Tuesday 29 July 2014 | By: Menaga Sathia

மதுரை சிக்கன் ரோஸ்ட் / Madurai Chicken Roast | Chicken Thokku Fry | Restaurant Style Chicken Recipes

இந்த சிக்கனின் ஸ்பெஷல் சின்ன வெங்காயத்தில் செய்வதும் மர்றும் நல்லெண்ணெயில் தாளிப்பதும் தான்..மேலும் இதில் மசாலா பொடியை ப்ரெஷ்ஷாக பொடித்து தாளித்து செய்வது மிகுந்த வாசனையாகவும் சுவையாகவும் இருக்கும்..

மேலும் நல்லெண்ணெயில் செய்வது எண்ணெயும் அதிகம் செலவாகாது.  நன்றி ப்ரியா!!

தயாரிக்கும் நேரம்- 5 நிமிடங்கள்
சமைக்குù நேரம் -< 30 நிமிடங்கள்
பரிமாறும் அளவு -4 நபர்கள்

தே.பொருட்கள்

சிக்கனில் ஊறவைக்க‌

சிக்கன் -1/2 கிலோ
மஞ்சள்தூள்- 1/2 டீஸ்பூன்
உப்பு -3/4 டீஸ்பூன்

பொடிக்க‌

பிரியாணி இலை -1
பட்டை -சிறுதுண்டு
கிராம்பு- 4
ஏலக்காய் -3
சோம்பு + சீரகம் - தலா 1 டீஸ்பூன்

தொக்கு செய்ய‌

நல்லெண்ணெய் -2 டேபிள்ஸ்பூன்
பொடியாக நறுக்கிய சின்ன வெங்கயம் - 15
நறுக்கிய பெரிய வெங்காயம்- 1
நறுக்கிய தக்காளி -1
கறிவேப்பிலை -2 கொத்து
இஞ்சி பூண்டு விழுது -2 டீஸ்பூன்
வரமிளகாய்த்தூள் -1 டேபிள்ஸ்பூன்
தனியாத்தூள்- 1 டீஸ்பூன்
காஷ்மீர் மிளகாய்த்தூள்- 1 டீஸ்பூன்
உப்பு -தேவைக்கு

செய்முறை

*சிக்கனில் ஊறவைக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து 15 நிமிடங்கள் ஊறவைக்கவும்.
*பொடிக்க கொடுத்துள்ளவைகளை கரகரப்பாக பொடிக்கவும்.

*பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி பொடித்த பொடி+கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
*பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி பொடித்த பொடி+கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.


*வதங்கியதும் பெரிய வெங்காயம் +இஞ்சி பூண்டு விழுது+தக்காளி என ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும்.

*தூள் வகைகள்+உப்பு சேர்த்து வதக்கிய பின் ஊறவைத்த சிக்கனை சேர்த்து நிறம் மாறும் வரை 5 நிமிடங்கள் வதக்கி 3/4 கப் நீர் சேர்த்து வேகவைக்கவும்.


*கறி வெந்து எண்ணெய் பிரியும் வரை சுருள வதக்கி இறக்கவும்.

பி.கு

*இந்த தொக்கின் சுவையே குறைந்த தீயில் சமைப்பதுதான்.

*நல்லெண்ணெயில் சமைப்பது சுவையை அதிகரிக்கும்.

*அவரவர் சுவைக்கேற்ப காரத்தினை சேர்க்கவும்.



Friday 25 July 2014 | By: Menaga Sathia

இஸ்லாமியர் ஸ்டைல் பிரியாணி கத்திரிக்காய்- 2/ Biryani Kathirikkai - 2 Muslim Style | Side Dish For Biryani


print this pagePRINT IT

ஏற்கனவே பிரியாணி கத்திரிக்காயை நான் வெங்காயம் +தக்காளி சேர்த்து செய்துள்ளேன்.ஆனால் இந்த செய்முறையில் வெங்காயம்+தக்காளி எதுவும் சேர்க்கத் தேவையில்லை.

