Monday 30 April 2012 | By: Menaga Sathia

மஸ்கார்பொன் சீஸ்/Homemade Mascarpone Cheese

மஸ்கார்பொன் சீஸ் பெரும்பாலும் இத்தாலியன் டெசர்ட்களுக்கு அதிகம் பயன்படுத்தப்படுத்துவார்கள்...

தே.பொருட்கள்

Heavy Cream - 1 லிட்டர்
எலுமிச்சை சாறு - 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை
*பாத்திரத்தில் சிறிது வெண்ணெய் தடவி க்ரீமை ஊற்றி மிதமான தீயில் கொதிக்கவிடவும்.

*க்ரீம் கொதிக்க ஆரம்பித்ததும் எலுமிச்சை சாறை கொஞ்ச கொஞ்சமாக ஊற்றி கலக்கிவிடவும்.

*பனீர் செய்வது போல் பாலை திரியவிடக்கூடாது.எலுமிச்சை சாறை ஊற்றியதும் அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.

*மஸ்லீன் துணியில் க்ரீமை ஊற்றி 12 மணிநேரம் நன்கு வடியவிடவும்.

*இப்பொழுது மஸ்கார்பொன் சீஸ் ரெடி!!



Tuesday 24 April 2012 | By: Menaga Sathia

பேக்ட் வெண்டைக்காய் பகோடா /Baked Ladies Finger Pakoda

 தே.பொருட்கள்
வெண்டைக்காய் - 1/4 கிலோ
கடலைமாவு - 3 டேபிள்ஸ்பூன்
அரிசிமாவு - 2 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள் -1 டேபிள்ஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்
எண்ணெய் - 1  டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
ஆம்சூர் பவுடர் - 1 டீஸ்பூன்

செய்முறை

*வெண்டைக்காய் மெலிதாக நீளவாக்கில் நறுக்கி மேற்கூறிய அனைத்து பொருட்களையும் ஒன்றாக கலந்து 15 நிமிடம் வைக்கவும்.தண்ணீர் சிறிதும் சேர்க்ககூடாது.

*அவன் டிரெயில் அலுமினியம் பாயில் போட்டு எண்ணெய் தடவி வெண்டைக்காய்களை நன்றாக பரப்பி விடவும்.


*அவனை 210 °C க்கு முற்சூடு செய்து 20-25 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும்.10 நிமிடத்திற்க்கு ஒருமுறை இடையிடையே திருப்பி விடவும்.
Friday 20 April 2012 | By: Menaga Sathia

மைக்ரோவேவ் பாப்கார்ன் /MW Popcorn

தே.பொருட்கள்
காய்ந்த சோள முத்துக்கள் -1/2 கப்
எண்ணெய் - 1 டீஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன்

செய்முறை

*மைக்ரோவேவ் பாத்திரத்தில் எண்ணெய்+உப்பு கலந்து மைக்ரோவேவில் 1 நிமிடம் வைக்கவும்.


*அதனுடன் சோளத்தைக் கலந்து பாத்திரத்தை மூடி மீண்டும் 3 நிமிடங்கள் வைத்தெடுக்கவும்.

*4 நிமிடத்தில் சுவையான பாப்கார்ன் ரெடி!!


Thursday 19 April 2012 | By: Menaga Sathia

வேகன் வாழைப்பழ கோகோ ப்ரெட்/ Vegan - Gluten Free Banana & Cocoa Bread

                                  
முதல்முறையாக Vegan  Recipe (Non Dairy Product Recipes) செய்தேன்.வேகவைத்த சென்னா இருந்தது,அதையும் மசித்து சேர்த்து செய்து பார்த்தேன்,நன்றாக வந்ததில் சந்தோஷமா இருந்தது.

