Friday 27 December 2013 | By: Menaga Sathia

கிறிஸ்துமஸ் ரவை கேக் /CHRISTMAS RAVA CAKE | VIVIKUM CAKE | PONDICHERRY SPL VIVIKUM CAKE

அக்காவிடம் கற்றுக் கொண்ட குறிப்பு..

இதில் ரவையை வெண்ணெயில்  வறுத்து 5 நாள் ஊறவைத்து செய்யவேண்டும்.மேலும் உலர் பழங்களையும் ரம் அல்லது ஆரஞ்சு ஜூஸில் கேக் செய்ய 5 நாள் முன்பு ஊறவைக்கவேண்டும்.

இதில் கப் அளவு நான் பயன்படுத்தியிருப்பது ரைஸ்குக்கர் கப்.

தே.பொருட்கள்

ரவை - 2 கப்
சர்க்கரை - 1 கப்
வெண்ணெய் -150 கிராம்
ரம் - 1/4 கப்
கேரவே சீட்ஸ் / Caraway Seeds - 1 டீஸ்பூன்
டூட்டி ப்ரூட்டி -1/4 கப்
முந்திரி - 1/4 கப்
திராட்சை -1/8 கப்
முட்டை -  4
வெனிலா எசன்ஸ் -1 டீஸ்பூன்


செய்முறை

*ரவையை 150 கிராம் வெண்ணெயில் வறுத்து சூடு ஆறியதும் மூடி வைத்து 5 நாள் ஊறவிடவும்.தினமும் கிளறிவிடவும்.



*டூட்டி ப்ரூட்டி+முந்திரி+திராட்சை இவற்றை ஒன்றாக கலந்து ரம்மில் 5 நாள் ஊறவைக்கவும்.

*அவனை 180°C முற்சூடு செய்யவும்.

*முட்டையின் வெள்ளை மற்றும் மஞ்சள் கருவினை தனியாக பிரிக்கவும்.

*வெள்ளை கருவினை நன்கு பீட்டரால் நுரை வரும்வரை அடித்துக் கொள்ளவும்.

*பாத்திரத்தில் சர்க்கரை +மஞ்சள் கரு சேர்த்து சர்க்கரை கரையும் வரை நன்கு  பீட்டரால் கலக்கவும்.

*சர்க்கரை கரைந்ததும் வெனிலா எசன்ஸ் +ஊறவைத்து உலர் பழங்கள் சேர்த்து மிருதுவாக கலக்கவும்.

*இவற்றுடன் ஊறவைத்த ரவை மற்றும் வெள்ளை கரு என மாற்றி மாற்றி சேர்த்து கலக்கவும்.கடைசியாக கேரவே  விதைகளை சேர்த்து கலக்கவும்.

*கேக் பானில் வெண்ணெய் தடவி ஊற்றி 50- 55 நிமிடங்கள் வரை பேக் செய்து எடுக்கவும்.





Thursday 19 December 2013 | By: Menaga Sathia

சாமை பிஸிபேளாபாத் / Saamai Bisi Bele Bath | Little Millet Bisi Bele Bath | Millet Recipe |Diabetic Recipe


சாமை - சிறுதானியங்களில் ஒன்று.

* இது எலும்புகளுக்கு இடையில் இருக்கும் தசைகளை வலிமை பெற செய்கிறது.

*வயிறு தொடர்பான நோய்களை கட்டு படுத்தவும்,காய்ச்சல் காரணமாக ஏற்படும் நாவறட்சியை போக்கவும் வல்லது.

தே.பொருட்கள்:

சாமை அரிசி  - 1/3  கப்
துவரம்பருப்பு - 1/4  கப்
நறுக்கிய காய்கறிகள் - 3/4 கப்
கெட்டி புளிகரைசல் - 1/4 கப்
நெய் - 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
பொடியாக நறுக்கிய தக்காளி -1 சிறியது
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை -சிறிதளவு
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

* நான் சேர்த்திருக்கும் காய்கள் முருங்கைக்காய்+கத்திரிக்காய் + கேரட்+பீன்ஸ்+சௌசௌ

தாளிக்க:
கடுகு - 1/2  டீஸ்பூன்
பெருங்காயத்தூள்- 1/4டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து

வறுத்து பொடிக்க

தனியா - 2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் -1
கடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
மிளகு+சீரகம்  -தலா 1/2 டீஸ்பூன்
பட்டை -1 சிறுதுண்டு
ஏலக்காய்- 2
கிராம்பு -2
அன்னாச்சிப்பூ -1
கொப்பரைத்துறுவல் -1 1/2 டேபிள்ஸ்பூன்
சாமை அரிசி

 
செய்முறை :

*சாமை அரிசி+துவரம்பருப்பு சேர்த்து கழுவி 1  கப் நீரில் ஊறவைக்கவும்.

