Friday 27 May 2011 | By: Menaga Sathia

நவரத்ன சுண்டல் / Navaratna Sundal

தே.பொருட்கள்:
சென்னா,கறுப்புக்கடலை,காராமணி,ராஜ்மா,மொச்சை - தலா 1/4 கப்

வெள்ளைப்பட்டாணி,பச்சை பட்டாணி,கொள்ளு,தோல் பாசிப்பருப்பு - தலா 1/4 கப்
தேங்காய்த்துறுவல் - 1/2 கப்
உப்பு +எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன்
ஓமம் - 1/4 டீஸ்பூன்
பெருங்காயம் - வாசனைக்கு
காய்ந்த மிளகாய் - 3
கறிவேப்பிலை - சிறிது
 
செய்முறை:

* சென்னா+கறுப்புக்கடலை+காராமணி+ராஜ்மா+மொச்சை இவைகளை முதல்நாள் இரவே ஒன்றாக ஊறவைத்து உப்பு சேர்த்து குக்கரில் 3 விசில் வரை வேகவிடவும்.

*வெள்ளைப்பட்டாணி+பச்சைப்பட்டாணி+கொள்ளு+பாசிப்பருப்பு இவைகளை ஊறவைத்து,தோல் பாசிப்பருப்பை மட்டும் தனியாக உப்பு சேர்த்தும் மற்றவைகளை ஒன்றாக போட்டு உப்பு சேர்த்தும் பாத்திரத்தில் வேகவைத்து நீரை வடிக்கட்டவும்.

*பின் அனைத்தையும் ஒன்றாக கலந்து தாளிக்க கொடுத்துள்ளவைகளைப்போட்டு தாளித்து தேங்காய்த்துறுவல் சேர்த்துக் கலக்கவும்.

பி.கு:சோயா பீன்ஸ்,டபுள் பீன்ஸ் சேர்த்தும் செய்யலாம்.
Thursday 26 May 2011 | By: Menaga Sathia

கொத்தமல்லி சட்னி &பூண்டு மிளகாய் பொடி /Coriander Chutney & Garlic Chilli Podi


கொத்தமல்லி சட்னி

தே.பொருட்கள்
கொத்தமல்லிதழை  -1/4 கட்டு
பச்சை மிளகாய் - 2
தேங்காய்த்துறுவல் - 1/2 கப்
புளி - 1சிறிய நெல்லிக்காயளவு
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன்
பெருங்காயம் -சிறிது

செய்முறை
*அனைத்தையும் ஒன்றாக உப்பு சேர்த்து  அரைத்து தாளித்து சேர்க்கவும்.

பூண்டு மிளகாய் பொடி

தே.பொருட்கள்

காய்ந்த மிளகாய் - 15
கறிவேப்பிலை - 1 கொத்து
பூண்டுப்பல் - 3
உப்பு - தேவைக்கு

செய்முறை
*காய்ந்த மிளகாயை லேசாக வெறும் கடாயில் வறுக்கவும்.ஆறியதும் உப்பு சேர்த்து பொடிக்கவும்.

*பின் கறிவேப்பிலை+பூண்டு சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.நல்லெண்ணெய் ஊற்றி சாப்பிட சுவையாகயிருக்கும்.


Tuesday 24 May 2011 | By: Menaga Sathia

எலுமிச்சை சாதம் (கர்நாடகா ஸ்டைல்)/ Karnataka Style Lemon Rice

மகியின் குறிப்பை பார்த்து செய்தது.வித்தியாசமா நன்றாகயிருந்தது.நன்றி மகி!!

தே.பொருட்கள்
உதிராக வடித்த சாதம் -2 கப்
எலுமிச்சை பழம் - 1
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க

கடுகு,உ.பருப்பு - தலா1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
மஞ்சள்தூள் - சிறிது
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
வேர்க்கடலை - 1 கைப்பிடி

அரைக்க
கொத்தமல்லி - 1/4 கட்டு
பச்சை மிளகாய் - 3
இஞ்சி - சிறுதுண்டு

செய்முறை

*அரைக்க கொடுத்துள்ளவைகளை ஒன்றிரண்டாக பல்ஸ் போடில் கொரகொரப்பாக அரைக்கவும்.எலுமிச்சை பழத்தில் சாறு பிழியவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து அரைத்த விழுதை சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும்.

