள் இந்த அழகான "Sunshine Award" எனக்கு கொடுத்து சந்தோஷப்படுத்திருக்காங்க.அவர்களுக்கு மிக்க நன்றி!!

To the award winners, please pass this on to your favorite bloggers! Here are the Rules:1. Put the logo on your blog or within your post
2. Pass the award on to 12 bloggers!
3. Link the nominees within your post
4. Let the nominees know they have received this award by commenting on their blog
5. Share the love and link to the person from whom you received this award
இந்த விருதினை மனோ சாமிநாதன்,ஜலிலா,ஆசியா,செந்தமிழ் செல்வி,ஸாதிகா,கவிசிவா,ஹர்ஷினி அம்மா,விஜிசத்யா,தேவி,ரம்யா,மலிக்கா,சுஸ்ரீ கொடுக்கிறேன்.இன்னும் நிறைய பேருக்கு கொடுக்க ஆசை.ஆனால் 12 பேருக்குதான் என்பதால் இத்துடன் முடிக்கிறேன்....
Tuesday 23 March 2010 | By: Menaga Sathia

வல்லாரை கீரை தண்ணிசாறு


இந்த தண்ணிசாறு வாய்ப்புண்ணுக்கு மிகவும் நல்லது.இதே போல் முருங்கைக்கீரை,மணத்தக்காளிக்கீரை மற்றும் அகத்திகீரையிலும் செய்யலாம்.இதனுடன் இறால் சேர்த்தும் செய்யலாம்.

தே.பொருட்கள்:

வல்லாரைகீரை - 1 கட்டு
நீளவாக்கில் அரிந்த வெங்காயம் - 1
பொடியாக அரிந்த தக்காளி - 1
கீறிய பச்சை மிளகாய் - 2
மிளகாய்த்தூள் - 1/2 டேபிள்ஸ்பூன்
புளிகரைசல் - 1/4 கப்
அரிசி கழுவிய தண்ணீர் - 2 கப்
தேங்காய்த்துறுவல் - 1/4 கப்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:
வடகம் - 3/4 டேபிள்ஸ்பூன்

செய்முறை :

*பாத்திரத்தில் கீரை+வெங்காய்ம்+தக்காளி+பச்சை மிளகாய்+மிளகாய்த்தூள்+அரிசி கழுவிய தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.

*நன்கு கொதித்ததும் புளிகரைசலை ஊற்றி கொதிக்கவிடவும்.

*தேங்காயை மைய அரைத்துக்கொண்டு,குழம்பு நன்கு கொதித்ததும் தேங்காய் விழுதை சேர்த்து 5 நிமிடம் கழித்து இறக்கவும்.

*பின் வடகத்தை தாளித்து கொட்டவும்.
 
பி.கு:
அரிசி கழுவிய 3ம் தண்ணீர் எடுத்து செய்யனும்.அதில் ஏராளமான சத்துக்கள் உள்ளது.இறால் சேர்க்கும் போது வெங்காயம்+தக்காளியெல்லாம் வதக்கி கீரை+இறால் சேர்த்து வதக்கி மேற்சொன்னபடி செய்யவேண்டும்.தாளிப்பை கடைசியில்தான் சேர்க்கவும்.அப்போழுதுதான் நல்ல வாசனையாக இருக்கும்.
Monday 22 March 2010 | By: Menaga Sathia

எனக்குப் பிடித்த 10 பின்னூட்டங்கள் (தொடர் பதிவு)

இந்த தொடரை எழுத அழைத்த செல்விம்மாவுக்கு நன்றி!! அனைவருடைய பின்னுட்டமும் எனக்கு ரொம்ப பிடிக்கும்.பின்னுட்டம் கொடுப்பது அவர்களின் ஆர்வத்துக்கு தூண்டுகோலாக அமைகிறது.நான் அவர்களின் பெயரை சொல்ல விரும்பி இந்த பதிவை எழுதுகிறேன்.
 
1. என்னுடைய முதல் பதிவுக்கு பின்னுட்டம் கொடுத்தவர் இக்பால் அவர்கள்.டிப்ஸ் டிப்ஸ் என்ற பதிவுக்காக கொடுத்தவர்

2.ஹர்ஷினி அம்மா என் முதல் இனிப்பு குறிப்புக்கு முதல் பதிவு கொடுத்தவர்.