*ஊறவைத்த அரிசி பருப்பை அதே நீரோடு குக்கரில் 3 விசில் வரை வேகவைக்கவும்.

*வறுத்து பொடிக்க கொடுத்துள்ளவைகளை நைசாகவோ அல்லது விழுதாகவோ அரைக்கவும்.

*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம்+தக்காளி+காய்கள் என ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கி 1/2 கப் நீர் சேர்த்து வேகவிடவும்.

*பாதியளவு காய் வெந்ததும் புளிகரைசல்+உப்பு+பொடித்த பொடி சேர்த்து மேலும் 5 நிமிடம் கொதிக்கவைக்கவும்.

*இவற்றை வேகவைத்த அரிசி பருப்போடு சேர்த்து மேலும் 1 கப் நீர் சேர்த்து 1 விசில் வரை வேகவிடவும்.

*ப்ரெஷ்ஷர் அடங்கியதும் தாளித்து சேர்த்து,கொத்தமல்லித்தழை+நெய் சேர்த்து கிளறி சிப்ஸ் அல்லது வறுவலோடு சேர்த்து பரிமாறவும்.


பி.கு

*இதில் சாமை அரிசிக்கு பதில் ப்ரவுன் ரைஸ் அல்லது கோதுமைரவை சேர்த்து செய்யலாம்.

*உப்பின் அளவை பார்த்து சேர்க்கவும்.

*ஆறியதும் சாதம் கெட்டியாகிவிடும்,கொஞ்சம் தளர்த்தியாக இருக்கும்போதே சூடாக பரிமாறவும்.
Monday 16 December 2013 | By: Menaga Sathia

கிறிஸ்துமஸ் யூல் லாக் கேக் / Christmas Yule Log Cake | Bûche de Noël | Home Bakers Challenge

இந்த மாதம் Home Bakers Challenge -ல்  ப்ரியா ரஞ்சித அவர்கள் கிறிஸ்துமஸ் முன்னிட்டு கேக்,குக்கீஸ் மற்றும் யூல் லாக் பிரபலமான ப்ரெஞ்ச் டெசர்ட்  மற்றும் ப்ரெட் ரெசிபிகளை கொடுத்திருக்காங்க.

அதில் நான் யூல் லாக் ரெசிபியை செய்துள்ளேன்..மிக நன்றாக வந்தது.மிக்க நன்றி ப்ரியா சுரேஷ் மற்றும் ப்ரியா ரஞ்சித் !!


Recipe Source : Nigella Lawson

தே.பொருட்கள்

ஸ்பாஞ்ச் கேக் செய்ய

முட்டை -6 அறை வெப்ப நிலை
சர்க்கரை -3/4 கப்
கோகோ பவுடர் - 1/2 கப்
வெனிலா எசன்ஸ் - 1 டீஸ்பூன்
ஐசிங் சுகர் -5 டீஸ்பூன்  அலங்கரிக்க

ஐசிங் செய்ய

Bittersweet Chocolate (Chopped) - 1 கப்
வெண்ணெய் -  200 கிராம்
ஐசிங் சுகர் - 1 1/3 கப்
வெனிலா எசன்ஸ் - 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை

*அவனை 180°C 10 நிமிடங்கள்  முற்சூடு செய்யவும்.

*முட்டை வெள்ளை மற்றும் மஞ்சள் கருவினை தனிதனியாக பிரிக்கவும்.

*மஞ்சள் கருவுடன் சர்க்கரை சேர்த்து வெளிர் மஞ்சள் கலர் வரும் வரை நன்கு கலக்கவும்.

*அதில் கோகோ பவுடர்+வெனிலா எசன்ஸ் சேர்த்து கலக்கவும்.

*மற்றொரு பாத்திரத்தில் வெள்ளை கருவினை நன்கு நுரைபோல் வரும் வரை கலக்கவும்.

*இதனை  மஞ்சள் கருவுடன் மிருதுவாக கலக்கவும்.


*பேக்கிங் டிரேயில் வெண்ணெய் தடவி Parchment Paper போட்டு அதன் மீதும் வெண்ணெய் தடவி  முட்டை கலவையினை ஊற்றி 10-15 நிமிடங்கள் வரை பேக் செய்து எடுக்கவும்.

