Friday 31 March 2017 | By: Menaga Sathia

சிறு கீரை பருப்பு கடையல்/ Siru Keerai(Tropical Amaranth Leaves) Paruppu Kadaiyal | Keerai Recipes

 சிறு கீரையின் பயன்கள்
*மஞ்சள் மற்றும் சிறுகீரையை அரைத்து பற்று போடுவதால் முகப்பருவின்புள்ளிகள் மறையும்.

*சிறுநீரககோளாறு,கண்பார்வை குறைவாக  உள்ளவர்கள் இந்த கீரை சாப்பிடுவதால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

இதில் பொரியல்,கூட்டு ,பருப்பு சேர்த்து கடையல் மற்றும் புளி சேர்த்து கடையல் செய்யலாம்.

இப்போழுது இதில் பருப்பு சேர்த்து கடையல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தே.பொருட்கள்
சிறுகீரை - 1 கட்டு
வெங்காயம் -1 சிறியது
பூண்டுப்பல் -4
பச்சை மிளகாய் -2
பாசிப்பருப்பு -1/3 கப்
உப்பு-தேவைக்கு

தாளிக்க
எண்ணெய் -1 டீஸ்பூன்
வடகம் -2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய்-1

செய்முறை
*கீரையை சுத்தம் செய்து நன்கு அலசி வடிகட்டி வைக்கவும்.

 *பாத்திரத்தில் பருப்பு+நறுக்கிய வெங்காயம்+பூண்டு+பச்சை மிளகாய் சேர்த்து வேகவைக்கவும்.

*பாதியளவு பருப்பு வெந்ததும் கீரையை சேர்த்து வேகவைக்கவும்.

*கீரை வெந்ததும் கீரைகடையும் சட்டியில் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து உப்பு சேர்த்து மத்தினால் மைய கடையவும்.


*இந்த கீரையில் பருப்பு எவ்வளவு சேர்க்கிறோமோ அந்தளவு ருசியாக இருக்கும்.
Sunday 26 March 2017 | By: Menaga Sathia

வெங்காய ராய்த்தா/ Onion Raita | How To Make Perfect Onion Raita For Biryani/Pulao

 வெங்காய ராய்த்தா செய்முறை அனைவரும் அறிந்ததே..தயிர் ,வெங்காயத்துடன் ப்ரெஷ் க்ரீம் சேர்த்து செய்வது ராய்த்தா மிக நன்றாக இருக்கும்.

தே.பொருட்கள்
வெங்காயம் - 2 பெரியது
புளிப்பில்லாத தயிர் - 2 கப்
ப்ரெஷ் க்ரீம் - 1/4 கப்
உப்பு - தேவைக்கு
சர்க்கரை - 2 டீஸ்பூன்
கேரட் -1
பொடியாக நறுக்கிய கொத்தமல்லிதழை -சிறிதளவு

செய்முறை
*தயிர்,உப்பு,சர்க்கரை சேர்த்து  நன்கு கடைந்துக் கொள்ளவும்.

*கேரட்டை துருவிக் கொள்ளவும்.

*வெங்காயத்தை நீளவாக்கில் மெலிதாக நறுக்கவும்.

*அனைத்தையும் ஒன்றாக கலந்து பிரியாணி/புலாவ் உடன் பரிமாறவும்.
Thursday 23 March 2017 | By: Menaga Sathia

பச்சை கத்திரிக்காய் சென்னாகுன்னி பொரியல்/ Green Brinjal Sennakunni(Dried Baby Shrimps ) Poriyal

 சென்னாகுன்னி என்பது காய்ந்த இறால்,இதனை கத்திரிக்காயுடன் சேர்த்து பொரியல் செய்தால் மிக நன்றாக இருக்கும்.

தே.பொருட்கள்
சென்னாகுன்னி - 1/4 கப்
பச்சை கத்திரிக்காய் -1/4 கிலோ
வெங்காயம் -1
சாம்பார் பொடி -2 டீஸ்பூன்
எண்ணெய் -1 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை -1 கொத்து
வடகம் -1 டீஸ்பூன்
உப்பு-தேவைக்கு

செய்முறை
*வெறும் கடாயில் சென்னாகுன்னியை வாசனை வரும் வரை வறுத்து சுத்தம் செய்துக் கொள்ளவும்.
 *பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி வடகம் +கறிவேப்பிலை சேர்த்து தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
*நறுக்கிய கத்திரிக்காய்,சாம்பார் பொடி,உப்பு சேர்த்து வதக்கி தேவைக்கு நீர் ஊற்றி வேகவைக்கவும்.


*கத்திரிக்காய் வெந்ததும் சுத்தம் செய்த சென்னாகுன்னியை சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.
01 09 10