வேர்க்கடலை+எள்+வெந்தயம் இவற்றை மட்டும் வறுத்து பொடித்து சேர்க்கவேண்டும்.சுவை இஸ்லாமியர்களின் பிரியாணி கத்திரிக்காய் போலவே இருக்கும்.

இதில் நான் காரத்திற்கு வரமிளகாய்தூளும் சேர்த்திருக்கேன்.குறைவாக வேண்டுமெனில் சாம்பார் பொடி மட்டும் சேர்க்கலாம்.

Recipe Source : Savitha's Kitchen

தே.பொருட்கள்
குட்டி கத்திரிக்காய் -8
புளிகரைசல்- 1 கப்
மஞ்சள்தூள்- 1/4 டீஸ்பூன்
சாம்பார் பொடி -1 டீஸ்பூன்
வரமிளகாய்த்தூள் -2 டீஸ்பூன்
வெல்லம் -சிறிதளவு
எண்ணெய்- 2 1/2 டேபிள்ஸ்பூன்
உப்பு -தேவைக்கு

தாளிக்க‌
மிளகு -10
கறிவேப்பிலை -1 கொத்து

வெறும் கடாயில் வறுத்துப் பொடிக்க‌

வேர்க்கடலை -2 டேபிள்ஸ்பூன்
எள் -1 டீஸ்பூன்
வெந்தயம் -1/4 டீஸ்பூன்

செய்முறை
*கத்திரிக்காயை கழுவி துடைத்து அதன் அடிப்பாகத்தில் 4ஆக கீறி விடவும்.

*காம்பினை வெட்டக்கூடாது,இல்லையெனில் கத்திரிக்காய் மசிந்து விடும்.


*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து கத்திரிக்காயை சேர்த்து வதக்கி 5 -6 நிமிடங்களில் மூடி போட்டு வேகவிடவும்.

*பின் தூள் வகைகளை சேர்த்து பிரட்டி உப்பு+புளிகரைசலை ஊற்றி கொதிக்கவிடவும்.

*பொடிக்க கொடுத்துள்ளவைகளை வறுத்து நைசாக பொடிக்கவும்.
*பச்சை வாசனை போனதும் ,வேர்க்கடலை பொடியை சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்க வைத்து  எண்ணெய் பிரியும் போது   வெல்லம் சேர்த்து இறக்கவும்.

பி.கு

*அவரவர் விருப்பத்திற்கேற்ப க்ரேவியை திக்காகவோ அல்லது கொஞ்சம் நீர்க்கவோ செய்துக் கொள்ளவும்.

*இதனை குட்டிக் கத்திரிக்காயில் செய்வதுதான் சுவையாக இருக்கும்.

*வெல்லம் சேர்ப்பது அவரவர் விருப்பம்,ஆனால் சேர்ப்பது தனி சுவையைக் கொடுக்கும்.
Tuesday 22 July 2014 | By: Menaga Sathia

ராகி சாக்லேட் மில்க்க்ஷேக்/Ragi Chocolate Milkshake | Chocolate Flavoured Finger Millet Milkshake| Millet Recipes

இந்த மில்க் ஷேக்கில் ராகி மாவு சேர்த்து செய்ததில் மிக நன்றாக இருந்தது.

Recipe Source : Cooklikepriya

தே.பொருட்கள்

குளிர்ந்த பால் -2 கப்
கேழ்வரகு மாவு- 2 டேபிள்ஸ்பூன்
கோகோ பவுடர்+சர்க்கரை -தலா 2 டேபிள்ஸ்பூன்
வெனிலா எசன்ஸ் -1/2 டீஸ்பூன்

செய்முறை

*பாத்திரத்தில் கோகோ பவுடர்+கேழ்வரகு மாவு+1 கப் நீர் சேர்த்து கட்டியில்லாமல் கலக்கவும்.


*இதனை அடுப்பில் வைத்து விஸ்க் மூலம் தொடர்ந்து கட்டியில்லாமல் கலக்கவும்.

*நன்கு கெட்டியான பதத்தில் வரும் போது இறக்கி ஆறவைக்கவும்.

*மிக்ஸியில் பால்+சர்க்கரை+எசன்ஸ்+ஆறவைத்த கெட்டியான கேழ்வரகு மாவு தேவைக்கு  நன்கு கலந்து பரிமாறவும்.