*பின் சாதம்+உப்பு சேர்த்து கிளறவும்.

*கடைசியாக எலுமிச்சை சாறு சேர்த்து கிளறி இறக்கவும்.

Sunday 22 May 2011 | By: Menaga Sathia

ப்ளவுஸ் அளவெடுத்து தைப்பது எப்படி / How to measure & Cut Sari blouse...

ப்ளவுஸ் எப்படி அளவெடுப்பது என்று பார்க்கலாம்.

மார்பு சுற்றளவு
இடுப்பு சுற்றளவு
ஷோல்டர்
கையின் நீளம்
கை சுற்றளவு
ஆர்ம்ஹோல் பகுதி
முன் கழுத்து அளவு
பின் கழுத்து அளவு
ப்ளவுஸின் உயரம்.
                                                              

இவைகளை செ.மீ அளவில் அளவுகளைக் குறித்துக் கொண்டு பேப்பரில் வரைந்து வெட்டி அந்த அளவை துணியில் வைத்து வரைந்து வெட்டினால ரொம்ப ஈஸியாக இருக்கும்.ஆர்ம்ஹோல் பகுதியை மட்டும் வளைவுகளை கவனமாக வெட்ட வேண்டும்.


DART பகுதிகளை சரியாக தைத்தால் தான் ப்ளவுஸ் அழகாக  இருக்கும்.எப்போழுதும் துணியை வெட்டும் போது குறித்த அளவை விட 1இங்ச் கூடுதலாக வைத்து வெட்ட வேண்டும்.அப்போழுதுதான் தைக்கும் போது சரியாக இருக்கும்.


A- B = ப்ளவுஸ் உயரம்+2"

A -C =மார்பு சுற்றளவு/8 +2"

C - D = B - L = மார்பு சுற்றளவு / 4+1.5"

A- I =மார்பு சுற்றளவு /3+1/2"

A - E =  ஷோல்டர்/2+1/4"

E - M = 1/2" or 3/4"

A - F =மார்பு சுற்றளவு /12+0.5"

A - H= முன் கழுத்து அகலம் விரும்பிய அளவில்

K -I & N - J = 1" Or 1.5"


K - O = மார்பு சுற்றளவு /12

O - P = P - Q = 1.5"

R - S = R - T = 1" OR 1.5"

E - E' = A - C

E' - V = 1"

E' - W = 2"

பின் பக்க அளவு
B - U = இடுப்பு சுற்றளவு / 4 +1.5"
 
PATTI Part -

A- B = ( K - B) - 1/2"
B - C = இடுப்பு சுற்றளவு/4+1.5"
C- D = ( L - N) - 1"

C -E =0.5"
                                               

கைப்பகுதி
A- B =கையின் நீளம்+1.5"

A - L =மார்பு சுற்றளவு/12+0.5"

L-F=மார்பு சுற்றளவு/8 +2.5"( அ) 3"

B-C=கை சுற்றளவு /2 +1"

B-M=2" + மடித்து தைக்க

E-C=1/2"

G = A TOF நடுப்பகுதி

G-J = 1"

I = G TO F நடுப்பகுதி

I-K =0.5"

N-F = 1"

A-H =1"

(A-H-J-N) Back Syce - பின் பக்க வளைவு

(A-G-K-N-F) Front Syce -முன் பக்க வளைவு

அடுத்து வரும் பகுதியில் எப்படி வெட்டி தைப்பது என்று பார்க்கலாம்...

 நான் முந்தைய பதிவில் பின்னிய குல்லா படத்தின் பேட்டர்ன்..3 - 4 வயது குழ்ந்தைகளுக்கான அளவு...
+ ஊசியை வலதுபக்கமாக வைத்து பின்ன வேண்டும்.

- ஊசியை இடது பக்கமாக வைத்து பின்ன வேண்டும்.

* கடைசியாக முடிக்கும் போது ஊசியை வலதுபக்கமாக இரண்டிரண்டாக  சேர்த்து பின்ன வேண்டும்.அப்படியே இடதுபக்கமாக பின்னி சாதாரண ஊசியில் உல்லன்நூலை கோர்த்து  பெரிய ஊசியை எடுத்துவிட்டு சின்ன ஊசியில் கோர்த்து இணைக்க வேண்டும்.


