Monday 31 March 2014 | By: Menaga Sathia

காரைக்குடி நண்டு மசாலா /Karaikudi Crab Masala


ஆஹா என்ன ருசியில் பார்த்து செய்தது..

தே.பொருட்கள்

சுத்தம் செய்த நண்டு - 1 கிலோ
நறுக்கிய வெங்காயம் -1 பெரியது
நறுக்கிய தக்காளி -1 பெரியது
புளி -சிறிய எலுமிச்சை பழளவு
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லித்தூள் -1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் -2 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

எண்ணெயில்  வதக்கி அரைக்க

தேங்காய்த்துறுவல் -1/4 கப்
மிளகு -1/2 டீஸ்பூன்
சீரகம் + சோம்பு = தலா 3/4 டீஸ்பூன்
கசகசா - 1/2 டீஸ்பூன்

தாளிக்க

சோம்பு -1 டீஸ்பூன்
கறிவேப்பிலை 1 கொத்து
பட்டை -1 சிறுதுண்டு
பிரியாணி இலை - 2

செய்முறை

*அரைக்க கொடுத்துள்ளவைகளை நைசாக அரைக்கவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை சேர்த்து தாளிக்கவும்.
*பின் வெங்காயம்+தக்காளி+உப்பு என ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும்.
* நண்டு+தூள் வகைகள் சேர்த்து வதக்கி 1 கப் நீர் சேர்த்து கொதிக்கவைக்கவும்.

*நன்றாக  கொதித்ததும் புளியை 1/2 கப் அளவில் கரைத்து ஊற்றி கொதிக்கவிடவும்.
*பின் அரைத்த மசாலா சேர்த்து கொதிக்க வைத்து 10 நிமிடங்கள் கழித்து இறக்கவும்.

9 பேர் ருசி பார்த்தவர்கள்:

Unknown said...

Very tempting and yummy crab masala ...Love it dear :)

திண்டுக்கல் தனபாலன் said...

ஆஹா (என்ன) ருசி தான்...!

மனோ சாமிநாதன் said...

நண்டு மசாலா உடனேயே சாப்பிட்டுப்பார்க்க அழைக்கிறது ! குறிப்பு அருமை!

Thenammai Lakshmanan said...

ahaa super.. and looks yummy da :)

nandoos kitchen said...

super tempting crab masala

Priya said...

aha arumai ...

Sangeetha Priya said...

arumaiyana masala!!!

Asiya Omar said...

நண்டு மசாலா நல்ல மணம்.சூப்பர்.

Priya Suresh said...

Fingerlicking nandu masala, can have with some rice.

01 09 10