Friday 18 July 2014 | By: Menaga Sathia

செட்டிநாடு சிக்கன் பிரியாணி /Chettinad Chicken Biryani | Chicken Recipes



print this pagePRINT IT

செட்டிநாடு மட்டன் பிரியாணி செய்ததைப்போல் சிக்கனில் செய்துள்ளேன்.

தே.பொருட்கள்

பாஸ்மதி  -4 கப்
நீளமாக அரிந்த வெங்காயம் -2 பெரியது
தக்காளி- 2 பெரியது
நெய் -1/4 கப்
உப்பு+எண்ணெய் =தேவைக்கு

அரைக்க‌
காய்ந்த மிளகாய் -2
பச்சை மிளகாய்- 2
புதினா -1 கைப்பிடி
சின்ன வெங்காயம்- 12
பூண்டுப்பல்- 8
இஞ்சி-  சிறுதுண்டு
சோம்பு -1 டீஸ்பூன்
கிராம்பு- 2
ஏலக்காய் -3

சிக்கனில் ஊறவைக்க‌

சிக்கன் 3/4 கிலோ
அரைத்த விழுது சிறிதளவு
தயிர் 2 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் 1/2 டீஸ்பூன்
வரமிளகாய்த்தூள் 1 டேபிள்ஸ்பூன்

தாளிக்க‌

பட்டை  -சிறுதுண்டு
கிராம்பு- 3
ஏலக்காய் -3
பிரிஞ்சி இலை- 3
கறிவேப்பிலை -2 கொத்து
சோம்பு -3/4 டீஸ்பூன்

செய்முறை

*அரிசியை கழுவி 10நிமிடங்கள் ஊறவைக்கவும்.

*அரைக்க கொடுத்துள்ள பொருட்களை நைசாக அரைக்கவும்.


*சிக்கனில் ஊறவைக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து 1 மணிநேரம் ஊறவைக்கவும்.
*அரிசியை சிறிது நெய்யில் 2 -3 நிமிடங்கள் வறுத்து எடுக்கவும்.

*பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து வெங்காயம்+தக்காளி+அரைத்த விழுது என ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்கு வதக்கவும்.

*பின் ஊறவைத்த சிக்கனை சேர்த்து 5 நிமிடம் வதக்கி 5 1/2 கப் நீர்+உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.


*தண்ணீர் கொதிக்கும் போது அரிசியை சேர்த்து மூடி போட்டு சிறுதீயில் வேகவிடவும்.

*தண்ணீர் வற்றி சுண்டி வரும்போது தோசைகல்லை காயவைத்து அதன்மீது பிரியாணி பாத்திரதை வைத்து சிறுதீயில் 15 நிமிடங்கள் தம்மில் போடவும்.

*பிரியாணி வெந்ததும் மீதமுள்ள நெய்ய்யை ஊற்றி கிளறி கத்திரிக்காய் அல்லது ராய்த்தாவுடன் பரிமாறவும்.

Tuesday 15 July 2014 | By: Menaga Sathia

செட்டிநாடு வாழைக்காய் கோலா உருண்டை/ Chettinad Vazhakkai Kola Orundai | Vegetarian Balls|Vegetarian Appetizer Recipes

வாழைக்காய் கோலா உருண்டையை ,நான் வாழைக்காயை வேகவைத்து தோலுரித்து வெங்காயம் பச்சை கறிவேப்பிலை சோம்புத்தூள் இவற்றை மற்றும் பொடியாக நருக்கி சேர்த்து எண்ணெயில் பொரிப்பேன்.இதில் பொருட்களை வதக்கி அரைத்து செய்வததில் நன்றாக இருந்தது.

இதில் வாசனைக்காக நான் கிராம்பும் பட்டையும் சேர்த்து செய்துள்ளேன்.