Thursday 19 May 2011 | By: Menaga Sathia

ஓமம் பிஸ்கட்/Sweet & Salt Ajwain(Omam) Biscuits


மம்( Ajwain, Carom seeds) இந்தியா முழுவதும் பயிரிடப்படுகின்ற ஒரு செடி வகை ஆகும். இதை வாயில் போட்டால் சற்று காரமாக சுறுசுறுவென்று இருக்கும். நல்ல மணமாக இருக்கும். இதன் விதையே மருத்துவப் பயன் கொண்டது.

*ஓமத்தில் கால்சியம் , பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கரோட்டின்(Carotin), தையாமின்(Thiamin), ரிபோபுளேவின்(Rhiboflavin) மற்றும் நியாசின்(Niacin) போன்றவை அடங்கியுள்ளன.

*சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயிற்றுப் பொருமல், வயிற்று வலி, அஜீரணக் கோளாறு உள்ளவர்கள் 100 கிராம் ஓமத்தை 1 லிட்டர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து அது பாதியாக வந்தவுடன் எடுத்து அருந்தினால் மேற்கண்ட அனைத்தும் தீரும்.

*ஓமத்தை பொடித்து உச்சந்தலையில் வைத்து தேய்த்தால் ஜலதோஷம் குறையும்.

*ஓமப்பொடியை துணியில் கட்டி நுகர்ந்தால் மூக்கடைப்பு நீங்கும்.

இதில் பிஸ்கட் எப்படி செய்வது என்று பார்க்கலாம்...

தே.பொருட்கள்
மைதா மாவு - 2கப்
வெண்ணெய் - 50 கிராம் அறை வெப்பநிலையில்
ஓமம் -2 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன்
சர்க்கரை -2 டேபிள்ஸ்பூன்
பால் - மாவு பிசைய தேவையானளவு
தயிர் - 1 டேபிள்ஸ்பூன்(அ)பேக்கிங் சோடா- 1/2 டீஸ்பூன்

செய்முறை

*ஒரு பவுலில் பால் தவிர அனைத்தையும் ஒன்றாக கலக்கவும்.

*தேவையானளவு பால் தெளித்து சப்பாத்திமாவு பதத்தில் கெட்டியாக பிசையவும்.
 *2 பங்காக மாவை பிரித்து மெலிதாக இல்லாமலும்,தடிமனாக இல்லாமலும் உருட்டவும்.

*குக்கீ கட்டரால் விரும்பிய வடிவில் வெட்டவும். (என் பொண்ணுதான் குக்கீ கட்டரால் கட் செய்து கொடுத்தாங்க). 

*பிஸ்கட் உப்பாமல் இருக்க அங்கங்கே முள் கரண்டியால் குத்தி விடவும்.
*அவன் டிரேயில் அடுக்கி 180°C டிகிரியில் 15 - 20 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.

பி.கு
பிஸ்கட் சூடாக இருக்கும் போது மெத்தென்று இருக்கும்.ஆறியதும் க்ரிஸ்பியாக இருக்கும்.
Tuesday 17 May 2011 | By: Menaga Sathia

சீரக புலாவ் / Jeera Pulao

சீர்+அகம்=சீரகம்.வயிற்றுப்பகுதியை சீரமைப்பதில் பெரும் பங்காற்றுகிறது. கார்ப்பு, இனிப்பு சுவையும், குளிர்ச்சித்தன்மையும் கொண்டது. இதன் மணம், சுவை, செரிமானத்தன்மைக்காக உணவுப்பொருட்களில் சேர்க்கப்படுகிறது.

அஞ்சறைப் பெட்டியில் முக்கிய இடம் பெற்ற பொருள் இது.

*வாய்ப்புண், உதட்டுப்புண் குணமாக சீரகம்+சின்னவெங்காயம் இவற்றை லேசாக நெய்விட்டு வதக்கி சாப்பிட‌லாம்.

*கர்ப்பகாலத்தில் ஏற்ப்படும் வாந்தியைக் குறைக்க எலுமிச்சம்பழச் சாற்றுடன் சீரககுடிநீரை சேர்த்துக் குடிக்கலாம்.

*விக்கலை நிறுத்தும் த‌ன்மையுடைய‌து.

*தினமும் தண்ணீருடன் சிறிது சீரகத்தைப் போட்டு நன்கு கொதிக்க வைத்து ‘சீரகக் குடிநீர்’ தயார் செய்து வைத்துக் கொண்டு,நாள்முழுவதும், அவ்வப்போது பருகி வர, எந்தவித அஜீரணக் கோளாறுகளும் வராது. நீர்மூலம் பரவும் நோய்களைத் தடுக்கலாம். பசி ருசியைத் தூண்டும்.

