Monday 29 November 2010 | By: Menaga Sathia

ப்ரெட் புட்டு/ Bread Puttu

தே.பொருட்கள்:
ப்ரெட் ஸ்லைஸ் - 5
சர்க்கரை+தேங்காய்த்துறுவல் - தலா 1 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
நெய் - 2 டீஸ்பூன்
முந்திரி - 5

செய்முறை:
*ப்ரெட்டின் ஓரங்களை கட் செய்து,மிக்ஸியில் ஒரு சுற்று சிற்றி எடுக்கவும்.

*கடாயில் நெய் விட்டு முந்திரியை வறுக்கவும்,பின் உதிர்த்த ப்ரெட்டினை போட்டு லேசாக பிரட்டவும்.

*சர்க்கரை+தேங்காய்த்துறுவல்+ஏலக்காய்த்தூள் சேர்த்து கிளறி உடனே இறக்கவும்.

*இல்லையெனில் புட்டு க்ரிஸ்பியாக இருக்கும்.
Sunday 28 November 2010 | By: Menaga Sathia

கடலைப்பருப்பு சட்னி / Channa Dal Chutney

தே.பொருட்கள்:
தேங்காய்த்துறுவல் - 1/4 கப்
கடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
புளி - 1சிறிய நெல்லிகாயளவு
காய்ந்த மிளகாய் - 3
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன்
பெருங்காயம் - வாசனைக்கு
கறிவேபிலை - சிறிது

செய்முறை:
*வெறும் கடாயில் கடலைப்பருப்பை வாசனை வறும் வரை வறுக்கவும்.

*ஆறியதும் அதனுடன் எண்ணெய் நீங்கலாக அனைத்து பொருட்களும் சேர்த்து மைய அரைக்கவும்.

*பின் தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்துக் கொட்டவும்.இட்லி,தோசைக்கு நன்றாகயிருக்கும்.
Thursday 25 November 2010 | By: Menaga Sathia

செட்டிநாடு மிளகு சிக்கன் வறுவல் / Chettinad Pepper Chicken Fry

தே.பொருட்கள்:சிக்கன் - 1/2 கிலோ
வெங்காயம் - 1
தக்காளி - 1
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்
தனியாத்தூள் - 1/2 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
மிளுகுத்தூள் - 3/4 டேபிள்ஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை -சிறிது
உப்பு +எண்ணெய் = தேவைக்கு

செய்முறை:*வெங்காயம்+தக்காளியை நறுக்கவும்.சிக்கனை சுத்தம் செய்து நீரில்லாமல் வடிகட்டவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு சோம்பு+கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
*பின் வெங்காயம் சேர்த்து பாதி வதங்கியபின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.
*தக்காளி+மஞ்சள்தூள்+தனியாத்தூள் சேர்த்து வதக்கவும்.
*இந்த மசாலா நன்கு எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.
*சிக்கன்+உப்பு சேர்த்து மூடி வேகவிடவும்.சிக்கன் விடும் நீரே போதும்.
*சிக்கன் பாதி வெந்ததும் மிளகுத்தூளை தூவி நன்கு சுருள வதக்கி இறக்கவும்.
Wednesday 24 November 2010 | By: Menaga Sathia

பீன்ஸ் & உருளை சாலட் / Beans & Potato Salad

தே.பொருட்கள்:பீன்ஸ் - 1/4 கிலோ
வேகவைத்த உருளைக்கிழங்கு - 2 பெரியது
வெங்காயம் - 1
பூண்டு - 2 பல்
மிளகுத்தூள் - காரத்திற்கேற்ப
உப்பு+வெண்ணெய் = தேவைக்கு

செய்முறை:*பீன்ஸை மூழ்குமளவு நீர் வைத்து உப்பு கலந்து வேகவைத்து நீரை வடிக்கவும்.
*வெங்காயம்+பூண்டு இவற்றை மிகவும் பொடியாக நறுக்கவும்.

*உருளைக்கிழங்கை பெரிய துண்டுகளாக நறுக்கவும்.

*கடாயில் வெண்ணெய் போட்டு உருகியதும் பூண்டு+வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

*பச்சை வாசனை போனதும் மிளகுத்தூள்+வேகவைத்த பீன்ஸ் சேர்த்து நன்கு வதக்கி இறக்கவும்.தேவையானால் உப்பு சேர்க்கவும்.