Recipe Source : Cook Like Priya

தே.பொருட்கள்

வாழைக்காய் -3 நடுத்தர அளவு
மஞ்சள்தூள் -1/2 டீஸ்பூன்
பொட்டுக்கடலை மாவு -1/4 கப்
உப்பு -தேவைக்கு
எண்ணெய் -பொரிக்க‌

எண்ணெயில் வதக்கி அரைக்க‌

எண்ணெய் -1 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் -10
பச்சை மிளகாய்- 2
காய்ந்த மிளகாய்- 2
சோம்பு- 1 டீஸ்பூன்
கசகசா -1 டீஸ்பூன்
தேங்காய்த் துறுவல் -2 டேபிள்ஸ்பூன்
இஞ்சி -1 சிறுதுண்டு
பூண்டுப்பல்- 4
கறிவேப்பிலை -1 கொத்து
பட்டை -சிறுதுண்டு
கிராம்பு -2


செய்முறை
*1 வாழைக்காயை 4ஆக நறுக்கி மஞ்சள்தூள் +முழ்குமளவு நீர் சேர்த்து வேகவைக்கவும்.

*கத்தியில் குத்தி பார்த்தால் ஒட்டாமல் வரும் போது இறக்கி ஆறியதும் தோலுரித்து மசித்துக் கொள்ளவும்.

*அரைக்க கொடுத்துள்ள பொருட்களை எண்ணெயில் வதக்கி ஆறியதும் நைசாக அரைக்கவும்.

*இதனை மசித்த வாழைக்காயுடன் சேர்த்து உப்பு+பொட்டுக்கடலை மாவு சேர்த்து பிசையவும்.

*மாவு தளர்த்தியாக இருந்தால் மேலும் பொட்டுக்கடலை மாவு சேர்த்து பிசையவும்.

*உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

பி.கு

*பொட்டுக்கடலை மாவுக்கு பதில் கடலைமாவினை வறுத்து சேர்க்கலாம்.

*பட்டை கிராம்பு சேர்ப்பது வாசனையாக இருக்கும்.
Saturday 12 July 2014 | By: Menaga Sathia

கல்மி கபாப் / Kalmi Kebab | Kalmi Kabab | Chicken Appetizer Recipes

நீண்ட நாட்களாக கல்மி கபாப் ரெசிபி தேடிட்டு இருந்தேன்.ப்ரியாவின் ரெசிபியை பார்த்ததும் உடனே செய்ததில் மிக அருமையாக இருந்தது.இதனை நான் ப்ரைட் ரைஸூடன் பரிமாறினேன்.விரும்பினால் புதினா சட்னியுன் ஸ்டார்ட்டராக பரிமாறலாம்.மிக்க நன்றி ப்ரியா!!

எப்போழுதும் கபாப் செய்வதற்கு தொடை பகுதியை பயன்படுத்தி தான் செய்ய வேண்டும்,அதுதான் கபாப்பிற்கு நல்ல சுவையைக் கொடுக்கும்.

இதனை எலுமிச்சை சாறு+உப்பு+மிளகாய்த்தூள் சேர்த்து முதலில் ஊறவைத்த பின் மர்ற தயார் செய்த மசாவுடன் ஊறவைத்து க்ரில் செய்வது மிக சுவையைக் கொடுக்கும்.

முதல் நாள் இரவே ஊறவைத்து செய்வது நன்றாக இருக்கும்.அப்படி நேரமில்லை என்றால் குறைந்தது 3 மணிநேரமாவது ஊறவிடுவது நல்லது.

Recipe Source: Cook Like Priya

ஊறவைக்கும் நேரம் : முதல்நாள் இரவு அல்லது 3 மணிநேரம்
தயாரிக்கும் நேரம் : 15 நிமிடங்கள்

தே.பொருட்கள்

சிக்கன் தொடைப்பகுதி -4
வெண்ணெய் -1/4 கப்(உருகியது)
வட்டமாக நறுக்கிய வெங்காயம் -அலங்கரிக்க‌

சிக்கனில் ஊறவைக்க -1

எலுமிச்சை சாறு  -1 1/2 டேபிள்ஸ்பூன்
வரமிளகாய்த்தூள் -1 டீஸ்பூன்
உப்பு- 3/4 டீஸ்பூன்