தே.பொருட்கள்

பாகம் - 1

ஒட்ஸ் -1 கப் (பொடித்தது)
கம்பு மாவு - 3/4  கப்
கோகோ பவுடர் - 1/4 கப்
பேக்கிங் பவுடர் - 1 டீஸ்பூன்
பேக்கிங் சோடா -1/2 டீஸ்பூன்
வேக வைத்த சென்னா - 3/4 கப் (மசித்துக் கொள்ளவும்)
உப்பு - 1/4 டீஸ்பூன்
ப்ரவுன் சர்க்கரை - 1 1/2 கப் (பொடித்தது)

பாகம் -2

சமையல் எண்ணெய் - 1/4 கப்
நன்கு கனிந்த வழைப்பழம் - 2 மசிக்கவும்
சுடுநீர் - 1 கப்
வெனிலா எசன்ஸ் -1 டீஸ்பூன்

செய்முறை

*அவனை 180°C  15 நிமிடம் முற்சூடு செய்யவும்.

* பாகம் 1ல் கொடுத்துள்ள பொருட்களை நன்றாக கலக்கவும்.

*பாகம் -2ல் கொடுத்துள்ள பொருட்களையும் தனியாக ஒரு பாத்திரத்தில் கலக்கவும்.
*பாகம் - 2ல் கொடுத்துள்ள பொருட்களை பாகம் -1 பொருட்களுடன் மிருதுவாக கலக்கவும்.
*ப்ரெட் பானில் எண்ணெய் தடவி கலவையை ஊற்றி 45-50 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.



Monday 16 April 2012 | By: Menaga Sathia

கத்திரிக்காய் தக்காளி மசாலா / Eggplant Tomato Masala


தே.பொருட்கள்:
சின்ன கத்திரிக்காய் - 10
பொடியாக அரிந்த வெங்காயம் - 1 பெரியது
பொடியாக அரிந்த தக்காளி - 4 பெரியது
வரமிளகாய்த்தூள்,தனியாத்தூள் - தலா 1/2 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லித்தழை - மேலே தூவ
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
 
அரைக்க:
வேர்க்கடலை - 1/2 கப்
வெள்ளை எள் - 1 டேபிள்ஸ்பூன்

தாளிக்க:
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1டீஸ்பூன்
சீரகம் - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
 
செய்முறை :
*கத்திரிக்காயை கட் செய்து ,சிறிது எண்ணெய் சேர்த்து பிசிறி முற்சூடு செய்த அவனில் 210°C டிகிரியில் 15 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.


*அரைக்க கொடுத்துள்ளவைகளை நைசாக அரைக்கவும்.


*கடாயில்எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து வெங்காயம்+இஞ்சி பூண்டு விழுது+தக்காளி+தூள் வகைகள்+உப்பு அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.


*அனைத்தும் நன்கு வதங்கியதும் கத்திரிக்காயை சேர்த்து நன்கு கிளறி அரைத்த விழுதுகளை சேர்த்து நன்கு பிரட்டவும்.


*இறக்கும் சமயத்தில் கொத்தமல்லித்தழையை தூவி இறக்கவும்.

பி.கு

கத்திரிக்காயை எண்ணெயில் பொரிக்காமல் அவனில் க்ரில் செய்து செய்துள்ளேன்.புளிக்கு பதில் தக்காளியை நிறைய சேர்த்திருக்கேன்.இந்த முறையில் செய்வதால் எண்ணெயும் குறைவாக செலவாகும்,சுவையும் நன்றாகயிருக்கும்.

 
Thursday 12 April 2012 | By: Menaga Sathia

பாலக் பனீர் / Palak Paneer


தே.பொருட்கள்
பசலைக் கீரை - 1 கட்டு
வெங்காயம் - 1
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 2
பூண்டுப்பல் - 3
இஞ்சி - சிறுதுண்டு
சீரகம் - 1/2 டீஸ்பூன்
தனியாத்தூள் - 1 டீஸ்பூன்
உப்பு + வெண்ணெய் = தேவைக்கு

செய்முறை
*பனீர் துண்டுகளை சிறிது வெண்ணெயில் பொன்னிறமாக வறுத்து உப்பு கலந்த குளிர்ந்த நீரில் 10 நிமிடம் போட்டு நீரை வடிக்கட்டவும்.