*சீரகத்தை இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறில் கலந்து ஒருநாள் ஊறவைத்துக் கொள்ளவும். இதை, தினம் இருவேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர, பித்தம் மொத்தமாகக் குணமாகும்.

*சிறிது சீரகத்தை மென்று தின்று ஒரு டம்ளர் குளிர்ந்த நீரைக் குடித்தால் தலைச்சுற்று குணமாகும்.இத‌ன் ப‌ய‌ன்க‌ள் ஏராள‌மான‌து.

எப்போழுதும் ஒரே மாதிரி புலாவ் செய்வ‌த‌ற்க்கு ப‌தில் சீர‌க‌ புலாவ் செய்ய‌லாம்.செய்வ‌தும் மிக‌ எளிது.பாகிஸ்தான் ரெஸ்ட்டார‌ண்ட் போனால் இந்த‌ சீரக‌புலாவ் தான் இருக்கும்.சுவையான‌தும் கூட‌.

தே.பொருட்க‌ள்
பாஸ்ம‌தி - 2 க‌ப்
நெய்- 1டேபிள்ஸ்பூன்
பசும்பால் -2 கப்
தண்ணீர் - 1கப்
உப்பு -தேவைக்கு

தாளிக்க‌
கிராம்பு -3
சீர‌க‌ம்- 1டீஸ்பூன்
பிரியாணி இலை -2

செய்முறை
*அரிசியை 10 நிமிடம் ஊறவைத்து கழவி நீரை வடிக்கவும்.

*குக்க‌ரில் நெய் விட்டு தாளிக்க‌ கொடுத்துள்ள‌வைக‌ளைப்போட்டு தாளித்து,அரிசியை போட்டு லேசாக‌ வ‌த‌க்கி பால்+நீர் சேர்த்து 3 விசில் வ‌ரை வேக‌வைத்து ப‌ரிமாற‌வும்.

பி.குப‌சும்பாலுக்கு ப‌தில் தேங்காய்ப்பாலும் சேர்க்க‌லாம்.

Monday 16 May 2011 | By: Menaga Sathia

அஸ்பார‌க‌ஸ் பொரிய‌ல்/ Asparagus Poriyal

 அஸ்பாரகஸ் என்பது ஒரு பூண்டுத்தாவரமாகும்.இதன் இளம்தளிர்கள் மட்டும் உணவாக எடுத்துக் கொள்வார்கள்.பச்சை மற்றும் வெள்ளைக்கலரில் இருக்கும்.

இதில் கொழுப்பு சத்து இல்லை.குறைந்த அளவு கலோரி மற்றும் சோடியம் இருப்பதால் ஆரோக்கிய உணவுன்னு கூட சொல்லலாம்.மேலும் இதில் போலிக் அமிலம்,பொட்டாசியம்,நார் சத்து உள்ளது.போலிக் அமிலம் அதிகம் உள்ளது கர்ப்பிணி பெண்கள் சாப்பிடுவது நலம்.

வடக்கு ஐரோப்பாவில் வெள்ளை அஸ்பாரகஸ் சிறந்த மற்றும் முக்கிய காய்கறியாக பயன்படுத்துவதால் இதனை வெள்ளைத்தங்கம் என்றும் குறிப்பிடுவர்...

வெள்ளை அஸ்பாரகஸை விட பச்சையில் அதிக அளவு வைட்டமின் சி உள்ளது.

இதனை வேகவைத்து மயனைஸூடன் சாப்பிட நன்றாகயிருக்கும்.இதில் முதன்முறையாக பொரியல் செய்தேன் நன்றாக இருந்தது.சுவையான குறிப்புக்கு நன்றி கீதா!!