*அவனிலிருந்து கேக்கை எடுத்து அதன்மீது ஐசிங் சுகரை தூவி விடவும்.ஒருதுணியை நீரில் நனைத்து நன்கு பிழிந்து அதன்மீது ஸ்பாஞ் கேக்கினை கவித்து  Parchment Paper-ஐ எடுக்கவும்.

*இப்போழுது  அதன்மீது மறுபடியும் ஐசிங் சுகரை தூவி துணியோடு சேர்த்து கேக்கினை மெதுவாக சுருட்டி 10 நிமிடங்கள் வைத்திருந்து விரிக்கவும்.

*இதனிடையே  சாக்லேட்டினை டபுள் பாய்லரில் உருக்கி ஆறவிடவும்.

*சர்க்கரை +வெண்ணெய் சேர்த்து நன்கு கலக்கி ஆறவைத்த சாக்லேட் கலவை மற்றும் வெனிலா எசன்ஸ் சேர்த்து கலக்கினால் ஐசிங் ரெடி!!

*இந்த ஐசிங்கை கேக்கின் மீது தடவி மெதுவாக சுருட்டவும்.

*இப்பொழுது கேக்கின் ஒரு முனையினை சிறிதளவு வெட்டி  எடுக்கவும்.வெட்டிய சிறுதுண்டு கேக்கினை நீளமாக உள்ள கேக்கின் மீது வைத்து அதன்மீது மீதமுள்ள ஐசிங்கை தடவி விடவும்.

*முள்கரண்டியால் ஐசிங் மீது நீளமாக இழுத்து அதன் மீது ஐசிங் சுகர் தூவி விடவும்.

பி.கு

*முட்டையினை ப்ரிட்ஜிலிருந்து எடுத்தவுடன் மஞ்சள் மற்றும் வெள்ளை கருவினை பிரித்தால் ஈசியாக வரும்.

*இந்த கேக்கினை 1 வரத்திற்கு முன்பாக செய்து காற்றுபுகாத டப்பாவில் வைத்து பயன்படுத்தலாம்.

*ப்ரீசரில் 3 மாதம்வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.

*கேக்கினை அவனிலிருந்து எடுத்து சூடாக இருக்கும்போதே சுருட்டினால் கிழியாது.அப்படியே கிழிந்தாலும் அதன் மீது ஐசிங் தடவுவதால் கவலை இல்லை.
Friday 13 December 2013 | By: Menaga Sathia

விப்பிங் க்ரீமிலிருந்து வெண்ணெய் எடுப்பது எப்படி??/Homemade Butter Using Heavy Whipping Cream

1 லிட்டர் விப்பிங் க்ரீமில் 1 கப் ப்ராஸ்டிங் செய்ய பயன்படுத்திய பின் மீதி க்ரீமில் வெண்ணெய் செய்தேன். விஸ்க் மூலம் செய்ததால் தோல் பட்டை வலி மட்டும் வந்து படுத்திடுச்சு..

ஆனால் வெண்ணெய் செய்தபின் சாப்பிட்டு பார்த்த போது வலியெல்லாம் மறந்து போய்டுச்சு.இதற்காகவே விப்பிங் க்ரீம் அதிகமா வாங்கனும் போல....

வெண்ணெயை ஒருநாள் மட்டும் ப்ரெட்டில் தடவி காலை உணவாக சாப்பிட்ட பின் மீதியை நெய் செய்து விட்டேன்.

இதில் முக்கியமானது விப்பிங் க்ரிமை 1 நாள் முழுக்க ப்ரிட்ஜில் வைத்திருந்து வெண்ணெய் எடுப்பது நல்லது..

தயாரிக்கும் நேரம்  25 -30 நிமிடங்கள்

தே.பொருட்கள்

ஹெவி விப்பிங் க்ரீம்/Heavy Whipping Cream  - 3 1/2 கப்
விஸ்க் /Whisk

செய்முறை

*பவுலில் விப்பிங் க்ரீமை ஊற்றி விஸ்க் மூலம் Circular Motion  நன்கு  கலக்கவும்.

 *இது மாதிரி வருவதற்கு குறைந்தது 10 நிமிடங்கள் ஆகும்

 *தொடர்ந்து Circular Motion ல் கலக்கி கொண்டு வந்தால்  நன்கு கெட்டியாகி இது போல் வரும் குறைந்தது 10 நிமிடங்கள் ஆகும்.