சிக்கனில் ஊறவைக்க- 2

கடுகு எண்ணெய் -1டேபிள்ஸ்பூன்+1 டீஸ்பூன்
தயிர் -1/4 கப்
இஞ்சி பூண்டு விழுது  -1 டேபிள்ஸ்பூன்+1 டீஸ்பூன்
கசூரி மேத்தி- 1 டேபிள்ஸ்பூன்
புதினா இலைகள்- 12
கொத்தமல்லி இலை- 2 டேபிள்ஸ்பூன்(பொடியாக நறுக்கியது)
வரமிளகாய்த்தூள் -1 டேபிள்ஸ்பூன்
தனியாத்தூள் -2 டீஸ்பூன்
காஷ்மிரி மிளகாய்த்தூள் -2 டீஸ்பூன்(கலருக்காக)
சீரகத்தூள் -3/4 டீஸ்பூன்
கரம் மசாலா -1/2 டீஸ்பூன்
உப்பு -தேவைக்கு

செய்முறை

*சிக்கனை நன்றாக கழுவி ஈரம் போக கிச்சன் பேப்பரில் துடைக்கவும்.

*சிக்கனில் ஊறவைக்க -1 ல் கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக கலந்து சிக்கனில் 10 நிமிடங்கள் ஊறவைக்கவும்.

*புதினாவை பொடியாக நறுக்கி இதனுடன் நறுக்கிய கொத்தமல்லி இலையையும் சேர்த்து ஒன்றும் பாதியாக நசுக்கிக் கொள்ளவும்.

*பின் சிக்கனில் ஊறவைக்க -2ல் கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக கலந்து முதலில் ஊறிய சிக்கனுடன் சேர்த்து கலந்து முதல் நாள் இரவே அல்லது 3 மணிநேரங்கள் ஊறவைக்கவும்.





.*பேக்கிங் டிரேயில் அலுமினியம் பேப்பர் போட்டு சிக்கனை வைக்கவும்.

*முற்சூடு செய்த அவனில் 270°C ல் 25 நிமிடங்கள் பேக் செய்யவும்.

*இடையிடையே சிக்கனை திருப்பி விடவும்.

*சிக்கன் வெந்ததும் 300°C ல் க்ரில்லிங் மோடில் 10 நிமிடம் மீண்டும் பேக் செய்து எடுக்கவும்.

*பேக் செய்த பின் வெண்ணெயை ப்ரெஷ்ஷால் வெந்த சிக்கன் மேல் தடவி விடவும்.
பி.கு

*அவரவர் அவனுக்கேற்ப டைம் மாறலாம்.

* காரத்தினை அவரவர் காரத்திற்கேற்ப சேர்க்கவும்.நான் கொஞ்சம் அதிகமாகவே சேர்த்திருக்கேன்.

*பார்ட்டியில் இதனை புதினா சட்னியுடன் பரிமாறலாம்.
Friday 11 July 2014 | By: Menaga Sathia

உப்பு உருண்டை/Uppu Urundai | Steamed Rice Balls



தே.பொருட்கள் 

புழுங்கலரிசி -1 கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் ‍ -1 சிறியது
தேங்காய்த்துறுவல் -2 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய்  =தேவைக்கு

தாளிக்க‌
கடுகு+உளுத்தம்பருப்பு  -தலா 1/2 டீஸ்பூன்
கடலைப்பருப்பு -1 டீஸ்பூன்
கறிவேப்பிலை -1 கொத்து
காய்ந்த மிளகாய் -2

செய்முறை
*அரிசியை ஊறவைத்து உப்பு சேர்த்து நைசாக கெட்டியாக அரைக்கவும்.

*நான் ஸ்டிக் கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.


*பின் அரைத்த மாவினை சேர்த்து கிளறி,ஒட்டாமல் வரும் போது தேங்காய்த்துறுவலை சேர்த்து கிளறி இறக்கவும்.

*இதனை சூடு பொறுக்கும் பதத்தில் உருண்டைகளாக பிடித்து ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.

*அப்படியே சாப்பிட நன்றாக இருக்கும்.

பி.கு
*இன்னும் சுலபமாக செய்ய அரிசியை ஊறவைத்து அரைப்பதற்கு பதில் அரிசிமாவில் செய்யலாம்.
01 09 10