*கடாயில் வெண்ணெய் சேர்த்து உருகியதும் துண்டுகளாகிய உருளையை நன்கு சிவக்க வறுக்கவும்.பின் உப்பு+மிளகுத்தூள் கலந்து இறக்கவும்.

*இதனுடன் க்ரில்டு ஐயிட்டம்ஸ்,ரொட்டி சேர்த்து சாப்பிட நன்றாகயிருக்கும்.
Sending this recipe to AWED - French Event by Priya & DK.
Tuesday 23 November 2010 | By: Menaga Sathia

பாதாம் சூப் / Almond Soup

கீதா பாலகிருஷ்ணன் அவர்களின் குறிப்பை புத்தகத்தில் பார்த்து செய்தது.

பாதாம் பருப்பில் நிறைய புரதசத்து,நார்ச்சத்து,வைட்டமின் மற்றும் மினரல் சத்துக்கள் நிறைய இருக்கு.ஒமேகா3,6 கொழுப்பு சத்து நிறைந்தது.இந்த கொழுப்பு சத்தின் மூலம் கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்க வல்லது.ரத்த ஓட்டத்தை சீர்படுத்தவும்,எலும்பை வலுப்படுத்தவும் சிறந்தது.தோலுக்கும் மிக நல்லது.இதயத்திற்க்கு மிகவும் நல்லது.

தே.பொருட்கள்:பாதாம் - 50 கிராம்
பால் - 1 கப்
வெள்ளை மிளகுத்தூள் - 1/4 டீஸ்பூன்
குரூட்டன்ஸ் - சிறிது
காய்கறி வேகவைத்த நீர் - 1/2 கப்
உப்பு - தேவைக்கு

ஒயிட் சாஸ் செய்யவெண்ணை - 1 டேபிள்ஸ்பூன்
சோளமாவு - 1/2 டேபிள்ஸ்பூன்
மைதா மாவு - 1 டேபிள்ஸ்பூன்
பால் - 1 கப்

செய்முறை:*பாதாம் பருப்புகளை கொதிநீரில் போட்டு சிறிது நேரம் ஊறவைத்தபின் தோலெடுத்து நைசாக அரைக்கவும்.

*கடாயில் வெண்ணெய் விட்டு ,குளிந்த பாலில் கோளமாவு+மைதா மாவு கலவையைக் கரைத்து அதில் சேர்த்து கெட்டியாகிவிடாமல் கிளறிவிட்டுக் கொண்டே இருக்கவும்.

*சற்று கெட்டியானதும் ஒயிட் சாஸ் ரெடி!!

*பாலை கொதிக்கவிட்டு பாதாம் விழுதை சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.

*பாதாம் விழுது பாலில் வெந்த வாசம் வந்ததும் காய்கறி நீர்+ஒயிட் சாஸ்+உப்பு+மிளகுத்தூள் சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும்.

*பரிமாறும் போது குரூட்டன்ஸ் தூவி பருகவும்.சுவையான சூப் ரெடி!!

*1 கப் குடித்தாலே வயிறு நிறைந்துவிடும்.

Monday 22 November 2010 | By: Menaga Sathia

செட்டிநாடு மட்டன் குழம்பு / Chettinad Mutton Kuzhampu

தேனக்காவின் குறிப்பை பார்த்து செய்தது.மிகவும் அருமையாக இருந்தது.
தே.பொருட்கள்:மட்டன் - 1/4 கிலோ
சின்ன வெங்காயம் - 15
பூண்டு - 8
தக்காளி - 1
புளி கரைசல் - 1 கப்
உப்பு +எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:பட்டை - 1 துண்டு
கிராம்பு - 3
பிரியாணி இலை - 2
ஏலக்காய் -2
கறிவேப்பிலை - 1 இனுக்கு

அரைக்க:காய்ந்த மிளகாய் - 10
தனியா - 1 டேபிள்ஸ்பூன்
சோம்பு - 2 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
மிளகு - 10
கசகசா - 1 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் - 2
பூண்டுப்பல் - 1

செய்முறை:*மட்டனை சுத்தம் செய்து சிறிந்தளவு நீரில் வேகவைக்கவும்.பூண்டு+வெங்காயம்+தக்காளி அரிந்து வைக்கவும்.