*இந்த இடத்தில் தான் கலக்கும்போது தோள்பட்டை வலி எடுக்கும்,கலக்க கொஞ்சம் கஷ்டமா இருக்கும்.

*இது Pale Yellow Colour-ல்போல் வரும் போது பாதிவேலை முடிந்து விட்டது என்று அர்த்தம்.
 *தொடர்ந்து Circular Motion கலக்கும் போது வெண்ணெய் தனியாக பிரிந்து வருவது போல் வரும்.

 *வெண்ணெய் நன்றாக பிரிந்ததும் தனியாக ஒரு பவுலில் குளிர்ந்த நீரில் சேகரிக்கவும்.
 *பின் பட்டர் மில்கை நன்கு வடிகட்டவும்.

*3/12 கப் விப்பிங் கிரிமிலிருந்து  வந்த பட்டர் மில்க்
 *இது தான் 3 1/2 கப்பிலிருந்து கிடைத்த வெண்ணெய்.

*இதனை குறைந்தது 4-5 முறை குளிர்ந்த நீரில் நன்கு அலசி பயன்படுத்தவும்.
 பி.கு

*பட்டர் மில்கை கேக்,பான்கேக் அல்லது ப்ரெட் செய்ய பயன்படுத்தலாம்.

*ப்ரிட்ஜில் 3 நாட்கள் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.

Wednesday 11 December 2013 | By: Menaga Sathia

ராஜஸ்தான் தாளி /Rajastani Thali For IF Challenge # 4


International Food Challenge   - இந்த ஈவெண்டினை சரஸ்வதி மற்றும் ஷோபனா இருவரும் சேர்ந்து நடத்துறாங்க.இதில் அனைத்து வகையான உணவுகளை செய்து ரசித்து ருசிக்கலாம்.மேலும் இதனைப் பற்றி தெரிந்துக் கொள்ள இங்கே பார்க்கவும்.

இந்த மாதம் மஞ்சுளா அவர்கள் ராஜஸ்தானிய மெனுவை நம்மிடையே பகிர்ந்துட்டாங்க.அதில் நான் தாளி மெனுவை தேர்ந்தெடுத்து செய்துள்ளேன்.சுவையான குறிப்புக்கு மிக்க நன்றி மஞ்சுளா!!


தக்காளி சாலட் / Tomato Salad

தே.பொருட்கள்

தக்காளி -2
சாட் மசாலா + வரமிளகாய்த்தூள்  - தலா 1/4 டீஸ்பூன்

செய்முறை
* தக்காளியை வட்டமாக நறுக்கி சாட் மசாலா மற்றும் வரமிளகாய்த்தூள் தூவி பரிமாறவும்.விரும்பினால் உப்பு சேர்க்கலாம்.



பாசிப்பருப்பு வடை /Moongdal Vada

தே. பொருட்கள்
பாசிப்பருப்பு -1/2 கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1/4 கப்
சோம்பு - 3/4 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய பச்சை  மிளகாய் -1
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை -சிறிது
கறிவேப்பிலை -சிறிது
பெருங்காயத்தூள் -1/4 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு


செய்முறை

*பாசிப்பருப்பை 1/2  மணிநேரம் ஊறவைத்து நீறை வடித்து உப்பு+சோம்பு சேர்த்து அரைக்கவும்.

*அதனுடன் வெங்காயம்+பெருங்காயத்தூள்+கறிவேப்பிலை கொத்தமல்லி+பச்சை மிளகாய் சேர்த்து பிசைந்து வடைகளாக தட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

ஒரிஜினல் ரெசிபியில் சீரகம் +இஞ்சி  சேர்த்திருப்பாங்க அதற்கு பதில்  சோம்பு மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்துருக்கேன்.

மிஸ்ஸி ரொட்டி /Missi Roti

தே.பொருட்கள்

கோதுமைமாவு - 1 கப்
கடலைமாவு - 1/2 கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் -1 சிறியது
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் -1
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை -2 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
சீரகப்பொடி -1/4 டீஸ்பூன்
வரமிளகாய்த்தூள் -1 டீஸ்பூன்
ஓமம் - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
நெய் -சுடுவதற்கு

செய்முறை

*பாத்திரத்தில் நெய் தவிர மேற்கூறிய அனைத்து பொருட்களையும் ஒன்றாக கலந்து  நீர் தெளித்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து 1/2 மணிநேரம் வைக்கவும்.

