Thursday 12 March 2015 | By: Menaga Sathia

கத்திரிக்காய் வத்தல் / KATHIRIKKAI VATHAL ( SUN DRIED EGGPLANT ) | SUMMER SPL


print this page PRINT IT
தே.பொருட்கள்

சிறிய கத்திரிக்காய் -5
மஞ்சள்தூள் -3/4 டீஸ்பூன்
உப்பு- 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை

*கத்திரிக்காயை கழுவி 4 ஆக நறுக்கி தண்ணீரில் போடவும்.

*பாத்திரத்தில் 3 கப் நீர்+உப்பு+மஞ்சள்தூள் சேர்த்து கொதிக்கவைக்கவும்.

*தண்ணீர் கொதிக்கும் போது நறுக்கிய கத்திரிக்காயை சேர்த்து பாதி அளவு வெந்ததும் நீரை வடிக்கட்டவும்.

*தண்ணீர் வடிந்ததும் கத்திரிக்காயை துணியில் ஈரம் போக உலர்த்தி வெயிலில் நன்கு காயவைத்து எடுக்கவும்.

*காய்ந்ததும் காற்று புகாத டப்பாவில் வைத்திருந்து பயன்படுத்தவும்.

*வற்றகுழம்பு வைத்தால் அருமையாக இருக்கும்.
* இதே போல் கொத்தவரங்காய் மற்றும் அவரைக்காயில் செய்யலாம்.

பி.கு

*காய்கள் பாதியளவு வெந்தால் போதும்.அவரைக்காய் சீக்கிரம் வெந்துவிடும் என்பதால் கொதி நீரில் போட்டதும் 1 2 நிமிடங்களிலயே எடுத்துவிடவும்.

6 பேர் ருசி பார்த்தவர்கள்:

great-secret-of-life said...

very flavourful so tempting too

Unknown said...

Super vathal akka!! Looks like flower..yum yum

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்

செய்முறை விளக்கத்துடன் அசத்தலான சமையல் பகிர்வுக்கு நன்றி

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Rani Sundar said...

மிக அருமை...கத்திரிக்காய் வற்றல் குழம்பினை சுவைத்தவர்களுக்கு அதன் ருசி புரியும்.அந்த தட்டை அப்படியே எனக்கு கொடுத்திடுங்க, மேனகா...

திண்டுக்கல் தனபாலன் said...

நன்றி...

mullaimadavan said...

Nothin can beat homemade vathal, 2 pack parcel... kudavey oru naal sun shine kuda... veyyil parthu romba naal aacchu...

01 09 10