*அரைக்க கொடுத்துள்ள பொருட்களில் வெங்காயம்,பூண்டை தவிர சிறிது எண்ணெயில் வறுத்து ஆறவைத்து வெங்காயம்+பூண்டு சேர்த்து நைசாக அரைக்கவும்.

*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து வெங்காயம்+பூண்டு+தக்காளி+அரைத்த மசாலா அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கி புளிகரைசல்+உப்பு+வேகவைத்த மட்டன் சேர்த்து கொதிக்கவைக்கவும்.

*தீயை சிம்மில் வைத்து 20 நிமிடம் கழித்து இறக்கவும்.





Sunday 21 November 2010 | By: Menaga Sathia

காரமல் ஆப்பிள்(Caramelized Apple)

தே.பொருட்கள்:

ரெட் ஆப்பிள் - 1
பட்டைத்தூள் - 1/4 டீஸ்பூன்
வெண்ணெய் - 1 டீஸ்பூன்
சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன்

செய்முறை:
*ஆப்பிளை தோல் சீவி மெலிதாக நீளவாக்கில் நறுக்கவும்.

*கடாயில் 1 டேபிள்ஸ்பூன் சர்க்கரைப்போட்டு உருக்கவும்.பிரவுன் கலரில் உருகி வரும் போது வெண்ணெய்+பட்டைத்தூள் சேர்த்து ஆப்பிளை சேர்த்து 2 நிமிடங்கள் கிளறி இறக்கவும்.அதிக நேரம் கிளறினால் ஆப்பிள் வெந்துவிடும்.

*ஆறியதும் மீதமுள்ள 1 டேபிள்ஸ்பூன் சர்க்கரையைத்தூவி பரிமாறவும்.

*மிகவும் அருமையாக இருக்கும் இந்த டெசர்ட்!!
Sending this recipe to AWED - French Event By Priya & Dk

Thursday 18 November 2010 | By: Menaga Sathia

பருப்பு உருண்டைக் குழம்பு/ Paruppu Urundai Khuzhampu

தே.பொருட்கள்:புளிகரைசல் - 2 கப்
சின்ன வெங்காயம் - 10
பூண்டுப்பல் - 5
வடகம் - 3/4 டேபிள்ஸ்பூன்
சாம்பார் பொடி - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு +நல்லெண்ணெய் = தேவைக்கு

உருண்டைக்கு:சென்னா - 1 கப்
துவரம்பருப்பு - 1/2 கப்
காய்ந்த மிளகாய் - 4
சோம்பு - 1 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய வெங்காயம் -1
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு
 
செய்முறை:*சென்னாவை 6 மணிநேஅரமும்,துவரம்பருப்பை 1 மணிநேரமும் ஊறவைத்து உப்பு+காய்ந்த மிளகாய்+சோம்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்தெடுக்கவும்.
*அரைத்த கலவையில் வெங்காயம்+மல்லித்தழை சேர்த்து பிசைந்து உருண்டைகளாக பிடித்து ஆவியில் வேகவைத்தெடுக்கவும்.
*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு வடகம் போட்டு தாளித்து சின்ன வெங்காயம்+பூண்டு சேர்த்து வதக்கி புளிகரைசல்+உப்பு+சாம்பார் பொடி சேர்த்து கொதிக்கவிடவும்.
*நன்கு கொதித்ததும் வேகவைத்த உருண்டைகளை சேர்த்து 10 நிமிடம் கழித்து இறக்கவும்.

Tuesday 16 November 2010 | By: Menaga Sathia

ரவா கிச்சடி/ Rava(Sooji) Kichadi

தே.பொருட்கள்:

ரவை - 1 கப்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
கேரட் - 1
பீன்ஸ் - 10
ப்ரோசன் பட்டாணி - 1 கைப்பிடி
அரிந்த வெங்காயம் - 1
அரிந்த தக்காளி - 1
கீறிய பச்சை மிளகாய் - 2
நசுக்கிய இஞ்சி பூண்டு - 1/2 டேபிள்ஸ்பூன்
நெய் - 1 டேபிள்ஸ்பூன்
நெய்யில் வருத்த முந்திரி - தேவைக்கு
உப்பு + எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:
பிரியாணி இலை - 2
கிராம்பு - 3
பட்டை - 1 துண்டு

செய்முறை :
*ரவையை சிறிது நெய்யில் வறுத்து தனியாக வைக்கவும்.பீன்ஸ்+கேரட் நடுத்தர சைஸில் நறுக்கவும்.

