Thursday 12 September 2013 | By: Menaga Sathia

மட்டன் கடலைப்பருப்பு குழம்பு /Spicy Mutton Gravy With Channa Dal (Mutton Kadalaiparuppu Kuzhambu)

இந்த குழம்பைசெய்வதற்கு எல்லா பொருட்களையும் அரைத்து வைத்துக் கொண்டால் செய்வதற்கு மிக சுலபம்.

இதில் பூண்டினை விட இஞ்சியின் அளவை அதிகம் சேர்க்க வேண்டும்.வெங்காயத்தினை கொரகொரப்பாக அரைக்கவேண்டும்,நைசாக அரைத்தால் கசப்புதன்மை வரும்.

அவரவர் விருப்பதிற்கு போல் கிரேவியினை கெட்டியாகவோ நீர்க்கவோ செய்துகொள்ளவும்.எங்களுக்கு கெட்டியாக பிடிக்கும் என்பதால் நீரின் அளவினை குறைத்து செய்துள்ளேன்.

மேலும் இதில் எண்ணெயும் குறைவாக சேர்த்து சமைத்தாலே போதும்.இதில் வெங்காயம் மர்றும் இஞ்சி பூண்டினை பச்சையாக சேர்க்க விரும்பாதவர்கள் தக்காளி வதக்குவதற்கு முன் இவற்றை வதக்கி சேர்க்கலாம்.


இதில் முருங்கைகாயும் சேர்த்து செய்துள்ளேன்,மிக நன்றாக இருந்தது.

சாதம்,சப்பாத்தியுடன் சாப்பிட நன்றாக இருக்கும்..

Recipe Source :என் சமையல் அறையில்

தே.பொருட்கள்

மட்டன் - 1/2 கிலோ
கடலைப்பருப்பு -  1 கைப்பிடி
உருளைக்கிழங்கு -  1 பெரியது
முருங்கைக்காய் - 1
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
தனியத்தூள் -  1 டீஸ்பூன்
வரமிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
கரிவேப்பிலை - 1 கொத்து
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவைக்கு

தாளிக்க‌

எண்ணெய் - 1 டீஸ்பூன்
பட்டை - 1 சிறுதுண்டு
கிராம்பு - 3
ஏலக்காய் - 2
தக்காளி - 2(சிறியது _ பொடியாக நறுக்கியது)

அரைக்க‌

வெங்காயம் - 1
இஞ்சி - 2 பெரிய துண்டு
பூண்டுப்பல் - 5
தேங்காய்த்துறுவல் - 2 டேபிள்ஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்

செய்முறை

*மட்டனை நன்கு சுத்தம் செய்துக் கொள்ளவும்.கடலைப்பருப்பினை கழுவிக் கொள்ளவும்.


**குக்கரில் கடலைப்பருப்பு+மட்டன் தூள் வகைகள் சேர்க்கவும்.
*முழ்குமளவு நீர் விட்டு 3 விசில் வரை வேகவைக்கவும்.

*வெங்காயத்தை பெரிய துண்டுகளாக நறுக்கி ஒன்றும் பாதியுமாக அரைக்கவும்.

*இஞ்சி பூண்டினை கொரகொரப்பாக அரைக்கவும்.

* தேங்காய் + சோம்பு இவற்றினை மைய அரைக்கவும்.
*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை சேர்த்து தாளித்து நறுக்கிய தக்காளியை சேர்த்து லேசாக அவதக்கவும்.

*மட்டன் வெந்ததும் அரைத்த வெங்காயம்+இஞ்சி பூண்டு விழுது+வதக்கிய தக்காளி கலவை சேர்க்கவும்.
*பின் நறுக்கிய முருங்கைக்காய் துண்டுகள்+தோல் சீவி துண்டுகளாகிய உருளை சேர்க்கவும்.

*இதனுடன் தேங்காய் விழுது+உப்பு சேர்த்து தேவைக்கு நீர் சேர்க்கவும் மீண்டும் குக்கரில் 2 விசில் வரை வேகவைத்தெடுக்கவும்.

*காய்கள் வெந்ததும் கறிவேப்பிலை+கொத்தமல்லி சேர்க்கவும்.




7 பேர் ருசி பார்த்தவர்கள்:

Shama Nagarajan said...

perfect and yummy preparation

Priya Anandakumar said...

Super mutton kuzhambu Menaga, Wish I could have them awesome, I can feel the taste right from here...

Prema said...

wow cant resit here menaga,too tempting...

மனோ சாமிநாதன் said...

நல்ல குறிப்பு! புகைப்படமும் அழகு! தஞ்சைப்பக்கம் இது ரொம்பவும் பிரபலமான ஒரு குழம்பு மேனகா! வெங்காயம் மட்டும் அரைத்து சேர்ப்பதில்லை. அரிந்து தான் சேர்ப்பார்கள்!

'பரிவை' சே.குமார் said...

படங்களுடன் விளக்கம் அருமை...
வாழ்த்துக்கள்...

Sangeetha Priya said...

looks delicious n inviting curry dear..

Asiya Omar said...

கொத்துக்கறியில் கடலை பருப்பு சேர்ப்போம்,இந்த காம்பினேஷன் நல்லாயிருக்கு.

01 09 10