தே.பொருட்க‌ள்

அஸ்பார‌க‌ஸ் ‍‍- 1க‌ட்டு
பொடியாக‌ ந‌றுக்கிய‌ வெங்காய‌ம் - 1
சாம்பார் பொடி -1 டீஸ்பூன்
தேங்காய்த்துருவல்- 1டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
எண்ணெய்- 1/2டீஸ்பூன்

தாளிக்க‌

க‌டுகு- 1/4 டீஸ்பூன்
உளுத்த‌ம்ப‌ருப்பு- 1/2 டீஸ்பூன்
சீரக‌ம்- 1/4 டீஸ்பூன்
க‌ட‌லைப்ப‌ருப்பு  - 2 டீஸ்பூன்
க‌றிவேப்பிலை  - சிறிது

செய்முறை
*அஸ்பார‌க‌ஸை ந‌ன்கு ம‌ண்போக‌ க‌ழுவி இள‌ம்த‌ளிர்க‌ளை ம‌ட்டும் பொடியாக‌ வெட்டிக்கொள்ள‌வும்.

*த‌ண்டுப்ப‌குதியை தூக்கி எரியாம‌ல் ஸ்டாக்,சூப் செய்ய‌ ப‌ய‌ன்ப‌டுத்த‌லாம்.

*க‌டாயில் எண்ணெய்விட்டு தாளிக்க‌ கொடுத்துள்ள‌வைக‌ளைப்போட்டு தாளித்து வெங்காய‌ம்+சாம்பார்பொடி+உப்பு சேர்த்து வ‌த‌க்க‌வும்.

*பின் ந‌றுக்கிய‌ அஸ்பார‌க‌ஸை சேர்த்து மூடிபோட்டு வேக‌விட‌வும்.த‌ண்ணீர் ஊற்ற‌வேண்டாம்.

*ந‌ன்கு வெந்த‌பிற‌கு தேங்காய்த்துருவ‌ல் சேர்த்து இற‌க்க‌வும்.

Saturday 14 May 2011 | By: Menaga Sathia

சாம்பார் வடை / Sambhar Vadai


வடை செய்முறையினை காண இங்கே க்ளிக் செய்யவும்.

சாம்பார் செய்ய

தே.பொருட்கள்:துவரம் பருப்பு - 1 கப்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
பூண்டுப்பல் - 5
சின்ன வெங்காயம் - 10
நறுக்கிய தக்காளி - 1
பச்சை மிளகாய் - 2
சாம்பார் பொடி - 3/4 டேபிள்ஸ்பூன்
புளிகரைசல் - 1/4 கப்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு
உப்பு +எண்ணெய் = தேவைக்கு
நெய் - 1 டீஸ்பூன்

தாளிக்க:கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன்
பெருங்காயம் - வாசனைக்கு
கறிவேபிலை - சிறிது

செய்முறை:*குக்கரில் துவரம்பருப்பு+பூண்டுப்பல்+மஞ்சள்தூள்+1 கப் நீர் சேர்த்து நன்கு குழைய வேகவிடவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து சின்ன வெங்காயம்+தக்காளி+ப.மிளகாய் சேர்த்து வதக்கி  புளிகரைசல்+உப்பு+சாம்பார்பொடி சேர்த்து கொதிக்கவிடவும்.

*நன்கு கொதித்ததும் வேகவைத்த துவரம்பருப்பு சேர்த்து  கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

*பரிமாறும் போது ஒரு சிறிய தட்டில் வடை வைத்து அதன் மேல் சாம்பாரை ஊற்றி விரும்பினால் நெய்+ பொடியாக நறுக்கிய வெங்காயத்தை மேலே தூவி சிறிது நேரம் கழித்து சாப்பிட நன்றாகயிருக்கும்.

Tuesday 10 May 2011 | By: Menaga Sathia

கொத்தமல்லி புலாவ் / Coriander Pulao


தே.பொருட்கள்:

பாஸ்மதி - 2 கப்
ஊற வைத்த சென்னா - 1/4 கப்
தேங்காய்ப்பால் - 1 கப்
நெய் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு+ எண்ணெய் = தேவைக்கு

அரைக்க:

கொத்தமல்லி - 1 கட்டு
சின்ன வெங்காயம் - 5
பச்சை மிளகாய் - 4
தேங்காய்த்துறுவல் - 1/4 கப்
சீரகம் - 1 டீஸ்பூன்

தாளிக்க:

சோம்பு - 1 டீஸ்பூன்
கிராம்பு - 3

செய்முறை:

*அரைக்க கொடுத்துள்ள பொருட்களை நைசாக அரைக்கவும்.

* குக்கரில் எண்ணெய்+ நெய் விட்டு சோம்பு+கிராம்பு சேர்த்து தாளித்து அரைத்த விழுதை சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.