3. பாயிஷாகாதர் அனைத்து பதிவுகளுக்கும் தவறாமல் பின்னூட்டம் கொடுக்கும் தோழி.

4.நட்புடன் ஜமால்,நவாஸூதீன்,ஷஃபிக்ஸ் இவர்கள் பின்னூட்டங்கள் பிடிக்கும்.

5.ஜலிலாக்கா இவரை அறுசுவை நேயர்கள் அனைவருக்கும் நன்றாகவே தெரியும்.இவரும் தவறாமல் பின்னூட்டம் கொடுத்து ஊக்கமளிப்பவர்.

6. தேனம்மை லக்‌ஷமண் இவர் என்னை அவரின் தோழியாகவும்,தங்கையாகவும் நினைப்பவர்.இவர் டா,மா போட்டு உரிமையுடன் எழுதும் பின்னுட்டம் பிடிக்கும்.

7.சித்ரா,நிதுபாலா,கூல் லஸ்ஸி இவர்கள் இப்போழுதுதான் பாலோவர் ஆனாலும் தவறாமல் அனைத்து பதிவுகளுக்கும் பின்னுட்டம் கொடுப்பவர்கள்.

8.சசிகுமார்,வேலன் அண்ணா,பித்தனின் வாக்கு,குறை ஒன்றும் இல்லை,கக்கு மாணிக்கம்,அண்ணாமலையான்,டவுசர் பாண்டி இவர்களின் நகைச்சுவையான பின்னுட்டம் பிடிக்கும்.
 
9.கீதா ஆச்சல்,சாரு அக்கா,ஸாதிகா அக்கா,ஆசியாக்கா,இவர்களும் என் பதிவிற்க்கு தவறாமல் பின்னூட்டம் கொடுப்பது பிடிக்கும்.
 
10.கோபிநாத்,ப்ரியா,ப்ரியாராஜ் இவர்களின் பின்னூட்டமும் பிடிக்கும்.
 
அப்பாடா எப்படி எழுதுவது என்று யோசித்தே எழுதிட்டேன்.இதுபோல் அவரவர் பதிவுகளுக்கு வந்த பின்னுட்டங்களை சொல்லவும்.இதனை தொடர அழைக்கும் நபர்கள்..
சித்ரா
நாஞ்சில் ப்ரதாப்
ஸாதிகா அக்கா
ப்ரபாகர்
 

சைனீஸ் கேபேஜ் சாம்பார்


இது ஒரு வகை கேபேஜ் வகையை சேர்ந்தது.சைனாவில் அதிகம் பயிரிடப்படுகிறது.Bok choy என்றும் இதற்க்கு பெயர் உண்டு.ப்ரெஞ்சில் இதனை Blette என்று சொல்வார்கள்.

மேலதிக விபரங்களுக்கு இங்கு பார்க்கவும்.
சமைக்கும் போது வெள்ளை தண்டை நீக்கி விட்டு கீரையை மட்டும் அரிந்து சமைக்கவும்.
தே.பொருட்கள்:

பொடியாக அரிந்த சைனீஸ் கேபேஜ் - 1 கப்
துவரம் பருப்பு - 1 கப்
சின்ன வெங்காயம் - 10
பூண்டுப்பல் - 5
அரிந்த தக்காளி - 1
சாம்பார் பொடி - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
புளி கரைசல் - 1/4 கப்
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1டீஸ்பூன்
பெருங்காயம் - வாசனைக்கு

செய்முறை :
*துவரம் பருப்புடன் மஞ்சள்தூள்+பூண்டுப்பல்+பச்சை மிளகாய்+தக்காளி அனைத்தையும் சேர்த்து குழைய வேக வைத்துக் கொள்ளவும்.

* பாத்திரத்தில் தாளிக்க கொடுத்துள்ளவைகளை போட்டு தாளித்து வெங்காயம்+ கேபேஜ்+சாம்பார் பொடி அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கி புளிகரைசலுடன் உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

*கொதித்ததும் வெந்த பருப்பை சேர்த்து 5 நிமிடம் கழித்து இறக்கவும்.