*கடாயில் சிறிது வெண்ணெய் விட்டு வெங்காயம்+தக்காளி+பச்சை மிளகாய்+இஞ்சிபூண்டு+தனியாத்தூள் சேர்த்து வதக்கவும்.

*கீரையை கொதிநீரில் போட்டு வேகவைத்து நீரை வடிக்கட்டவும்.

*ஆறியதும் வெங்காய கலவையுடன் கீரையும் உப்பு சேர்த்து நைசாக அரைக்கவும்.

*கடாயில் வெண்ணெய் விட்டு சீரகம் போட்டு தாளித்து அரைத்த கலவையை ஊற்றி 5நிமிடம் கொதிக்கவிடவும்.

*கலவை கெட்டியாக இருந்தால் கீரைவேகவைத்த நீரை சேர்க்கவும்.பின் பொரித்த பனீர் துண்டுகளை சேர்த்து இறக்கவும்.

*சப்பாத்தி,நெய் சாதத்துடன் சாப்பிட நன்றாகயிருக்கும்.

பி.கு
விரும்பினால் ப்ரெஷ் க்ரீம் சேர்க்கலாம்.

Monday 9 April 2012 | By: Menaga Sathia

மீன் பிரியாணி /Fish Biryani

 பிரியாணியில், மீன் பிரியாணி மிகவும் சுவையானது.சமைப்பதற்க்கு நீண்ட நேரம் ஆனாலும்இதனை மிகவும் பொறுமையாக செய்தால் நன்றாக வரும்.அஸ்மா அவர்களின் குறிப்பை பார்த்து இந்த  பிரியாணியை செய்தேன்.சுவையான குறிப்புக்கு மிக்க நன்றி அஸ்மா!!

தே.பொருட்கள்


பாகம் - 1

மீன் துண்டுகள் -1/2 கிலோ
முட்டை -2
எலுமிச்சை சாரு - 1 டீஸ்பூன்
கடலைமாவு - 4 டேபிள்ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
வரமிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன்
மிளகு,சீரகத்தூள் - 3 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - பொரிப்பதற்க்கு

பாகம் -2

பாஸ்மதி - 3 கப்
வெங்காயம் - 2
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 10
கேரட் - 1
இஞ்சி பூண்டு  விழுது - 3 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன்
தேங்காய்த்துறுவல் - 1 கைப்பிடி
பால் ,தயிர் - தலா 1 கப்
எலுமிச்சைபழம் - 1
புதினா - 1 கைப்பிடி
கொத்தமல்லிதழை - 1 கட்டு
நெய் - 1 1/2 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க
பட்டை -1
ஏலக்காய் - 3
கிராம்பு - 3
பிரியாணி இலை -2

செய்முறை

*மீனை சுத்தம் செய்து அதில் இஞ்சி பூண்டு விழுது+எலுமிச்சை சாறு+மிளகாய்த்தூள்+மஞ்சள்தூள்+மிளகுசீரகத்தூள்+உப்பு சேர்த்து கலந்து 1 மனிநேரம் ஊறவிடவும்.


*பின் எண்ணெய் விட்டு 2 பக்கமும் உடையாமல்  முறுகலாக பொரித்தெடுக்கவும்.

 *முட்டை+கடலைமாவு+சிறிது உப்பு சேர்த்து கட்டியில்லாமல் நன்கு கலக்கவும்.


*வேறொரு கடாயில் பொரித்த மீன் துண்டுகளை முட்டை கலவையில் நன்கு நனைத்து 2 பக்கமும் வேகவைத்து எடுக்கவும்.மீதமுள்ள முட்டை கலவையை மீனிலேயே ஊற்றி பொரித்தெடுக்கவும்.


