Tuesday 4 March 2014 | By: Menaga Sathia

வாழைப்பூ சுத்தம் செய்வது எப்படி?? /How To Clean Banana Blossom??




தே.பொருட்கள்

வாழைப்பூ -  1
மோர் - 2 டேபிள்ஸ்பூன்
எண்ணெய்/ உப்பு  கையில் தடவுவதற்கு

செய்முறை

* கையில் எண்ணெய்/உப்பு தடவி வாழைப்பூவின் ஒவ்வொரு இதழாக பிரிக்கவும்.

*பூவினை மொத்தமாக‌ கையில் எடுத்து முனையில் கையால் தீட்டினால் பூக்கள் மலரும்.

*ஒவ்வொரு பூக்களிலும் நரம்பு இருக்கும்,(படம்:3)அதனை எடுத்துவிடவும்.


*ரப்பர் போல இருப்பதையும்(படம்:4)விரும்பினால் எடுத்துவிடலாம்.(அம்மா அதனை எடுக்கமாட்டாங்க,அதனால் நானும் அதனை சேர்த்தே அரிந்து சமைப்பேன்)



*பொடியாக அரிந்து மோர் கலந்து நீரில் போட்டு பயன்படுத்தலாம்.

பி.கு

*பூ வெள்ளை கலர் இதழ் வரும்வரை தான் நரம்பு எடுப்பேன்.வெள்ளை கலரில் இதழ் வந்த பின் அதனை அப்படியே அரிந்துவிடுவேன்.

*கையில் எண்ணெய்/உப்பு தடவுவதால் கையில் கறை படியாது.

*மோர் கலந்த நீரில் போடுவதால் பூ கறுக்காது.

11 பேர் ருசி பார்த்தவர்கள்:

great-secret-of-life said...

useful post

மனோ சாமிநாதன் said...

அருமையாக விளக்கியிருக்கிறீர்கள் மேனகா! கேரளாவில் அப்படியே தோலோடு அரிந்து சமைக்கிறார்கள்!

ADHI VENKAT said...

பயனுள்ள டிப்ஸ். நானும் வெள்ளையை அப்படியே தான் அரிந்து கொள்வேன்.

திண்டுக்கல் தனபாலன் said...

வீட்டில் எங்களுக்குத் தான் இந்த வேலையாக்கும்...!

Hema said...

Very useful post Menaga, I remove that vengayam like thing in it too..

MANO நாஞ்சில் மனோ said...

கிட்னியில் கல் இருப்பவர்கள் இதை அதிகம் சாப்பிட்டால் கல் கரைந்தும் விடும்.

nandoos kitchen said...

very useful post dear. Thanks for sharing.

Shama Nagarajan said...

nice post dear

Unknown said...

Very useful post dear :)Thank u for sharing with us !!

Gita Jaishankar said...

Very useful post with step by step clicks, thanks for sharing dear :)

Unknown said...

wow very useful post and well explained with pictorials :)

01 09 10