*கீரை சாம்பார் மாதிரி நல்ல சுவையில் இருக்கும் இந்த சாம்பார்.
Sunday 21 March 2010 | By: Menaga Sathia

ப்ருட்ஸ் ஸ்ரீகண்ட்

இது வட இந்தியாவின் பிரபலமான இனிப்பு.
தே.பொருட்கள்:

புளிப்பில்லாத கெட்டித் தயிர் - 250 கிராம்
பொடித்த சர்க்கரை - இனிப்புக்கு தகுந்தவாறு
பழத்துண்டுகள் - 1 கப்
 
செய்முறை :

*முதல்நாள் இரவே தயிரை ஒரு மெல்லிய துணியில் கட்டி தொங்கவிடவும்.காலையில் தண்ணீர் நன்கு வடிந்து கெட்டித் தயிர் கிடைக்கும்.

*அதில் பொடித்த சர்க்கரை போட்டு நன்கு கலக்கவும்.

*சர்க்கரை கரைந்த பின் பழத்துண்டுகளைப் போட்டு ப்ரிட்ஜில் குளிரவைத்து பரிமாறவும்.

பி.கு:
*இதில் நான் சேர்த்திருக்கும் பழங்கள் வாழைப்பழம்,கறுப்பு மற்றும் பச்சை திராட்சை,கிவி பழம்,ஆரஞ்சு பழம்.
இதை நான் சொல்வதைவிட சாப்பிட்டு பார்த்தால் தான் இதன் சுவை தெரியும்.
Friday 19 March 2010 | By: Menaga Sathia

உருளைக்கிழங்கு வறுவல் (அவன் செய்முறை)/ Potato Fry

தே.பொருட்கள்:

உருளைக்கிழங்கு - 4
வரமிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
பொட்டுக்கடலை மாவு - 1/4 கப்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
 
செய்முறை :
*உருளையை தோல்சீவி விரல் நீளத்துண்டுகளாக நறுக்கவும்.

*ஒரு பவுலில் மிளகாய்த்தூள்+உப்பு+எண்ணெய் சேர்த்து ஒன்றாக கலந்து உருளைக்கிழங்கை அதில் போட்டு பிரட்டவும்.

*பின் பொட்டுக்கடலை மாவில் பிரட்டவும்.

*அவன் டிரெயில் ஆயில் ஸ்ப்ரே செய்து உருளையை வைக்கவும்.

*அவனை 270 டிகிரியில் 20 நிமிடம் டைம் செட் செய்து முற்சூடு செய்து அவன் டிரேயை அதில் வைக்கவும்.

*10 நிமிடம் வெந்ததும் திருப்பிவிட்டு ஆயில் ஸ்ப்ரே செய்யவும்.
*இருபுறமும் வெந்ததும் எடுக்கவும்.மொறுமொறுன்னு ரொம்ப நல்லாயிருக்கும்.

Thursday 18 March 2010 | By: Menaga Sathia

வெஜ் குருமா/Veg Kurma

தே.பொருட்கள்:

வேக வைத்த காய்கறிகள்(பீன்ஸ்,கேரட்,பட்டாணி)- 3 கப்
நீளவாக்கில் அரிந்த வெங்காயம் - 1 பெரியது
பொடியாக அரிந்த தக்காளி - 1
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் - 10
புதினா - சிறிது
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
 
தாளிக்க:
பிரியாணி இலை - 2
கிராம்பு - 3
பட்டை - 1 துண்டு
ஏலக்காய் - 2
 
அரைக்க:
தேங்காய்த்துறுவல் - 1/4 கப்
பாதாம் பருப்பு - 8
 
செய்முறை :

*காய்கறிகளை உப்பு சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும்.அவரவர்க்கு தேவையான காய்களையும் சேர்த்துக் கொள்ளவும்.

*அரைக்க கொடுத்துள்ளவைகளை மைய அரைக்கவும்.பச்சை மிளகாயையும் அரைத்துக் கொள்ளவும்.

*பாத்திரத்தில் தாளிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து வெங்காயம்+தக்காளி+இஞ்சி பூண்டு விழுது+பச்சை மிளகாய் விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.

*நன்கு வதங்கியதும் காய்கறி வேக வைத்த நீரோடு காய்களை சேர்க்கவும்.தேவைப்பட்டால் தேவையானளவு நீரும் உப்பும் சேர்க்கவும்.