*இப்பொழுது பிரியாணிக்கான மீன் ரெடி!!
 *வெங்காயத்தை நீளவாக்கிலும்,பச்சை மிளகாயை கீறியும்,தக்காளியை பொடியாகவும் நறுக்கவும்.தேங்காய் துறுவலை நன்கு மைய அரைக்கவும்.கேரட்டில் பாதியை நறுக்கியும்,மீதியை துருவியும் வைக்கவும்.


*புதினா,கொத்தமல்லியை நறுக்கவும்.நறுக்கிய  வெங்காயத்தில் பாதியும்,கொத்தமல்லியில் பாதியும் எண்ணெயில் பொன்முறுவலாக பொரித்தெடுக்கவும்.எலுமிச்சை பழத்திலிருந்து சாறு எடுக்கவும்.


*அரிசியை 1/2 மணிநேரம் , 1 கப் பால்+ 3 1/2 கப் தண்ணீர் சேர்த்து ஊறவைக்கவும்.


*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு தாளித்து வெங்காயம்+இஞ்சி பூண்டு விழுது+பச்சை மிளகாய்+தக்காளி+நறுக்கிய,துருவிய கேரட்+தக்காளி என அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.


*வதங்கிய பின் அரைத்த தேங்காய்+உப்பு+தயிர்+தூள் வகைகள் அனைத்தையும் சேர்த்து வதக்கவும்.


*அனைத்தும் நன்கு சேர்ந்தாற்போல் வரும் போது  எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து 1 கோப்பை அளவு குருமாவை தனியாக எடுத்து வைக்கவும்.


*மீதியுள்ள குருமாவில் அரிசியில் ஊறவைத்த பால்+தன்ணீரை சேர்த்து ஊற்றி நன்கு கலக்கி தேவைப்பட்டால் உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.


*குருமா கொதிவரும் போது அரிசியை போட்டு  வேகவிடவும்.


*தண்ணீர் நன்கு வற்றி அரிசி 3/4 பதமாக  வெந்து வரும் போது பாதி அரிசியை எடுத்து தனியாக வைக்கவும்.


*மீதி சாதத்தில் பொரித்த மீன் துண்டுகள்+தனியாக எடுத்துவைத்த குருமா+பொரித்த வெங்காய மல்லித்தழை தூவி விடவும்.


*அதன்மீது எடுத்துவைத்துள்ள மீதி சாதத்தை  போட்டு மீதமுள்ள வெங்காய,மல்லி கலவை+நெய் ஊற்றி விடவும்.


                                          
*அதன்மீது எடுத்துவைத்துள்ள மீதி சாதத்தை  போட்டு மீதமுள்ள வெங்காய,மல்லி கலவை+நெய் ஊற்றி விடவும்.

*190°C  டிகிரிக்கு அவனை முற்சூடு செய்து 20 நிமிடம் வைத்து எடுக்கவும்.

*பரிமாறும் போது சாதம்+மீனை உடையாமல் கிளறி எடுத்து பரிமாறவும்.

பி.கு
*நான் பயன்படுத்தியிருப்பது வஞ்சீர மீன்.மீனை 2 முறை பொரிப்பதால் உடையாமல் இருக்கும்.

*இதற்க்கு அதிகம் முட்கள் இல்லாத மீனைதான் பயன்படுத்த வேண்டும்.வஞ்சீரம்மீன் (நெய் மீன்/அருக்குலா மீன்),கொடுவா மீன்,கடல் சால்மன் மீன்,காக்கை மீன்,விலை  மீன்,பெரிய தேங்காய் பாரை மீன் இவற்றை பயன்படுத்தலாம்.

*கேரட் சேர்ப்பதால் பிரியாணி சுவையாகவும்,கலராகவும்  இருக்கும்.