*வதங்கியதும் அரிசி+தேங்காய்ப்பால்+சென்னா+உப்பு+2 கப் நீர் சேர்த்து 3 விசில் வரை வேகவைத்து எடுக்கவும்.

Sunday 8 May 2011 | By: Menaga Sathia

நான் முதன்முதலில் பின்னிய குல்லா..../ My First Big Needle Knitting

இப்பொழுதுதான் என் ப்ளாக்கில் சமையல் தவிர்த்து வேறு ஒரு பதிவு போடுகிறேன்.தொடர்பதிவு,சமையல் இவற்றை மட்டும்தான் என் ப்ளாக்கில் எழுதி வந்தேன்.முதன்முதலில் க்ராப்ட் ஒர்க் பற்றி எழுதுகிறேன்.
நான் வசிக்கும் கீழ் வீட்டு ப்ரெஞ்சுக்கார பாட்டியிடம் கற்றுக்கொண்டது.அவர்களும் ரொம்ப ஆர்வமா சொல்லிக் கொடுத்தாங்க.நான் பேசுற ப்ரெஞ்சை பாட்டி சூப்பரா புரிஞ்சிக்கிறாங்க.அதைவிட பாட்டிக்கு ஆங்கிலமும் தெரியாது.

இது நான் முதல் முதலில் என் பொண்ணுக்காக பின்னிய உல்லன் குல்லா.இதை பின்னி முடிக்க எனக்கு 10 நாள் ஆனது.பாட்டி 1 1/2  மணிநேரத்தில் முடித்துவிடுவாங்களாம்.ரொம்ப ஆச்சர்யமா இருக்குல்ல...


2நாளில் அடிப்படை பின்னல்கள் தெரிந்துக்கொண்டேன்.ஒவ்வொரு முறையும் தவறாக பின்னிய போது அதை பொறுமையோடு எபப்டி சரியா பின்னனும்னு சொல்லிக் கொடுத்தாங்க.அவங்களுக்கு ரொம்ப பொறுமை.

நான் இதுபோல் மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுக்கும்போது எனக்கு அந்த பொறுமை வருமான்னு தெரியல....
என்னுடைய ஆர்வத்தினால் பாட்டி எனக்கு ஒரு உல்லன் நூல்+ஊசி கொடுத்தாங்க.அதில்தான் பின்னுகிறேன்.

She is such a very Kind,Intelligent & Patience Woman.I Love Her Very Much...A Big Hug to that Grandma...
இதை பின்னுவதற்க்கு 2 ஊசிகள் வேணும்.படத்தில் ஒரு ஊசிதான் இருக்கு.இன்னொரு ஊசில் நான் ஸ்வெட்டர் பின்னிக் கொண்டிருப்பதால் ஜோடியாக எடுக்கமுடியல.கற்றுக்கொண்ட பிறகு ரொம்ப‌ ஈஸியாக இருக்கு.
ஒரு உல்லன் பண்டல் வாங்கினால் பெரியவர்களுக்கு ஒரு ஸ்வெட்டர் பின்னலாம்.விலையும் 6 யூரோதான்.

முடிந்தால் பாட்டி பின்னும்போது வீடியோவாக எடுத்துப் போட முயற்சிக்கிறேன்.

அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்!!

தோழி சிநேகிதி,விமிதா கொடுத்த விருது.2வருக்கும் மிக்க நன்றி!!
Thursday 5 May 2011 | By: Menaga Sathia

ஹைதராபாத் சிக்கன் பிரியாணி/ Hyderabad Chicken Biryani

தே.பொருட்கள்

சிக்கன் - 1/2 கிலோ
பாஸ்மதி - 4 கப்
வெங்காயம் - 2 பெரியது
பொடியாக நறுக்கிய புதினா கொத்தமல்லி - 1/2 கப்
இஞ்சி பூண்டு விழுது - 1/2 டேபிள்ஸ்பூன்
தயிர் - 1/2 கப்
கீறிய பச்சை மிளகாய் -2
மிளகுத்தூள் -1/2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
சீரகத்தூள்+தனியாத்தூள் - தலா 1/2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் -1/4 டீஸ்பூன்
எண்ணெய் +நெய் - தலா 1 டேபிள்ஸ்பூன்
கறுப்பு ஏலக்காய் - 4
பச்சை ஏலக்காய் - 2
பட்டை - 1 பெரியதுண்டு
கிராம்பு - 6
பிரியாணி இலை - 2
எலுமிச்சை சாறு - 1 டேபிள்ஸ்பூன்
குங்குமப்பூ(அ)மஞ்சள் கலர் - சிறிதளவு
உப்பு - தேவைக்கு

