Sunday 2 August 2015 | By: Menaga Sathia

மோரு காச்சியது / Moru Kachiyathu | Kerala Style Seasoned Buttermilk | Onam Sadya Recipes

print this page PRINT IT 
நாம் சாதரணமாக தாளித்த மோர் செய்வது போலதான்.ஆனால் சின்ன வெங்காயம் ,பூண்டு,மிளகாய்த்தூள் சேர்த்து செய்வது சுவை மிக நன்றாக இருக்கும்.
Recipe Source : Here

தே.பொருட்கள்

மோர் -3 கப்
பொடியாக அரிந்த சின்ன வெங்காயம் -5(அ)6
பொடியாக நறுக்கிய பூண்டுப்பல்- 2
பொடியாக நறுக்கிய இஞ்சி -1 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் -2
மஞ்சள்தூள்- 1/2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் -1/4 டீஸ்பூன்
உப்பு -தேவைக்கு

தாளிக்க‌
எண்ணெய்- 1 டீஸ்பூன்
கடுகு- 1/2 டீஸ்பூன்
வெந்தயம்- 1/4 டீஸ்பூன்
சீரகம் 1/4 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் 1
கறிவேப்பிலை- 1 கொத்து

செய்முறை
*மோரினை உப்பு சேர்த்து நன்கு கடைந்துக் கொள்ளவும்.

*பாத்திரத்தில் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து இஞ்சி+பூண்டு+ப.மிளகாய்+வெங்காயம் என ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும்.

*பின் மஞ்சள்தூள்+மிளகாய்த்தூள் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கியதும் மோரினை ஊற்றவும்.


*5- 7 நிமிடங்கள் கிளறி விடவும்.கொதிக்கவிட வேண்டாம்.

2 பேர் ருசி பார்த்தவர்கள்:

great-secret-of-life said...

very refreshing and tasty more :-)

Mullai Madavan said...

Romba super, I'm going to try!

01 09 10