*பின் சிறு உருண்டையாக எடுத்து தேய்த்து தவாவில் நெய் தடவி 2 பக்கமும் சுட்டு எடுக்கவும்.

பப்பட் சப்ஜி /Papad Ki Sabzi

தே.பொருட்கள்

பப்பட் -1 பெரியது
வரமிளகாய்த்தூள் -1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் -1/4 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
கடுகு -1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை -1 கொத்து
நீர் -1/4 கப்
செய்முறை

*கடாயில் எண்ணெய் விட்டு கடுகு+கரிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

*பின் தூள் வகைகள் சேர்த்து வதக்கி 1/4 கப் நீர்  சேர்த்து கொதிக்கவிடவும்.கொதித்ததும் பப்பட்டை உடைத்து சேர்த்து 2-3 நிமிடங்களில் இறக்கவும்.

கறுப்புக் கடலை மோர்க்குழம்பு /Kale Channa Ki Kadhi

தே.பொருட்கள்
கறுப்புக்கடலை -1/4 கப்
தயிர் -1/2 கப்
கடலை மாவு - 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் -1/4 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை -சிறிது
உப்பு -தேவைக்கு

தாளிக்க

கடுகு -1/4 டீஸ்பூன்
சீரகம் -1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை -1 கொத்து
பெருங்காயத்தூள் + வரமிளகாய்த்தூள் -தலா 1/4 டீஸ்பூன்
கீறிய பச்சை மிளகாய் -2
நெய் - 2 டீஸ்பூன்

செய்முறை
*கடலையை முதல் நாள் இரவே ஊறவைத்து உப்பு சேர்த்து வேகவைத்தெடுக்கவும்.

*மிக்ஸியில் தயிர்+உப்பு+மஞ்சள்தூள்+கடலை மாவு சேர்த்து நன்கு அடிக்கவும்.

*பாத்திரத்தில் நெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை சேர்த்து தாளித்து வேகவைத்த கடலை+ தயிர் கலவையை ஊற்றி கொதிக்கவிடவும்.

*இடையிடையே கலக்கி 5-10 நிமிடங்கள் கொதிக்கவைத்து கொத்தமல்லித்தழை சேர்த்து இறக்கவும்.


கோதுமைமாவு அல்வா / Atte Ke Sheera

தே.பொருட்கள்

கோதுமைமாவு +நெய்  = தலா 1/4 கப்
கொதிக்க வைத்த நீர் -1 கப்
வெல்லத்துறுவல் -1/8 கப்

செய்முறை

* கடாயில் 1 டேபிள்ஸ்பூன் நெய் விட்டு கடலைமாவு வறுக்கவும்.தேவையெனில் மேலும் நெய் சேர்த்து வறுக்கவும்.

*வருபட்டதும் கொதிநீரை கொஞ்சமாக ஊற்றி இடைவிடாமல் கிளறவும்.

*பின் வெல்லத்துறுவல் சேர்த்து கரைந்ததும் மீதமுள்ள நெய்யை ஊற்றி ஒட்டாமல் சுருண்டு வரும் போது இறக்கவும்.

*விரும்பினால் முந்திரியை வறுத்து சேர்க்கலாம்.
Tuesday 10 December 2013 | By: Menaga Sathia

இறால் மசாலா / Prawn Masala - A Guest Post By Asiya Akka




ஆசியா அக்கா -  இவரை எனக்கு அறுசுவையிலிருந்து நன்கு தெரியும்.இவரின் நான் வெஞ் சமையல்கள் வித்தியாசமா நன்றாக இருக்கு.3 வலைப்பூவில் எழுதி வருகிறார்.

ஆங்கில வலைப்பூவில் நிறைய ஈவெண்ட்கலில் கலந்துகொண்டு நிறைய பரிசுகளையும் வென்றிருக்கிறார்...இவரின் தமிழ் வைப்பூவில் ஏராளமான நான் வெஜ் பிரியாணி குறிப்புகள் இருக்கு.

இவரிடம் நான் இறால் அல்லது நண்டு சமையல் கெஸ்ட் போஸ்ட் போடுமாறு கேட்டபோது உடனே இந்த இறால் மசாலை விளக்கபடங்களுடன் எனக்கு அனுப்பி வைத்தார்..

இதோ அவர் அனுப்பிய இறால் மசாலா செய்முறை குறிப்பு.இதில் மசாலாவை வறுத்து பொடித்து செய்திருப்பதால் சுவை நிச்சயம் நன்றாக இருக்கும்.நான் இன்னும் செய்து பார்க்கவில்லை.செய்து பார்த்த பின் படம் இணைக்கிறேன்.