செய்முறை
*வெங்காயத்தை மெலிதாக நீளவாக்கில் அரிந்து பொன்னிறமாக எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

*ஒரு பவுலில் சிக்கன்+எலுமிச்சை சாறு +உப்பு+பாதி புதினா கொத்தமல்லிதழை+சிறிதளவு பொரித்த வெங்காயம்+பச்சை மிளகாய்+தயிர்+மிளகுத்தூள்+மிளகாய்த்தூள்+சீரகத்தூள்+தனியாத்தூள்+மஞ்சள்தூள்+
பிரியாணி இலை -1+கறுப்பு ஏலக்காய் - 2+பச்சை ஏலக்காய் -1+கிராம்பு - 3+பட்டை -பாதி துண்டு இவை அனைத்தையும் ஒன்றாக கலந்து 1/2 மணிநேரம் ஊறவைக்கவும்.


*வேறொரு பாத்திரத்தில் தண்ணீர் நிறைய வைத்து கொதிக்க விடவும்.அதில் பாதி உப்பு+மீதமுள்ள ஏலக்காய்+பட்டை கிராம்பு சேர்த்து அரிசியை பாதி வேக்காடாக வடிக்கவும்.

*வேறொரு பெரிய பாத்திரத்தில் ஊறவைத்த சிக்கன்+சிறிது புதினா கொத்தமல்லி+சிறிது பொரித்த வெங்காயம் போடவும்.

*அதன்மேல் 1டேபிள்ஸ்பூன் எண்ணெய்+1/2 கப் கொஞ்சம் குறைவாக நீர் ஊற்றவும்.

 *அதன்மேல் சாதம்+நெய்+மீதமுள்ள புதினா கொத்தமல்லி,பொரித்த வெங்காயம்+கலரை சிறிது தண்ணீரில் கரைத்து ஊற்றவும்.
*ஆவி வெளியே போகாதவாறு சிறுதீயில் மூடி போட்டு 30 நிமிடம் வேகவைத்து எடுக்கவும்.

Tuesday 3 May 2011 | By: Menaga Sathia

அவியல் / Aviyal | Onam Sadya Recipes

தே.பொருட்கள்

முருங்கைக்காய் - 1
தக்காளிக்காய் -2
மஞ்சள்தூள் -1/2 டீஸ்பூன்
மாங்காய் -1
புளிகரைசல்- 1/4 கப்
கேரட் - 1
பீன்ஸ் - 10
வாழைக்காய் - 1
கறிவேப்பிலை - சிறிது
தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு

அரைக்க
தேங்காய்த்துறுவல் - 3/4 கப்
பச்சை மிளகாய் - 3
சீரகம் - 1 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் - 3

செய்முறை

*அரைக்க கொடுத்துள்ள பொருட்களை வெங்காயத்தை தவிர மீதியுள்ள பொருட்களை சேர்த்து நைசாக அரைக்கவும்.கடைசியாக வெங்காயத்தை சேர்த்து 1 சுற்று சுற்றி எடுக்கவும்.

*காய்களை சற்றே பெரியதுண்டுகளாக நறுக்கவும்.

*வாழைக்காயை தோலுடனே துண்டுகளாக நறுக்கவும்.

*முதலில் முருங்கை+பீன்ஸ்+கேரட் இவற்றை குறைவான நீர் விட்டு வேகவைக்கவும்.
*இவை பாதி வெந்ததும் வாழைக்காய்+1/4 டீஸ்பூன் மஞ்சள்தூள் சேர்த்து வேகவைக்கவும்.

*அடிக்கடி கரண்டியால் கிளறிவிடக்கூடாது,காய் குழைந்துவிடும்.

* காய்கள் முக்கால் பாகம் அனைத்தும் வெந்ததும் மாங்காய்+தக்காளிக்காய்+மீதமுள்ள மஞ்சள்தூள் சேர்த்து வேகவைக்கவும்.
*அனைத்து காய்களும் ஒரளவு வெந்துருக்கும் இப்பொழுது புளிகரைசல்+உப்பு +அரைத்த மசாலா சேர்த்து கொதிக்கவிடவும்.
*பச்சை வாசனை அடங்கியதும் கறிவேப்பிலை +தேங்காய் எண்ணெய் சேர்த்து இறக்கவும்.