*1 கொதி வந்ததும் அரைத்த விழுதை சேர்த்து மேலும் சிறிது நேரம் கொதிக்க விட்டு புதினா தழை தூவி இறக்கவும்.
 
பி.கு:

அவரவர் காரத்துக்கேற்ப பச்சை மிளகாயை சேர்க்கவும்.
Wednesday 17 March 2010 | By: Menaga Sathia

பிடித்த பத்து பெண்கள்

இந்த பதிவு யூத்புல் விகடனில் குட் ப்ளாக் பகுதியில் வந்துள்ளது.விகடனுக்கு மிக்க நன்றி!!!

மகளிர் தினத்தையொட்டி இந்த தொடரை எழுத அழைத்த ஜலிலா அக்காவிர்க்கு நன்றி!!
 
நிபந்தனைகள் :-1. உங்களின் சொந்தக்காரர்களாக இருக்க கூடாது.,2. வரிசை முக்கியம் இல்லை.,3. ஒரே துறையில் பல பெண்மணிகள் நமக்கு பிடித்தவர்களாக இருக்கும்,4. இந்த பதிவுக்கு வெவ்வேறு துறையில் உள்ள நபர்களாக இருக்கவேண்டும்...
 
1. சமூகசேவகி
அன்னை தெரெசா,மேதா பட்கர்: அடுத்தவர்களுக்கு தன்னலம் கருதாமல் தொண்டு செய்வதே மிகப்பெரிய சேவை.இவரின் அயராத தொண்டு எனக்கு ரொம்ப பிடிக்கும்.
 
2.அரசியல் தலைவி
ஜெயலலிதா: இவரின் ஆட்சிக்காலத்தில் அரசு அதிகாரிகள் சரியாக வேலை பார்த்தார்கள்.பொடா சட்டத்தை கொண்டுவந்த தைரியமான பெண்மணி.இவரின் துணிச்சல் ரொம்ப பிடிக்கும்.
 
3.டென்னிஸ் வீராங்கனை
ஸ்டெபி க்ராப்: இவரின் அபாரமான ஆட்டம் ரொம்ப பிடிக்கும்.இன்னும் சிறப்பாக விளையாட வேண்டியவர் காணாமல் போய்விட்டார்.
 
4.பாடலாசிரியர்
தாமரை: அழகான வரிகளில் பாடல் எழுதுவதில் வல்லவர்.இவரின் பாடல்களை மிகவும் ரசிப்பேன்
 
5.பின்னனி பாடகி
எஸ்.ஜானகி: என் அம்மாவின் பெயர் என்பதாலும் இவரை எனக்கு ரொம்ப பிடிக்கும்.இவரின் குரல்வளத்துக்கு மயங்காதவர்களே கிடையாது.இவரின் குரலும்,எளிமையும் ரொம்ப பிடிக்கும்.
 
6.தொழிலதிபர்
 
சாந்தி துரைசாமி: சக்தி மசாலாவின் நிர்வாகி.இவரின் அயராத உழைப்பும்,ஊனமுற்றவர்களுக்கு வேலை வாய்ப்பும்,நிறைய விருதுகளும் பெற்ற பெண்மணி.சாதாராண குடும்பத்திலிருந்து வந்தவர்.இவர் தான் என் ரோல் மாடல்.
 
7.அழகி
 
ஜூஹி சாவ்லா: பாலிவுட் நடிகை.80 களில் இந்திய அழகியாக வந்தவர்.இவரின் ஸ்மைல் + துறுதுறு நடிப்பு ரொம்ப பிடிக்கும்.
 
8. பேச்சாளர்
பாரதி பாஸ்கர் :சாலமன் பாப்பையா பட்டிமன்றங்களில் இவரின் பேச்சு திறமையை அறியலாம்.இவரின் பேச்சுத் திறமையை கண்டு வியந்திருக்கேன்.
 
9.தடகள வீராங்கனை
தங்க மங்கை பி.டி.உஷா: நம்நாட்டுக்காக தங்கம் வாங்கி கொடுத்தவர்.இவரின் திறமையை வழக்கம்போல் இந்தியா கண்டு கொள்ளவில்லை.இவரைப்பார்த்து இவரைப்போல் நம்மால் ஓடமுடியுமா என்று கூட நினைத்ததுண்டு.
 