சுவையான குறிப்புக்கு மிக்க நன்றி ஆசியா அக்கா!!

அவரின் சுய அறிமுகத்தை எனக்கு மெயிலில் அனுப்பியதை அப்படியே காப்பி பேஸ்ட் செய்துள்ளேன்..


மேனகா என்னிடம் தன்னுடைய வலைப்பூவில் கெஸ்ட் போஸ்ட் போடும் படி கேட்ட  பொழுது மிக சந்தோஷமாகயிருந்தது.இது தான் என்னோட முதல் முதலான கெஸ்ட் போஸ்ட்.அப்ப  இது ரொம்ப ஸ்பெஷல் தானே!



மேனகா பற்றி சொல்லனும் என்றால் சொல்லிகிட்டே போகலாம், இணைய நட்பில் எனக்கு கிடைத்த ஒரு நல்ல தங்கை.இதுவரை எந்தவொரு கருத்து வேற்றுமையும் இல்லாமல் ஒரே போல் மனதுடன் பழகி வராங்க,புரிந்துணர்வுடன் கூடிய ஒரு நல்ல உறவு.குறிப்புக்கள் கொடுக்கும் விதம் நச்சென்று இருக்கும், சொல்ல வந்ததை சுருக்கமாக அனைவருக்கும் இலகுவாக புரியும்  படி எழுதி குறிப்பு கொடுப்பது எனக்கு அவங்க வலைப்பூவில் மிகவும் பிடித்த விஷயம், அவங்க கொடுக்காத குறிப்பு எது என்று என்னை யோசிக்க வைக்கும் அளவு குறிப்புக்கள் மலை போல் குவிந்து இருக்கு இங்கே.படங்களும் மிகத் தெளிவாக இருக்கும்.இடைவெளி இல்லாமல் ஓரளவு தொடர்ந்து வலைப்பூவில் பகிர்ந்து வருவது மிகவும் பாரட்டப் பட வேண்டிய விஷயம்.

இனி என்னைப்பற்றி சொல்ல வேண்டும் என்றால் ,சொந்த ஊர் நெல்லை, வசிப்பது அல்- ஐன்,அரபு ஐக்கிய அமீரகம்,வேளாண்மை பட்டதாரி, அன்பான மகன்,மகள்,உயிரான கணவர் என்று பூரிக்கும்  மகிழ்ச்சியான இல்லத்தரசி, நான் சமைத்து அசத்தலாம் என்ற வலைப்பூவில் 2010 பிப்ரவரி மாதம் தொடங்கி இதுவரை சமையல் குறிப்புக்கள் கொடுப்பதோடு அல்லாமல் அனுபவம்,கதை என்றும் சில விஷயங்களையும் ஒரு மாற்றத்திற்காக பகிர்ந்து வருகிறேன். 2012 ஜனவரி முதல் மை ஹெல்தி ஹேப்பி கிச்சன் என்ற ஆங்கில வலைப்பூ ,மற்றும் மணித்துளி என்ற வலைப்பபூவும் சென்ற வருடம் ஆரம்பித்து அங்கும் பொதுவாக பகிர்ந்து வருகிறேன்,பொதுவாக என்னோட  இரண்டு சமையல் வலைப்பூக்களில் வேறு வேறு குறிப்புக்கள் கொடுக்க விரும்பி ஓரளவு முயற்சி செய்தும் வருகிறேன்.


 நான் வலைப்பூவிற்காக எடுக்கும் புகைப் படங்களில் அதிகம் கவனம் செலுத்துவதில்லை,நான் சமைக்கும் சமயம் அவசரமாக மொபைலில் என்ன எடுக்கிறேனோ அது தான்.அது எப்படி வந்தாலும் பகிர்ந்து விடுவேன்.என்னோட குறிக்கோள் வலைப்பூவிற்காக அதிகம் நேரம் மெனக்கெடாமல் ஒரு பொழுது போக்காக நான் சமைப்பதை படங்களோடு புதிதாக சமைப்பவர்களுக்கு பயன் தரும் வகையில் பகிர வேண்டும் எனபதே! முக்கியமாக மதிய உணவுகள் அதிகம் பதிவு செய்கிறேன். நேரம் கிடைக்கும் பட்சத்தில் தொடர்ந்து முடிந்தளவு பல வித்தியாசமான குறிப்புக்கள் பகிரவும் ஆசைப்படுகிறேன்.