*பாத்திரத்தில் மீதமுள்ள நெய்+எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து வெங்காயம்+பச்சை மிளகாய்+நசுக்கிய இஞ்சி பூண்டு+தக்காளி+மஞ்சள்தூள்+உப்பு+காய்கள் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.

*காய் வேகுவதற்காக 1/2 கப் நீர் விட்டு வேகவிடவும்.இன்னொரு அடுப்பில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்க வைக்கவும்.

*காய்கள் வெந்ததும் வறுத்த ரவையை போட்டு கிளறி கொதிக்கும் நீர் சேர்த்து கிளறவும்.இப்படி செய்வதால் ரவை கட்டி விழாமல் இருக்கும்.

*ரவை நன்கு வெந்ததும் வறுத்த முந்திரி சேர்த்து சட்னியுடன் பரிமாறவும்.
Monday 15 November 2010 | By: Menaga Sathia

பிரவுன் ரைஸ் வாங்கிபாத் /Brown Rice Vanghibath

தே.பொருட்கள்:

உதிராக வடித்த பிரவுன் ரைஸ் - 1 கப்
பொடியாக அரிந்த கத்திரிக்காய் - 1 கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1 பெரியது
பட்டர் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

வறுத்து பொடிக்க:

தனியா - 1 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
காய்ந்த தேங்காய்த்துறுவல் - 2 டேபிள்ஸ்பூன்
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
பட்டை - 1 சிறுதுண்டு
கிராம்பு - 2
சீரகம் - 1/4 டீஸ்பூன்

தாளிக்க:
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/4டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
 
செய்முறை :
*வறுத்து பொடிக்க கொடுத்துள்ளவைகளை வெறும் கடாயில் வறுத்து நைசாக பொடிக்கவும்.

*கடாயில் பட்டர்+எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப்போட்டு தாளித்து வெங்காயம்+கத்திரிக்காயை நன்கு வதக்கவும்.

*கத்திரிக்காயை எண்ணெயிலேயே வதக்கவும் வெந்ததும் பொடித்த பொடி+உப்பு+வடித்த சாதம் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.
Sunday 14 November 2010 | By: Menaga Sathia

உருளைக்கிழங்கு பிரியாணி/Potato Biryani

தே.பொருட்கள்:
பாஸ்மதி - 2 கப்
உருளைக்கிழங்கு - 2 பெரியது
நறுக்கிய வெங்காயம் - 1
நறுக்கிய தக்காளி - 1
இஞ்சி பூண்டு விழுது - 1/2 டேபிள்ஸ்பூன்
பிரியாணி மசாலா பொடி - 1 டேபிள்ஸ்பூன்
புதினா,கொத்தமல்லி - 1 கைப்பிடியளவு
நெய் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:பட்டை - 1 துண்டு
கிராம்பு - 3
பிரியாணி இலை - 2
ஏலக்காய் -2
 
செய்முறை:
*உருளைக்கிழங்கை தோல்சீவி நடுத்தர துண்டுகளாக நறுக்கவும்.அரிசியை கழுவி 10 நிமிடம் ஊறவைக்கவும்.

*குக்கரில் நெய்+எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ளவைகளைப்போட்டு தாளித்து வெங்காயம்+தக்காளி+இஞ்சி பூண்டு விழுது+பிரியாணி மசாலா பொடி+புதினா கொத்தமல்லி இவைகளை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.

*வதங்கியதும் உருளைக்கிழங்கு+உப்பு+அரிசியைப் போட்டு வதக்கி 3 கப் நீர் விட்டு 3 விசில் வரை வேக வைத்தெடுக்கவும்.