10.வெளிநாட்டு பெண்மணி
 
சோனியாகாந்தி: இத்தாலியில் பிறந்தவரானலும், நம் நாட்டின் பண்பாடு,கலாச்சாரத்தையும் பின்பற்றுவதை பிடிக்கும்.உலகின் சக்தி வாய்ந்த 10 பெண்மணிகளில் இவரும் ஒருவர்.கணவரின் மறைவுக்கு பின் கட்சியை சிறப்பாக நடத்துவது பிடிக்கும்.
 
இத்தொடரை எழுத அழைக்கும் நபர்கள்
 
ப்ரியாராஜ்
நிதுபாலா
விஜிசத்யா
ஹர்ஷினி அம்மா
சித்ரா


Tuesday 16 March 2010 | By: Menaga Sathia

ராகி லெமன் இடியாப்பம்


தே.பொருட்கள்:

ராகி மாவு - 2 கப்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
எலுமிச்சை பழம் - 1
 
தாளிக்க:
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/4டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
காய்ந்த மிளகாய் - 2
வேர்க்கடலை - 1 கைப்பிடி

செய்முறை :

* ராகி மாவில் தேவையான உப்பு சேர்த்து கலக்கவும்.ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து நன்கு கொதிக்கவிடவும்.

*கொதித்த நீரை மாவில் கொஞ்ச கொஞ்சமாக ஊற்றி கரண்டியால் கிளறவும்.சப்பாத்தி மாவு பதத்திற்க்கு இருக்கனும்.

*பின் அதை இடியாப்பம் அல்லது ஒமப்பொடி அச்சில் போட்டு பிழிந்து ஆவியில் வேகவைத்து உதிர்த்துக்கொள்ளவும்.

*எலுமிச்சை பழத்தில் சாறெடுக்கவும்.கடாயில் தாளிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து எலுமிச்சை சாறை ஊற்றி கொதிக்கவிடவும்.

*லேசாக கொதித்ததும் உதிர்த்த இடியாப்பத்தை போட்டு கிளறி இறக்கவும்.



Monday 15 March 2010 | By: Menaga Sathia

பேடா

தே.பொருட்கள்:

பனீர் தயாரிக்க
பால் - 4 கப்
எலுமிச்சை சாறு - 1/4 கப்
 
செய்முறை :

*எலுமிச்சை சாறுடன் சிறிது வெந்நீர் கலந்து வைக்கவும்.

*பாலை நன்கு காய்ச்சி எலுமிச்சை சாறு சேர்க்கவும்.பால் திரிந்திருக்கும் அதை மெல்லிய துணியின் மூலம் வடிகட்டி குளிர்ந்த நீரில் 2,3 தடவை நன்கு அலசி தொங்கவிடவும் (எலுமிச்சையின் வாசனை போவதற்க்காக) அல்லது அந்த துணியின் மேல் கணமான பாத்திரம் வைக்கவும்.6 மணிநேரம் ஆனதும் தண்ணீர் நன்கு வடிந்திருக்கும் பனீரை பயன்படுத்தவும்.

*பனீர் வடிகட்டிய நீருக்கு வே வாட்டர் என்று பெயர்.அதை 4 நாட்கள் வரை வைத்திருந்து அடுத்தமுறை பனீர் செய்ய பயன்படுத்தலாம்.

பேடா செய்ய:

பனீர் - 3/4 கப்
பால் - 3/4 கப்
பால் பவுடர் - 3/4 கப்
சர்க்கரை - 1/2 கப்
ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
பாதாம்(அ )பிஸ்தா துண்டுகள் - 1 டேபிள்ஸ்பூன்
நெய் - 3 டேபிள்ஸ்பூன்

செய்முறை :

*நான் ஸ்டிக் கடாயில் நெய் விட்டு உருக்கியதும் பால்+பால் பவுடர்+பனீர் அனைத்தையும் ஒன்றாக கலந்து கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும்.

*கெட்டியில்லாமல் நன்கு மிருதுவாக கெட்டியாக சப்பாத்தி மாவு பதத்திற்க்கு வரும் போது இறக்கி வேறொரு பாத்திரத்தில் வைக்கவும்.