Thursday 5 April 2012 | By: Menaga Sathia

மைக்ரோவேவ் ஒட்ஸ் மோர்க்களி/MW Oats Morkali

தே.பொருட்கள்

ஒட்ஸ் - 1 கப்
புளித்த மோர் - 3/4 கப்
உப்பு -தேவைக்கு

அரைக்க

இஞ்சி துறுவல் - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் -2
கொத்தமல்லித்தழை - சிறிதளவு

தாளிக்க
எண்ணெய் - 2 டீஸ்பூன்
கடுகு,உளுத்தமபருப்பு,பெருங்காயத்தூள் - தலா 1/4 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 1/2 டீஸ்பூன்
மோர் மிளகாய் -4
கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை
*அரைக்க கொடுத்துள்ளவைகளை கொரகொரப்பாக அரைக்கவும்.

*மோரில் ஒட்ஸை 10 நிமிடம் ஊறவைத்து நைசாக அரைக்கவும்.அதனுடன் உப்பு+அரைத்த விழுது சேர்த்து கலந்து வைக்கவும்.

*மைக்ரோவேவ் பாத்திரத்தில் எண்ணெய் விட்டு மைக்ரோவேவில் ஹையில் 1 நிமிடம் வைத்தெடுத்து தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்து மீண்டும் 1 நிமிடம் வைக்கவும்.

*பின் ஒட்ஸ் கலவையை ஊற்றி 5 நிமிடங்கள் வைக்கவும்.இடையிடையே ஒவ்வொறு நிமிடத்திற்க்கும் எடுத்து கலக்கி விடவும்.

*வெந்ததும் எண்ணெய் தடவிய தட்டில் கொட்டி ஆறியதும் துண்டுகள் போடவும்.

Monday 2 April 2012 | By: Menaga Sathia

முட்டையில்லாத ஸ்பாஞ்ச் கேக் /(Without Butter &Egg) Rose Essence Sponge cake


இன்றோடு என் வலைப்பூவில் எழுத  தொடங்கி 3 ஆண்டுகள் நிறைவடைகின்றது....

தே.பொருட்கள்

கேக் மாவு - 1& 1/2 கப்
கெட்டி  தயிர்  -  1 கப்
சர்க்கரை - 3/4 கப் (பொடிக்கவும்)
பேக்கிங் பவுடர் -2 டீஸ்பூன்
ரோஸ் எசன்ஸ் - 2 டீஸ்பூன்
சமையல் எண்ணெய் - 1/2 கப்

செய்முறை

*அவனை 180°C 10 நிமிடங்கள் முற்சூடு செய்யவும்.

*கேக் மாவில் பேக்கிங் பவுடரை கலந்து 2 முறை சலிக்கவும்.

*ஒரு பவுலில் சர்க்கரை+தயிர்+எண்ணெய் சேர்த்து நன்கு கலக்கவும்.
 *பின் கொஞ்ச கொஞ்சமாக கேக் மாவை கட்டியில்லாமல் கலக்கவும்.கடைசியாக எசன்ஸ் சேர்த்து மிருதுவாக கலக்கிவிடவும்.
 *கேக் பானில் எண்ணெய்/ வெண்ணெய் தடவி மைதா மாவை பரவலாக தூவி விட்டு,அதிகப்படியான மாவை கொட்டிவிடவும்.அதில் கேக் கலவையை ஊற்றவும்.
 *முற்சூடு செய்த அவனில் 30 நிமிடங்கள் பேக் செய்யவும்.

பி.கு

*இதில் வெண்ணெய்+முட்டை சேர்க்காமல் செய்துள்ளேன்.

*கேக் மாவு = 1 & 1/4 கப் மைதா + 1/4 கப் சோள மாவு(வெள்ளைக் கலர்)

*1 கப் = 250 ml

*2 டீஸ்பூன் பேக்கிங் பவுடர்க்கு பதில் 1 1/4 டீஸ்பூன் பேக்கிங் பவுடர்+3/4 டீஸ்பூன் பேக்கிங் சோடா சேர்க்கலாம்.
01 09 10