பி.கு
*புளிக்கு பதில் தயிர் சேர்ப்பதாக இருந்தால் அவியல் நன்றாக ஆறியபின்னரே தயிரை சேர்க்கவும்.சூடாக சேர்த்தால் அவியல் நீர்த்துவிடும்.

*இதில் வெள்ளைபூசணி,சேனைக்கிழங்கு,பூசணிக்காய் சேர்க்கலாம்.

*முதலில் தாமதமாக வேகும் காய்களைச் வேகவைத்த பின்னரே மற்ற காய்களை சேர்த்து வேகவைக்கும்.இப்படி செய்வது காய்கள் குழையாமல் இருக்கும்.


Monday 2 May 2011 | By: Menaga Sathia

வெஜ் பிஸ்ஸா/ Veg Pizza

                                                                        

தே.பொருட்கள்:
மைதா மாவு - 3 கப்
ஆலிவ் எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
ஈஸ்ட் - 1 டீஸ்பூன்
சர்க்கரை - 1 டீஸ்பூன்
வெதுவெதுப்பான நீர் - 1/2 கப்
உப்பு - தேவைக்கு

ஸ்டப்பிங் செய்ய:
டின் காளான் - 200 கிராம்
துருவிய சீஸ் - 1 கப்
ஆலிவ் காய் - 5
நீளவாக்கில் நறுக்கிய குடமிளகாய் - 1
தக்காளி சாஸ் - தேவைக்கு
ஆலிவ் எண்ணெய் - தேவைக்கு

தக்காளி சாஸ் செய்ய

செஃப் சஞ்சய் கபூரின் குறிப்பை  பார்த்து செய்தது.
தக்காளி - 2
பொடியாக நறுக்கியத்தக்காளி - 1
பொடியாக நறுக்கிய சிகப்பு குடமிளகாய் - 1/4 கப்
பொடியாக நருக்கிய வெங்காயம் - 1 சிறியது
பொடியாக நறுக்கிய பூண்டுப்பல் - 2
டிரை பேசில் - 1/2 டீஸ்பூன்
டிரை ஆரிகனோ - 1/2 டீஸ்பூன்
உப்பு+சர்க்கரை -தலா 1/4 டீஸ்பூன்


செய்முறை
*தக்காளியை கொதிநீரில் போட்டு தோலுரித்து அரைக்கவும்.

*கடாயில் ஆலிவ் எண்ணெய் விட்டு வெங்காயம்+பூண்டு+குடமிளகாய்+தக்காளி அனைத்தையும் நன்கு வதக்கவும்.

*நன்றாக மசிந்த பின் அரைத்த தக்காளிவிழுதை சேர்த்து நன்கு கொதித்து கெட்டியாக வரும் போது உப்பு+சர்க்கரை +காய்ந்த பேசில் ஆரிகனோ சேர்த்து இறக்கவும்.

*இந்த சாஸை 1 வாரம் வரை ப்ரிட்ஜில் வைத்திருந்து பயன்படுத்தலாம்.

                                          
 
பிஸ்ஸா செய்முறை :
*வெதுப்பான நீரில் சர்க்கரை+ஈஸ்ட் சேர்த்து கலந்து 10 நிமிடம் வைக்கவும்.

*மாவில் உப்பு+ஆலிவ் எண்ணெய் கலந்து ஈஸ்ட் கலந்த நீரை சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு கெட்டியாக பிசைந்து ஈரமான துணியால் மூடி வெப்பமான் இடத்தில் வைக்கவும்.

*2 மணிநேரம் கழித்து மாவு 2 மடங்காக உப்பியிருக்கும் மாவை பிசைந்து  நடுத்தர சைஸில் உருண்டை போடவும்.
*மாவை மெலிதாக தட்டி ஒரங்களை லேசாக மடித்துவிடவும்.

*அதன்மேல் தக்காளிசாஸ்+காளான்+ஆலிவ் காய்+குடமிளகாய்+சீஸ் என ஒன்றன் பின் ஒன்றாக வைக்கவும்.

*230°C டிகிரிக்கு முற்சூடு செய்த அவனில் 15 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.
 
பி.கு:
அவரவர் அவனுக்கேற்ப அவன் டைம் செட் செய்யவும்.
01 09 10