*ராய்த்தாவுடன் பரிமாறவும்.காய் இல்லையெனில் அவசரத்திற்க்கு இந்த பிரியாணியை செய்துவிடலாம்.
Thursday 11 November 2010 | By: Menaga Sathia

எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு - 2/ Ennai Khatirikkai Khuzhampu - 2

விஜிசத்யாவின் குறிப்பை பார்த்து செய்தது.மிகவும் அருமையாக இருந்தது.
தே.பொருட்கள்:குட்டி கத்திரிக்காய் - 8
சின்ன வெங்காயம் - 15
தேங்காய்த்துறுவல் - 1/4 கப்
கசகசா - 1/2 டீஸ்பூன்
பூண்டுப்பல் - 4
சீரகம் - 1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 6
தனியாத்தூள் - 1 1/2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
புளிகரைசல் - 1 1/2 கப்
வெல்லம் - சிறிது
உப்பு +எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:கடுகு - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பில்லை - சிறிது

செய்முறை:*கத்திரிக்காயை காம்போடு 4ஆக பிளந்து வைக்கவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாய் +சீரகம்+வெங்காயம் சேர்த்து வதக்கி ஆறவைத்து அதனுடன் தேங்காய்த்துறுவல்+கசகசா+தனியாத்தூள் சேத்து நைசாக அரைக்கவும்.

*அரைத்த விழுதை எடுத்து நறுக்கி வைத்திருக்கும் கத்திரிக்காயில் நிரப்பவும்.மீதமுள்ள விழுதை புளிகரைசலில் உப்பு சேர்த்து கரைத்து வைக்கவும்.
*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கடுகு+கறிவேப்பிலை+பூண்டு சேர்த்து தாளித்து கத்திரிக்காயை சேர்த்து வதக்கவும்.
*வதங்கியதும் புளிகரைசலை ஊற்றி கொதிக்கவிடவும்.கத்திரிக்காய் வெந்து கெட்டியானதும் வெல்லம் சேர்த்து இறக்கவும்.

*சுவையான குழம்பு ரெடி!!இட்லி,தோசை,சாதம் அனைத்திற்க்கும் சூப்பர்..
Wednesday 10 November 2010 | By: Menaga Sathia

கினோவா(Quinoa) தட்டை

தே.பொருட்கள்:
பச்சரிசி மாவு - 1 கப்
கினோவா - 1 கப்
பொட்டுக்கடலை மாவு - 1/2 கப்
ஊற வைத்த கடலைப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
சோம்பு - 1 டீஸ்பூன்
வர மிளகாய்த்தூள் 3/4 டேபிள்ஸ்பூன்
வெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு +எண்ணெய் = தேவைக்கு

செய்முறை:
*கினோவாவை வெறும் கடாயில் வறுத்து மிக்ஸியில் மாவாக்கவும்.

*அதனுடன் எண்ணெய் நீங்கலாக அனைத்து பொருட்களும் ஒன்றாக கலக்கவும்.

*நீர் ஊற்றி மாவை கெட்டியாக பிசையவும்.

*சிறு உருண்டையாக எடுத்து பிளாஸ்டிக் கவரில் எண்ணெய் தடவி வட்டமாக தட்டி துணியில் சிறிது நேரம் உலரவிட்டு எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
Tuesday 9 November 2010 | By: Menaga Sathia

சீனி அதிரசம்

தே.பொருட்கள்:
பச்சரிசி மாவு - 2 கப்
சர்க்கரை - 3/4 கப்
பால் - 1/4 கப்
ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
நெய் - 2 டீஸ்பூன்
என்ணெய் - பொரிக்க

செய்முறை:
*பச்சரிசி மாவில் ஏலக்காய்த்தூளை கலந்து வைக்கவும்.

*ஒரு பாத்திரத்தில் சர்க்கரை போட்டு முழ்குமளவு நீர் வைத்து கொதிக்கவைக்கவும்.கொதிக்க ஆரம்பித்ததும் பாலை ஊற்றவும்.

*சிறிது நேரத்தில் பொங்கும் போது மேலோடு அழுக்கை எடுக்கவும்.

*பின் சிறிது கிண்ணத்தில் நீர் வைத்து சர்க்கரையை அதில் விட்டு பார்த்தால் உருண்டையாக நிற்கும்.