மேனகா என்னிடம் கெஸ்ட் போஸ்ட் பற்றி சொன்ன பொழுது ஏதாவது குறிப்பிட்ட சமையல்  வேண்டுமா ? என்று கேட்டேன், இறால் அல்லது நண்டு சமையல் செய்து அனுப்புங்க அக்கான்னு சொன்னாங்க, அதனால் என்னோட இந்த  இறால் மசாலா செய்து அசத்தியாச்சு.இதில் வறுத்துப் பொடித்து மசாலா சேர்ப்பதால் அதன் சுவை நிச்சயம் வித்தியாசமாக இருக்கும் .நீங்களும் செய்து பாருங்க.

இறால் மசாலா குறிப்பு இதோ உங்களுக்காக சஷிகாவில் பகிர்வதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.இந்த அருமையான வாய்ப்பு அளித்த மேனகாவிற்கு மனமார்ந்த நன்றியையும் அன்பையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தேவையான பொருட்கள்; 

இறால் - அரைக்கிலோ
வெங்காயம் - 2
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 + 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
மிளகுத்தூள் - 1 (அ)  2  டீஸ்பூன்
நறுக்கிய மல்லி, கருவேப்பிலை - சிறிது.
எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்


வறுத்து பொடிக்க:

முழு மல்லி - 2 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
பெருஞ்சீரகம் - 1 டீஸ்பூன்


செய்முறை:

முதலில் இறாலை  தண்ணீர் விட்டு அலசவும்.பின்பு  இறால் ஓட்டை நீக்கி,தலைப்பகுதியை நீக்கி பின்பக்கம் இருக்கும் கருப்பு நரம்பு போன்ற பகுதியை கத்தியால் கீறி விட்டு கையால் எடுக்கவும்.இப்படி சுத்தம் செய்த பின்பு இறாலை பளிச்சென்று மீண்டும் மூன்று தண்ணீர் வைத்து அலசி சுத்தமாக தண்ணீர் வடிகட்டி வைக்கவும்.வெங்காயம்,தக்காளி,பச்சை மிளகாய் பொடியாக நறுக்கி வைக்கவும்.


*தண்ணீர் வடித்த  இறாலுடன் மஞ்சள் தூள், 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட், தேவைக்கு சிறிது உப்பு சேர்த்து கலந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.


* வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு மல்லி,சீரகம்,சோம்பு வறுத்தெடுக்கவும். ஆற வைக்கவும்.

*பின்பு வறுத்தவற்றை மிக்ஸி ஜாரில் போட்டு பொடித்து எடுக்கவும்.

* ஒரு அடி கனமான கடாயில் எண்ணெய் விட்டு சூடானவுடன்,வெங்காயம் பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.


* வெங்காயம் நன்கு வதங்கியதும் 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்க்கவும்.நன்கு வதக்கவும், தக்காளி சேர்க்கவும்.சிறிது உப்பு சேர்க்கவும்.உப்பு பார்த்து அளவாய் சேர்க்கவும்,ஏற்கனவே இறாலில் சிறிது உப்பு சேர்த்து பிரட்டியிருக்கிறோம்.

* வெங்காயம் தக்காளி வதங்கி வரும் பொழுது  இறாலை சேர்க்கவும், கலந்து விடவும். வறுத்துப் பொடித்த மசால் சேர்த்து நன்கு மீண்டும் பிரட்டி மூடவும்.


*. இறாலிலிலேயே  தண்ணீர் ஊறி வரும், வெந்து கூட்டு போல் கெட்டியாகும். அந்த சமயம் மிளகுத்தூள் சேர்க்கவும். பிரட்டி விடவும்.

* நறுக்கிய மல்லி,கருவேப்பிலை தூவி  அடுப்பை அணைக்கவும். சூடாகப் பரிமாறவும்.

*சுவையான இறால் மசாலா ரெடி.

இது சாதத்துடன் பக்க உணவாகச் சாப்பிட அருமையாக இருக்கும்.

Thursday 5 December 2013 | By: Menaga Sathia

ஆஞ்சநேயர் வடை - மிளகு வடை/Anjaneyar Vadai(Milagu Vadai)



தே.பொருட்கள்

வெள்ளை முழு உளுந்து - 1 கப்
மிளகு - 2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - பொரிக்க

செய்முறை

*உளுந்தை 1/2 மணிநேரம் மட்டும் ஊறவைத்து நீரை வடிக்கட்டவும்.

