Thursday 20 March 2014 | By: Menaga Sathia

சௌ சௌ கூட்டு / Chayote (Chow Chow ) Kootu | Kootu Recipes



தே.பொருட்கள்

கடலைப்பருப்பு - 1/4 கப்
மஞ்சள்தூள் -1/2 டீஸ்பூன்
சௌ சௌ - 1
நறுக்கிய வெங்காயம் - 1
கீறிய பச்சை மிளகாய் -2
தேங்காய்த்துறுவல் -1/4 கப்
உப்பு - தேவைக்கு

தாளிக்க

எண்ணெய் - 1  1/2 டீஸ்பூன்
கடுகு + உளுத்தம்பருப்பு - தலா 1/2 டீஸ்பூன்
சோம்புப்பொடி - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை -1 கொத்து

செய்முறை

*கடலைப்பருப்பை மஞ்சள்தூள்+1/2 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து முழ்குமளவு நீர் விட்டு  குக்கரில் 3 விசில் வரை வேகவைக்கவும்.
*சௌ சௌ தோல் சீவி துண்டுகளாகவும்.பருப்பு வெந்ததும் நறுக்கிய காய்+வெங்காயம் +பச்சை மிளகாய் சேர்த்து மீண்டும் குக்கரில் 1 அல்லது 2 விசில் வரை வேகவைக்கவும்.
*கடாயில் மீதமுள்ள எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை சேர்த்து தாளித்து  வேகவைத்த பருப்பு கய் கலவை சேர்க்கவும்.
*பின் தேங்காய்த்துறுவல் சேர்த்து இறக்கவும்.
பி.கு
*சௌ சௌ தோலினை தூக்கி போடாமல் துவையல் செய்யலாம்.

10 பேர் ருசி பார்த்தவர்கள்:

மனோ சாமிநாதன் said...

Nice recipe! The koottu looks delicious! Adding aniseed powder is very different. I will prepare it one day!

Priya Suresh said...

Love this kootu simply with some lemon pickle,delicious.

Priya said...

indru enga veetu samayal chow chow kootu ..nan pasi parupum serthu seiven .arumai ..

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் முறைப்படி செய்து பார்ப்போம்... நன்றி...

nandoos kitchen said...

healthy and delicious kootu. Looks yumm.

Unknown said...

உங்கள் செய்முறை சற்று வித்தியாசமாக உள்ளதே. இதன்படி செய்து பார்க்கிறேன். நன்றி.
சௌ சௌ தோலினைத் தூக்கிப்போடாமல் துவையல் செய்யலாம் என்று சொல்லி நிறுத்தாமல் துவையல் செய்முறைக் குறிப்பையும் தந்திருப்பதற்கு நன்றி

Shama Nagarajan said...

super authentic kootu

Unknown said...

I also prepare in the same way except coconut.and I also do sow sow thogayal :-)

Priya Anandakumar said...

kootu romba nallairukku, delicious and healthy....

great-secret-of-life said...

so healthy kootu

01 09 10