*அப்போழுது பாகை அடுப்பிலிருந்து இறக்கி மாவை கொஞ்சகொஞ்சமாக போட்டு கிளறி நெய் கலந்து வைக்கவும்.
*மறுநாள் ஒரு கவரில் எண்ணெய் தடவி சிறு உருண்டையாக எடுத்து தட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
பி.கு:
*பச்சரிசி மாவு என்பது அரிசியை ஊறவைத்து நீரில்லாமல் வடிகட்டி நிழலில் உலர்த்தி மிக்ஸியில் மாவாக்கவும்.

*மிகவும் நைசாக இல்லாமலும்,கொரகொரப்பாக இல்லாமலும் இருக்கனும்.
*நான் குறிப்பிட்டிருக்கும் 2 கப் பச்சரிசி மாவு ஊறவைத்து அரைத்த மாவைதான் குறிப்பிட்டுள்ளேன்.

*மாவை எண்ணெயில் பொரிக்கும் போது தடிமனாக இல்லாமலும்,மெல்லியதாக இல்லாமலும் தட்டவும்.

*மாவு தளர்த்தியாக இருந்தால் மீண்டும் அரிசியை ஊறவைத்து அரைத்து போட்டு கிளறி வைக்கவும்.

*மாவை கிளறி வைத்து உடனே சுடுவதை விட 2 நாள் வைத்திருந்து சுட நல்லாயிருக்கும்.

*இந்த அளவில் 7 அதிரசங்கள் வரும்.
Monday 8 November 2010 | By: Menaga Sathia

மணத்தக்காளி - அப்பளக்குழம்பு

அவள் விகடன் ரெசிபி பார்த்து செய்தது.ஆன்லைனில் அந்த புக்கை படிக்க உதவிய தோழி அனிதாவுக்கு மிக்க நன்றி!!

தே.பொருட்கள்:
புளிகரைசல் - 1 கப்
மணத்தக்காளி வத்தல் - 1 டேபிள்ஸ்பூன்
அப்பளம் - 4
சாம்பார் பொடி - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:
கடுகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 1/2 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை சிறிது

செய்முறை:
* பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களைப்போட்டு தாளித்து வத்தல்+நொறுக்கிய அப்பளம்+சாம்பார் பொடி சேர்த்து நன்கு வதக்கவும்.

*பின் உப்பு+புளிகரைசல் சேர்த்து கொதிக்கவிடவும்.

*குழம்பு கொதித்து எண்ணெய் பிரிந்து வரும் போது இறக்கவும்.

Sunday 7 November 2010 | By: Menaga Sathia

கினோவா(Quinoa) தேங்காய்ப்பால் முறுக்கு

தே.பொருட்கள்:
பச்சரிசி மாவு - 2 கப்
கினோவா - 1 1/2 கப்
வறுத்த உளுத்தமாவு - 1 கப்
வறுத்த பயத்தமாவு - 1/2 கப்
எள் - 1 டீஸ்ஸ்பூன்
வெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1 1/2 டீஸ்பூன்
தேங்காய்ப்பால் - 2 கப்
உப்பு +எண்ணெய் = தேவைக்கு

செய்முறை:
*கினோவாவை வெறும் கடாயில் வறுத்து மிக்ஸியில் மாவாக்கவும்.

*அதனுடன் எண்ணெய்+தேங்காய்ப்பால் நீங்கலாக அனைத்து பொருட்களும் ஒன்றாக கலக்கவும்.

*தேங்காய்ப்பால் ஊற்றி மாவை கொஞ்சமாக பிசைந்து முறுக்கு அச்சில் போட்டு பிழிந்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
 
பி.கு:
தேங்காய்ப்பால் ஊற்றி மாவை ஒரேடியாக பிசைந்தால் முறுக்கு சிவந்துவிடும்,மாவும் சீக்கிரம் புளித்து விடும்.
Friday 5 November 2010 | By: Menaga Sathia