*இளஞ்சூடாக இருக்கும் போது சர்க்கரை+ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு மிருதுவக பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக பிடிக்கவும்.

*ஒவ்வொரு உருண்டையும் நடுவில் லேசாக அழுத்தி பிஸ்தா(நான் பாதாம் துண்டுகள் வைத்துள்ளேன்)துண்டுகள் வைத்து அலங்கரிக்கவும்.
Sunday 14 March 2010 | By: Menaga Sathia

பார்லி பெசரட்

தே.பொருட்கள்:

பச்சைபயிறு - 1 கப்
பார்லி குருணை - 3/4 கப்
அரிசி - 1 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 3
இஞ்சி - சிறு துண்டு
சோம்பு - 1 1/2 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு


தாளிக்க:
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/4டீஸ்பூன்


செய்முறை :

*பார்லி + பச்சை பயிறு,அரிசி இவைகளை தனித்தனியாக குறைந்தது 5 மணிநேரம் ஊறவைக்கவும்.

*ஊறியதும் காய்ந்த மிளகாய்+இஞ்சி+சோம்பு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.

*அடைமாவு பதத்திற்க்கு உப்பு சேர்த்து கரைத்து தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து மெல்லிய தோசைகளாக சுட்டெடுக்கவும்.

*கார சட்னியுடன் சாப்பிட செம ருசி!!


Thursday 11 March 2010 | By: Menaga Sathia

மிக்ஸட் சாலட்

தே.பொருட்கள்:

பீட்ரூட் - 1
பீன்ஸ் - 10
கேரட் - 2
உருளைக்கிழங்கு - 2
முட்டை - 2
மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்
பொடியாக அரிந்த வெங்காயம் - 1
பொடியாக அரிந்த பச்சை மிளகாய் - 1
வினிகர் - புளிப்புக்கு தகுந்தவாறு
உப்பு - தேவைக்கு
 
செய்முறை :

* காய்களை உருளையைதவிர தோல் சீவவும்.

*குக்கரில் முட்டை + எல்லா காய்களையும் போட்டு சிறிது நீர் விட்டு 3 விசில் வரை வேகவிடவும்.

*உருளை+முட்டை தோலெடுக்கவும்.முட்டையை மட்டும் மெலிதாக நீளவாக்கில் அரியவும்.

*ஒரு பாத்திரத்தில் வெந்த காய்கள்+முட்டை+உப்பு+வெங்காயம்+பச்சை மிளகாய்+மிளகுத்தூள்+வினிகர் அனைத்தையும் ஒன்றாக பிசைந்து பரிமாறவும்.
 
பி.கு:
இந்த சாலட் கறிகுழம்பிற்க்கு தொட்டு சாப்பிட ரொம்ப நல்லாயிருக்கும்.
Tuesday 9 March 2010 | By: Menaga Sathia

கடலைமாவு மோர்குழம்பு

தே.பொருட்கள்:

தயிர் - 1கப்
கடலைமாவு - 1 டேபிள்ஸ்பூன்
தேங்காய்த்துறுவல் - 1/4 கப்
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
ஊப்பு+எண்ணெய் = தேவைக்கு
 
தாளிக்க:

சீரகம் - 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - வாசனைக்கு
கீறிய பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை :

*தேங்காயை மைய அரைத்துக் கொள்ளவும்.

*தயிரில் உப்பு+மஞ்சள்தூள்+கடலைமாவு+தேங்காய் விழுது அனைத்தையும் தேவையானளவில் நீர் கலந்து கரைத்து வைக்கவும்.

*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து மோர்கரைசலை ஊற்றி கொதிக்கவிடவும்.

*கொதிவந்து 5 நிமிடம் கழித்து இறக்கவும்.

*இந்த மோர்குழம்பை ஈஸியாக செய்துவிடலாம்.
Sunday 7 March 2010 | By: Menaga Sathia

ஒட்ஸ் வாழைப்பழ தோசை



தே.பொருட்கள்:

ஒட்ஸ் - 1/2 கப்
ரவை - 1/2 கப்
நன்கு பழுத்த வாழைப்பழம் - 1
சர்க்கரை - 1/4 கப்
பால் - 1/2 கப்
ஏலக்காய்த்தூள் - 1/4டீஸ்பூன்
நெய் = தேவைக்கு
 
செய்முறை :

*பாத்திரத்தில் வாழைப்பழத்தைப் போட்டு மசிக்கவும்.