*தண்ணீர் சேர்க்காமல் கொரகொரப்பாக அரைத்து உப்பு+பொடித்த மிளகு +சூடான எண்ணெய் 1 டேபிள்ஸ்பூன் சேர்த்து பிசையவும்.

*ஒரு பிளாஸ்டிக்  கவரில் எண்ணெய் தடவி சிறு உருண்டையை எடுத்து மெலிதாக தட்டி நடுவில் ஒட்டை போட்டு எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

This is off to Priya's Vegan Thursday  & Gayathri's WTML Event
Wednesday 4 December 2013 | By: Menaga Sathia

இறால் மிளகு குழம்பு /Prawn Pepper Kuzhambu - A Guest Post For Priya Suresh


ப்ரியா - ஆங்கிலம் மற்றும் தமிழ் வலைப்பூவில் அனைவருக்கும் தெரிந்த நபர்.அவருடைய வலைப்பூவில் கெஸ்ட் போஸ்ட் போடுமாறு கேட்ட போது என்ன ரெசிபி அனுப்புவதுன்னு சற்றே குழம்பிதான் போனேன்.ஏன்னா அவருடைய வலைப்பூவில் இல்லாத குறிப்புகளே இல்லை என சொல்லலாம்.

+3000 குறிப்புகள் வரை அவர் கொடுத்திருக்கார்.இவர் ஏற்கனவே என் வலைப்பூவில் பேரீச்சம்பழ சாக்லேட் ப்ரவுணீஸ் குறிப்பை கெஸ்ட் பதிவு போட்டிருக்காங்க.இவரை பற்றி மேலும் தெரிந்துக் கொள்ள அந்த பதிவில் பார்க்கவும்.

நான் அவருக்கு மாமியாரின் ஸ்பெஷல் குறிப்பான இறால் மிளகு குழம்பு அனுப்பியுள்ளேன்.

குறிப்பினை விளக்கபடத்துடன் இங்கே பார்க்கவும்.



Monday 2 December 2013 | By: Menaga Sathia

காரட் அல்வா -2 / Carrot Halwa - 2


இது என்னுடைய 800 வது பதிவு!!

காரட் அல்வாவினை நான் சிலநேரம் நெய்யில் வதக்கி செய்வதை விட ஆவியில் வேகவைத்து செய்வேன்.இந்த குறிப்பு அதன் செய்முறை விட முற்றிலும் வேறு.

* இந்த அல்வாவினை நெய்யில் செய்வதைவிட வெண்ணையில் செய்ய வேண்டும்.எவ்வளவு சாப்பிட்டாலும் திகட்டாது.

*கேரட்டினை கேரட் துருவியில் துருவுவதைவிட சீஸ் துருவுவதில் துருவி செய்யவேண்டும்.சுவை மிக நன்றாக இருக்கும்.

*கொடுத்துள்ள அளவுபடி செய்தால்  சுவை நன்றாக இருக்கும்.

*முந்திரி மற்றும் திராட்சையினை தனியாக நெய்யில் வதக்கி சேர்ப்பதற்கு பதில் கேரட் வதக்கும் போதே சேர்த்தால் நன்றாக் இருக்கும்


தே.பொருட்கள்

துருவிய காரட் -2 கப்
சர்க்கரை - 1/4 கப்+1/8 கப்
பால் -1 கப்
முந்திரி -1/8 கப்
திராட்சை - 1 1/2 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய்த்தூள் -1/2 டீஸ்பூன்
வெண்ணைய் - 1/4 கப் + 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை

*கடாயில் வெண்ணெய் சேர்த்து உருகியதும் துருவிய காரட் சேர்த்து  5 நிமிடங்கள் வதக்கவும்.

*காரட் சிறிது வதங்கியதும் முந்திரி+திராட்சை  சேர்த்து  தண்ணீர் வற்றும் வரை வதக்கவும்.

*நன்றாக வதங்கிய பிறகு பால் சேர்த்து வேகவிடவும்.

*ஏலக்காய்த்தூள் சேர்த்து பால் வற்றும் வரை நன்கு வதக்கவும்.

*பின் சர்க்கரை  சேர்த்து   7-8 நிமிடங்கள் வரை கிளறி இறக்கவும்.

*இதனை சூடாகவோ அல்லது குளிரவைத்தோ பரிமாறவும்.

*இதனுடன் வெனிலா ஐஸ்க்ரீம் சேர்த்து சாப்பிட சூப்பர் சுவை...



01 09 10