21 காய் சாம்பார்/21 Vegetable Sambhar

இன்று கேதார கௌரி விரதம்.21 காய் போட்டு சாம்பார் செய்து படையல் செய்வாங்க.இந்த சாம்பாரின் சுவையே தனிதான்.
நான் சேர்த்திருக்கும் காய்கள் முருங்கைக்காய்,கத்திரிக்காய்,மாங்காய்,கேரட்,பீன்ஸ்,கோஸ்,பாகற்காய்,
கோவைக்காய்,புடலங்காய்,பீர்க்கங்காய்,சுரைக்காய்,வெள்ளை பூசணிக்காய்,மஞ்சள் பூசணிக்காய்,காலிபிளவர்,பச்சைபட்டாணி,
முருங்கைக்கீரை,உருளைக்கிழங்கு,
சேப்பக்கிழங்கு,வாழைக்காய்,சேனைக்கிழங்கு,வெண்டைக்காய்.அந்தந்த காய்களின் அளவைக் கொஞ்சமாக சேர்க்கவும்.இந்த சாம்பார் கொஞ்சம் நீர்க்க இருந்தால்தான் நன்றாகயிருக்கும்.

தே.பொருட்கள்:வேகவைத்த துவரம்பருப்பு - 1 கப்
புளிகரைசல் - 1/2 கப்
சாம்பார் பொடி - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 4
21 காய்கள் - தேவைக்கு
நறுக்கிய தக்காளி - 1
சாம்பார் வெங்காயம் - 10
உப்பு +எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
பெருங்காயம் - வாசனைக்கு
காய்ந்த மிளகாய் - 2
 
செய்முறை:*தக்காளி+பச்சை மிளகாய்+காய்கள் முருங்கைக்கீரை+மாங்காய் தவிர எண்ணெய் விட்டு வதக்கிக் வேகவைத்த பருப்புடன் சேர்த்து குக்கரில் 1 விசில் வரை வேகவிடவும்.

*புளிகரைசலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொதிக்கவிடவும்.

*பச்சை வாசனை போனதும் வேகவைத்த காய்கள்+உப்பு சேர்த்து மாங்காய்+முருங்கைக்கீரை+சாம்பார் பொடி சேர்க்கவும்.

*மாங்காய் வெந்ததும் தாளிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து சாம்பார் வெங்காயத்தை போட்டு வதக்கி சாம்பாரில் சேர்க்கவும்.
Wednesday 3 November 2010 | By: Menaga Sathia

ஜிலேபி/Jilabi

இதை சூடாக சாப்பிட்டால்தான் நல்லாயிருக்கும்.இந்த அளவில் 6 ஜிலேபிகள் வரும்..
தே.பொருட்கள்:மைதா - 1/2 கப்
கடலைமாவு - 1 டீஸ்பூன்
ஈஸ்ட் - 1/2 டீஸ்பூன்
நெய் - 1/2 டீஸ்பூன்
சர்க்கரை - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - பொரிக்க

பாகு செய்ய:சர்க்கரை - 1 கப்
தண்ணீர் - 1/2 கப்
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
ஏலக்காய்த்தூள்- சிறிது
குங்குமப்பூ அ மஞ்சள் கலர் - சிறிதளவு

செய்முறை:*சிறிது வெதுவெதுப்பான நீரில் ஈஸ்ட்+சர்க்கரை கலந்து 10 நிமிடம் வைக்கவும்.

*ஒரு பவுலில் மைதா+கடலைமாவு+நெய்+மஞ்சள் கலர் சிறிது+ஈஸ்ட் கலந்த நீர் சேர்த்து கெட்டியாக கரைத்து வெப்பமான இடத்தில் 1 மணிநேரம் வைக்கவும்.

*ரொம்பவும் மாவு புளிக்ககூடாது.
*ஜிப்லாக் கவரில் மாவை மெல்லிய துளைப்போட்டு ஊற்றி எண்ணெய் காயவைத்து நேரடியாக எண்ணெயில் வட்டமாக சுற்றி 2 பக்கமும் வேகவிட்டு எடுக்கவும்.
*சர்க்கரை+நீர் சேர்த்து கொதிக்கவிடவும்.பிசுபிசுப்பு பதம் வந்தவுடன் குங்கமப்பூ+எலுமிச்சை சாறு+ஏலக்காய்த்தூள் சேர்க்கவும்.
*சூடான சர்ர்க்கரை பாகில் 2 நிமிடங்கள் போட்டு எடுக்கவும்.
*சூடாக பரிமாறவும்.

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!
01 09 10