*அதனுடன் ஒட்ஸ்+ரவை+ஏலக்காய்த்தூள்+சர்க்கரை+பால் அனைத்தையும் ஒன்றாக கலந்து 1/2 மணிநேரம் ஊறவிடவும்.

*மாவு கெட்டியாக இருந்தால் மேலும் சிறிது பால் சேர்த்து கலக்கவும்.

*மாவு ரொம்ப கெட்டியாகவும்,தண்ணீயாகவும் இல்லாமல் இருக்கனும்.

*தவாவில் நெய்விட்டு ஒரு கரண்டி மாவை விடவும்.தேய்க்கவேண்டாம்.அதுவே தானாக பரவிக்கொள்ளும்.

*ஒரு பக்கம் வெந்ததும் மறுபக்கம் திருப்பி வேகவிட்டு எடுக்கவும்.

பி.கு:

இந்தளவு சர்க்கரை சரியாக இருக்கும்.இனிப்பு வேண்டுமானால் சர்க்கரை சேர்த்துக்கொள்ளவும்.
Thursday 4 March 2010 | By: Menaga Sathia

ஸ்வீட் கார்ன் மேத்தி புலாவ்

தே.பொருட்கள்:

பாஸ்மதி - 2 கப்
ஸ்வீட் கார்ன்,பச்சை பட்டாணி - தலா 1/4 கப்
காய்ந்த வெந்தயக் கீரை - 1/4 கப்
நீளமாக அரிந்த வெங்காயம் - 1பெரியது
அரிந்த தக்காளி - 1 பெரியது
கீறிய பச்சை மிளகாய் - 2
இஞ்சி பூண்டு விழுது - 1/2 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
எலுமிச்சை சாறு - 1/2 டேபிள்ஸ்பூன்
நெய் - 1 1/2 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:
பிரியாணி இலை - 2
கிராம்பு - 3
பட்டை - 1 துண்டு
ஏலக்காய் - 2

செய்முறை :
*காய்ந்த வெந்தயக்கீரை சிறிது வெந்நீரில் உப்பு சேர்த்து ஊறவைத்து அலசி வைக்கவும்.

*கார்னையும் நீரில் அலசி வைக்கவும்.பாஸ்மதியை ஊறவைத்து கழுவி வைக்கவும்.

*குக்கரில் சிறிது நெய் விட்டு பாஸ்மதியை லேசாக வறுத்து தனியாக வைக்கவும்.

*மீதமிருக்கும் நெய்+எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து வெங்காயம்+இஞ்சி பூண்டு விழுது+பச்சை மிளகாய்+தக்காளி+மஞ்சள்தூள்+மிளகாய்த்தூள் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.

*பின் கீரை+கார்ன்+பட்டாணி+உப்பு+3 கப் நீர்+அரிசி +எலுமிச்சை சாறு சேர்த்து 3 விசில் வரை வைக்கவும்.

*வெந்ததும் எடுத்து ராய்த்தா அல்லது வறுவலுடன் பரிமாறவும்.

Tuesday 2 March 2010 | By: Menaga Sathia

ஒட்ஸ் ஆனியன் ஊத்தாப்பம்

தே.பொருட்கள்:

ஒட்ஸ் - 1/2 கப்
கோதுமைரவை - 1/2 கப்
பொடியாக அரிந்த வெங்காயம் - 1
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

செய்முறை :

*ஒட்ஸ்+கோதுமைரவை இவற்றை வெறும் கடாயில் வறுத்து 1/2 மணிநேரம் தேவையானளவு நீர் விட்டு ஊறவைக்கவும்.

*ஊறியதும் மிக்ஸியில் அரைத்து தோசைமாவு பதத்திற்க்கு உப்பு சேர்த்து கரைக்கவும்.

*தோசைக்கல்லில் மாவை தடினமாக எடுத்து ஊற்றி அதன் மேல் வெங்காயத்தை தூவி,சுற்றிலும் எண்ணெய் விடவும்.

*ஒரு புறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி வேகவிட்டு எடுக்கவும்.

*சூடாக சட்னி,சாம்பாருடன் பறிமாறவும்.
01 09 10